Latest Updates
-
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம்
செடிகளுக்கு எப்படி தண்ணீர் ஊற்றலாம்?

1. முதலில் செடியின் அளவை பொறுத்தே தண்ணீரை ஊற்ற வேண்டும். செடியானது சிறிதாக இருந்தால், அதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதன் மேல் தண்ணீரைத் தெளித்தோ அல்லது அதை வைத்துள்ள இடம் ஈரமாக இருந்தாலே போதுமானது.
2. காலநிலையைப் பார்க்க வேண்டும். வெப்பம் அதிகமாக இருந்தால், செடியில் உள்ள தண்ணீரானது முற்றிலும் வற்றிவிடும். ஆகவே செடியின் வேரானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க தினமும் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதிலும் தண்ணீரானது செடியின் அளவைப் பொறுத்ததே. ஆகவே தரையானது வற்றாமல் இருக்குமளவு தணணீரானது வேண்டும்.
3. செடிக்கு தண்ணீரை காலை அல்லது மாலையிலே ஊற்ற வேண்டும். அது செடியின் உறிஞ்சும் தன்மையைப் பொறுத்தே ஊற்ற வேண்டும். காலையில் ஊற்ற வேண்டும் என்றால் அதிகாலையிலே ஊற்ற வேண்டும். ஏனெனில் செடியானது தண்ணீரை உறிஞ்ச வேண்டும். இல்லையென்றால் தண்ணீரானது சூரியனால் உறிஞ்சப்பட்டு, செடிக்கு தண்ணீர் இல்லாமல் போய்விடும். ஆகவே தண்ணீரை ஊற்ற சிறந்த நேரம் அதிகாலையில் அல்லது மாலையிலே சிறந்தது.
4. சில செடிகள் இயற்கையிலேயே நிலங்களில் இருந்து நேரடியாக தண்ணீரை உறிஞ்சி வாழும். அத்தகைய செடிகள் தண்ணீர் இல்லாமல் கூட சில நாட்கள் வாழும். ஆகவே அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றாமல், வாரத்திற்கு இருமுறை ஊற்றினாலே போதுமானது.
5. நிலத்தின் தன்மையை பார்க்க வேண்டும். தோட்டமண் அல்லது களிமண் உள்ள நிலமானது தண்ணீரை சேகரித்துக் கொண்டு, ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட நிலமே செடிகள் வளர ஏற்றது. வறண்ட நிலத்தில் செடிகளை வைத்தால், அவை செடிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, பின் இலைகள் கொஞ்ச காலத்தில் மஞ்சளாக மாறிவிடும்.
6. செடிகளை வைத்துள்ள இடத்தைப் பொறுத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். வீட்டின் வெளியே வைக்கக் கூடிய செடி என்றால், அதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுவே வீட்டின் உள்ளே வைக்கக் கூடிய செடி என்றால் அதற்கு தினமும் தண்ணீரானது ஊற்ற தேவையில்லை. மேலும் வீட்டின் உள்ளே இருக்கும் செடிகளுக்கு காலநிலையைக் பொறுத்தும் தண்ணீரை ஊற்ற வேண்டும். அதுவும் கோடைகாலம் என்றால் தினமும் ஊற்ற வேண்டும்.
இவ்வாறெல்லாம் தண்ணீர் விட்டு செடிகளைப் பராமரித்தால், செடிகள் வண்ண வண்ண மலர்களில் பூத்து குலுங்குவதோடு, செழிப்போடு நன்கு வளரும்.



Click it and Unblock the Notifications