Latest Updates
-
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பழங்களை நறுக்கி வெச்சுடீங்களா? கெடாமல் இருக்க சில யூஸ்ஃபுல் டிப்ஸ்....
பழங்களை வாங்கினால் அவற்றை சாப்பிடும் போது அவற்றை நறுக்கி சாப்பிடுவோம். ஆனால் அவ்வாறு நறுக்கியதை முற்றிலும் சாப்பிட முடியாத நிலையில் இருக்கும். அப்போது அவற்றை சேகரித்து வைப்போம். அவ்வாறு சேகரித்து பாதுகாப்பாக வைக்கும் போது, அந்த பழங்கள் சில சமயங்களில் வாடி, ப்ரௌன் நிறத்தில் ஆகிவிடும்.
ஆகவே அவ்வாறு ஏற்படாமல் இருக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்து, பழங்களை நீண்ட நாட்கள் வைத்து சாப்பிட்டு, ஆரோக்கியமாக இருக்கலாமா!!!.

ஆப்பிள்
பழங்களிலேயே நறுக்கியதும் சாப்பிட்டாக வேண்டும் என்று இருப்பது, ஆப்பிள் தான். அத்தகைய ஆப்பிள் நறுக்கியப் பின்னர் கெடாமல், நிறம் மாறாமல் இருக்க, சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது மற்ற வினிகரைத் தடவி, ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால், நிறம் மாறாமல் ப்ரஷ் ஆக இருக்கும். இல்லை நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்றால், எலுமிச்சை சாற்றை தடவி வைக்க வேண்டும்.

வெண்ணெய் பழம்
வெண்ணெய் பழம் என்று தமிழில் அழைக்கப்படும் அவோகேடோ பழத்தை நறுக்குவது என்பது எளிதானது. இது மிகவும் மென்மையாக இருக்கும். அவ்வாறு நறுக்கி முழுதும் சாப்பிட முடியவில்லையென்றால், அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, ஒரு டப்பாவில் போட்டு மூடி, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் இந்த பழம் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கெடாமல் இருக்கும்.

கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் நறுக்கியதும் விரைவில் ப்ரௌன் நிறத்தை அடைந்துவிடும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே கொய்யாப்பழம் நிறம் மாறாமல் இருக்க அதன் மேல் சிறிது எலுமிச்சை சாறு அல்லது நறுக்கிய பெரிய பச்சை மிளகாயை அதன் மேல் தெளிக்க வேண்டும். இதனால் நன்கு ப்ரஷ்ஷாக இருக்கும்.

பப்பாளி
நறுக்கிய பப்பாளி துண்டுகளையும் சரி, சாதாரணமான பப்பாளியையும், ஒரு சுத்தமான பேப்பரால் சுற்றி, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் பப்பாளி பழம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை நறுக்கியப் பின், அதனை ஒரு பாலிதீன் பையில் போட்டு, சுற்றி வைக்க வேண்டும். இதனால் நறுக்கிய எலுமிச்சைப் பழம் கெடாமல், சில நாட்கள் இருக்கும்.தர்பூசணி- தர்பூசணிப் பழத்தை அறுத்து சாப்பிடும் போது, அதனை முழுவதும் சாப்பிட முடியவில்லை என்றால், ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைத்தால், பழத்துண்டுகள் ப்ரஷ்ஷாக இருக்கும்.

அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தையும் தர்பூசணியைப் போல் நீண்ட நாட்கள் வைத்திருக்க, நல்ல காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைக்க வேண்டும். இதனால் பழத்தில் உள்ள ஈரப்பசை, அப்படியே இருக்கும்.



Click it and Unblock the Notifications
