Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வீட்டுத் தோட்டத்தை அழகாக்கும் கோடைகால மலர்கள்!

சூரியகாந்தி பூக்கள்
சூரியகாந்தி பூக்கள் சூரியனின் காதலி என்று அழைக்கப்படுவை. சூரியன் செல்லும் திசை எங்கும் திரும்பி தங்களின் நேசத்தை வெளிப்படுத்தும். மஞ்சள் நிறப் பூவில் கருமையான விதைகள் மேட்சாக அமைந்து மனதை கவரும். இதை தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம். ஆழமான குழி தோண்டி அதில் விதையை ஊன்றினால் செடிகள் வளரும். இதற்கு தினசரி தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. எளிதாக வடிகால் வசதி செய்லாம்.
செவ்வந்திப் பூக்கள்
செவ்வந்திப் பூக்கள், மஞ்சள், ஆரஞ்சு, செம்மை நிறங்களைக் கொண்டுள்ளன. கோடைப் பருவத்தில் இவை எளிதாக வளரும். சின்ன சின்ன டப்பாக்களிலும், கண்டெய்னர் மூலமும் வீட்டின் உள்புற தோட்டத்திலும் வளர்க்கலாம்.
பால்சம் பூக்கள்
பால்சம் பூக்கள் பாதை ஓரங்களில் அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகின்றன. இவை வருடாந்திர மலர்ச் செடிகள். இந்த தாவரத்தின் மலர்கள் வெள்ளை,பிங்க், ரோஸ், சிவப்பு வர்ணங்களில் சிறியதாய் பூத்திருக்கும். இவை கோடைகாலத்தின் மத்தியில் பூக்கும் என்பதால் வசந்த கால தொடக்கத்தில் இவை பயிரிடலாம்.
கிளாடியஸ் மலர்கள்
இந்த மலர்கள் நட்சத்திர வடிவத்தில் பார்க்கவே அழகாய் காணப்படும். பலவித வர்ணங்களில் இந்த பூக்கள் காணப்படும். கோடைகாலத்தில் பூக்கும் இந்த பூக்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், ப்ளூ என பல வர்ணங்களில் காணப்படும். வீட்டுத் தோட்டத்தில் இவற்றை பயிரிட்டு வளர்த்தால் கோடையின் வெம்மை கூட நம்மை தாக்காது.
கார்டீனியா மலர்கள்
அழகான நிறங்களை உடையை இலைகளையும், கிரீம் கலர் பூக்களையும் கொண்டவை கார்டீனியா பூக்கள். கோடைகாலத்தில் மாலை நேரத்தில் இவை பூத்துக்குலுங்கும். வீட்டுத்தோட்டத்தில் இந்த மலர் தாவரங்களை பயிரிட்டு வளர்க்கலாம். தோட்டம் அழகாய் மாறும்.
அதேபோல் கோடை காலத்தில் அழகூட்டும் வாடாமல்லி , ஹாலிஹாக், டேபிள் ரோஸ், கோழிக் கொண்டை போன்றவைகளையும் வளர்க்கலாம்.
இந்த கோடையில் நீங்களும் மலர்த்தோட்டம் போடுங்களேன் !



Click it and Unblock the Notifications