Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா?
உலர்த்திய மூலிகைகளை எப்படி எளிமையாக பாதுகாப்பது?
அன்றைய காலங்களில் உடல் ஆரோக்கியத்திற்கும், எத்தகைய நோய் ஆயினும் மூலிகை மருத்துவம் ஒன்றையே மக்கள் நம்பியிருந்தனர். நம்பிய நம் முன்னோரை மூலிகை மருத்துவமும் கை விட்டதில்லை. இன்றும் நம்மில் பலர் மூலிகை மருத்துவமான பாட்டி வைத்தியத்தை கடைப்பிடிக்கிறோம். நம் உடல் ஆரோக்கியத்திற்கு மூலிகை மருந்து மிகவும் சிறந்தது. அத்தகைய மூலிகைகளை வீட்டில் உள்ள அழகான தோட்டத்திலேயே வளர்க்க முடியும். அவ்வாறு நம் வீட்டில் வளர்த்த மூலிகை செடிகளை, நாமே உலர்த்தி நமக்கு தேவையான வைத்தியத்தை செய்து கொள்ளலாம். மூலிகைகளை பாதுகாப்பது என்பது மிகவும் எளிது. அதிலும் தொங்க வைத்தல், உறைய வைத்தல், ஊற வைத்தல் போன்ற எளிய முறைகளால் மூலிகைகளை பாதுகாக்கலாம். சரி, அவை எப்படியென்று பார்ப்போமா!!!
மூலிகைகளை எப்படி வெட்ட வேண்டும்?
முதலில் தோட்டத்தில் இருக்கும் மூலிகைச் செடிகளை அறுவடை செய்ய வேண்டும். அதற்கு சரியான கத்தரிக்கோலால் அல்லது ஒரு சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை உபயோகித்து மூலிகைகளை துண்டு துண்டாக வெட்ட வேண்டும். சில மூலிகைகள் குளிர்காலத்திலும் வாழும் (அதாவது அது பனிக்காலங்களிலும் வற்றாத திறன் கொண்டவை), அத்தகைய செடிகளில் அதன் தண்டுகளின் அடிப்பகுதியிலிருந்து வெட்ட வேண்டும். மற்ற மூலிகை செடிகளை முற்றிலும் வெளியே இழுத்து விடவும். இதனால் அதன் வேர்கள் மற்றும் மர பகுதிகளை உரமாக பயன்படுத்தலாம். உலர்த்துவதற்கான அனைத்து மூலிகைகளையும், முதலில் நீளமான தண்டுகளுடன் இலைகள் இருப்பது போன்று வெட்டவும்.
மூலிகைகள் சுத்தம் செய்யும் பொழுது மிக கவனமாக செயல்பட வேண்டும். உங்கள் மூலிகைகளின் மீது படிந்துள்ள அழுக்கை கழுவ வேண்டும் என்றால், அதனை சில பாட்டில் ஸ்ப்ரே மூலம் செய்வது சிறந்தது. பின் அதனை பேப்பர் டவலில் துடைத்து மெதுவாக உலர்த்த வேண்டும். இல்லையென்றால் அதை பாதுகாக்கும் சமயம் அதில் பூஞ்சை காளான் ஏற்பட வாய்ப்புள்ளது.

மூலிகைகளை பாதுகாப்பதற்கான எளிமையான மூன்று வழிகள்:
1. தொங்க வைத்தல்:
மூலிகைச் செடிகளின் கீழே உள்ள இலைகளை அகற்றி, பின் தண்டுகளை ஒருங்கிணைத்து இருக்கமாக அடிப்பகுதியில் கட்டவும். முக்கியமாக அவ்வாறு கட்டும் போது, ஒரு கொத்தில் 5-10 தண்டுகள் வரை கட்டுவதால், காற்றோட்டம் நிறைந்து காய்வதற்கு எளிதாக இருக்கும். பின் அந்த கொத்துகளை நன்கு உலர்ந்த, சூடான ஈரப்பதமில்லாத, நன்கு காற்றோட்டமான, ஆனால் அதிகம் நடமாட்டமில்லாத இடத்தில் கட்டவும். உங்கள் வீட்டில் இருள் சூழ்ந்த இடம் இல்லை என்றால், நீங்கள் பேப்பர் பையில் ஒவ்வொரு கொத்தையும் சுற்றி அதில் துளையிட்டு, மூலிகைகளை உலர்த்த முயற்சி செய்யலாம். இதனால் மூலிகைகள் மீது தூசிப்படாமல் இருக்கும்.
மூலிகைகள் காய்வதற்கு 1-3 வாரங்கள் விடவும். மேலும் அடிக்கடி அது எப்படி உலர்கிறது என்று பார்க்கவும். தடிமனான தண்டுடைய மூலிகைகள் உலர நேரமாகும். மூலிகையானது உலர்ந்துவிட்டதா என்று அறிய, அதன் இலைகளை இரண்டு விரல்களால் தேய்க்கும் போது, அது நொறுங்கினால் அது பதத்திற்கு வந்துவிட்டது என்று பொருள்.
பின்னர் பதத்திற்கு வந்த பிறகு, மூலிகை இலைகளை தண்டிலிருந்து நீக்கி, காற்றுப்புகாத கண்ணாடி ஜாடிகளில் அல்லது எதாவது ஒரு பாட்டிலில் சேகரிக்கவும். முக்கியமாக இலைகளை பறித்து, ஜாடியில் போடும் போது நொறுக்கிவிட வேண்டாம். இல்லையெனில் அதன் சுவை, மணம் போய்விடும். எனவே தேவைப்படும் போது மட்டும் நொறுக்கி பயன்படுத்துவது நல்லது. இத்தகைய மூலிகைகளை ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.
2. உறைய வைத்தல்:
இந்த முறையில் உறைப்பனிக்கு பொருத்தமான மூலிகைகளை தேர்ந்தெடுக்கவும். பொதுவாக இந்த முறையானது மென்மையான இலைகளான துளசிச் செடி, வோக்கோசு போன்ற மூலிகை வகைகளுக்கு பயன்படுத்தப்படும். அதற்கு இத்தகைய மூலிகைகளை பறித்தவுடனே கழுவி காய வைக்க வேண்டும். பின்னர் அந்த இலைகளை உருவி, அதை உறைய வைக்கும் குளிரூட்டப்பட்ட பைகள் அல்லது டப்பாக்களில் அவற்றை போட்டு வைக்க வேண்டும். பின் அதன் மீது லேபிள் ஒட்டி, அதனை 3 மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.
நீண்ட காலங்கள் உபயோகிக்க விரும்பினால், சூடான நீரில் ஒரு சில வினாடிகள் கொதிக்க வைத்து பின்னர் நேரடியாக குளிர்ந்த நீரில் அலசி குளிரூட்டப்பட்ட பைகள்/டப்பாக்களில் வைக்கலாம். இதனால் அவற்றை 6 மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.
3. எண்ணெயில் ஊற வைத்தல்:
மூலிகை இலைகளை மேலே சொன்னவாறு நன்கு காய வைத்து, அதனை விருப்பமான எண்ணெயில் போட்டு ஊற வைத்து பயன்படுத்தலாம். அதிலும் ஆலிவ் எண்ணெய் என்றால் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் இவ்வாறு எண்ணெயில் போட்டு வைத்தால், ஒரு அலங்காரப் பொருள் போன்றும் காட்சியளிக்கும். இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால், சமையல் ருசியாக இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக வெயில் காலத்தில், குளிர் அல்லது குளிர்சாதன பொருளில் வைப்பதன் மூலம் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
எச்சரிக்கைகள்:
* தோட்டத்தில் கெமிக்கல் பொருட்கள் உபயோகிக்க எண்ணினால், மூலிகைகளை சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
* ஈரமான நிலையில் மூலிகைகளை அறுவடை செய்வதோ அல்லது குளிர் காலத்தில் அறுவடை செய்யவோ கூடாது. அவ்வாறு செய்தால், பின் உலர்த்தும் போது கடினமாகிவிடும். அதுமட்டுமின்றி பூஞ்சைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
* மூலிகைகள் நீண்ட நாட்கள் தொங்க விடக்கூடாது. அதனால் அவற்றின் சுவை குறைந்து விடும்.



Click it and Unblock the Notifications