Latest Updates
-
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!' -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும் -
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம்
உங்க வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வரணுமா? நேரா உங்க கிச்சனில் இருக்கும் இந்த மசாலா பொருள்கிட்ட போங்க...!
How Cloves Can Improve Your Good Luck: கடவுளை வழிபடுவது முதல் சடங்குகளைக் கடைப்பிடிப்பது வரை நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறது, பெரும்பாலான மக்கள் செழிப்பையும் மகிழ்ச்சியையும் ஈர்க்க எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் உங்கள் அதிர்ஷ்டத்தை உங்களை நோக்கி அழைத்து வருவதற்கான தீர்வு உங்கள் சமையலறை அலமாரியிலேயே உள்ளது என்பது பலரும் அறியாதது. இந்த பழமையான இந்திய மசாலா பாரம்பரியமாக அதிர்ஷ்டத்தை ஈர்க்க பயன்படுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட மசாலாவின் தனித்தன்மை
கிராம்பு ஒரு அத்தியாவசிய சமையலறை மசாலா ஆகும், இது வழக்கமான இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் மிகச்சிறந்த மசாலா ஆகும். அதுமட்டுமின்றி, இந்த மசாலா பல வீட்டு வைத்தியம், மருந்துகள், பல் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் அதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்த சிறிய மசாலா உண்மையில் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும் நிதி ஸ்திரத்தன்மையை கொண்டு வரவும் உதவும். எப்படியென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
பாரம்பரியமாக கிராம்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
இந்து நம்பிக்கைகளின்படி, கிராம்பு பாரம்பரியமாக பல சடங்குகள், திருவிழாக்களில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இந்த மசாலாவைப் பயன்படுத்துவது கண் திருஷ்டியின் தீமைகளைத் தடுக்கும் மற்றும் நேர்மறையான ஒளியை அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது.
நவராத்திரியின் போது துர்கா தேவிக்கு ஒரு ஜோடி கிராம்புகளை சமர்ப்பித்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவர கிராம்பை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
கிராம்பை மெல்லுவது
ஒரு முக்கியமான கலந்துரையாடலுக்கு உட்கார்ந்திருக்கும்போது அல்லது ஒரு வணிக ஒப்பந்தத்தை முடிக்கும்போது அல்லது ஏதேனும் ஒரு நல்ல வேலைக்குச் செல்லும் போது கிராம்பை மென்று சாப்பிடுவது வெற்றியையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.
லட்சுமி தேவி வழிபாடு
லக்ஷ்மி தேவியை வழிபடும் போது, தினமும் சிவப்பு ரோஜாக்கள் மற்றும் இரண்டு கிராம்பை வைத்து வழிபட்டால் அதிர்ஷ்டம் மற்றும் பணத்தை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. இதை தினமும் பின்பற்ற முடியாத பட்சத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதைச் செய்து பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளலாம்.
தடைகள் நீங்க
வீட்டை விட்டு வெளியேறும் முன் உங்கள் வாயில் இரண்டு கிராம்புகளை போட்டு மெல்லாமல் வைத்திருப்பது அன்றாட வாழ்வின் அனைத்து தடைகளையும் நீக்கும் என்று நம்பப்படுகிறது.
கண் திருஷ்டியை நீக்க
சனிக்கிழமைகளில் மூன்று முதல் நான்கு கிராம்புகளை விளக்கெண்ணெய் தீபத்தில் ஏற்றி, வீட்டின் இருண்ட மூலைகளில் வைப்பதன் மூலம் கண் திருஷ்டியின் பாதிப்பு குறையும் மற்றும் அகற்றப்படும். இந்த பரிகாரத்தை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை நீக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
