Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி இருக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!
வீட்டில் சாதகமான சூழ்நிலைகள் இருந்தால், அந்த வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும். மேலும் உள்ள தோட்டத்தில் உடைந்த பொருட்கள் மற்றும் இறந்த செடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. அதனால் செல்வம் பெருகும்.
நமது வீட்டின் பிரதான கதவு சகல ஐஸ்வர்யங்களுக்கும் ஆதாரமாக உள்ளது. அந்த கதவில் மஞ்சள் குங்குமம் பொட்டு ஐத்து அலங்கரிக்கவும். வீட்டின் பிரதான வாசலில் பச்சை மா இலைகள் இருந்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். கதவுகள் மற்றும் பூட்டுகளையும் சரிபார்க்கவும். கதவுகள் சத்தம் போடக்கூடாது. எண்ணெய் ஊற்றி சரிசெய்யவும்.

1. வீட்டில் அழகுக்காக பல கடிகாரங்கள் மாட்டப்படுகின்றன.. ஆனால் அது தவறு. அதுமட்டுமல்லாமல் ஓடாத கடிகாரம் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும். இதனால், கடன் பிரச்னை, சச்சரவுகள்தான் ஏற்படும்.
2. அதேபோல, துருப்பிடித்த இரும்புப் பொருட்கள், பீரோவில் கிழிந்த உடைகள் ஆகியவை வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டு வருகின்றன... எனவே பழுதுபார்க்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தொலைதூர குப்பையில் வீசுங்கள், இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
3. தேய்ந்த செருப்புகளை வீட்டில் எப்போதும் வைக்காதீர்கள். ஷூ ஸ்டாண்டில் தேவையில்லாத ஷூக்களை வைக்காதீர்கள். செருப்புகள் மஹாலக்ஷ்மியின் அங்கமாகும், அவை முறையாக அடுக்கி வைக்கப்பட வேண்டும்..
4. செருப்பை சரியான நிலையில் வைப்பதால் அதற்கேற்ப நேர்மறை ஆற்றல் வீட்டில் அதிகரிக்கிறது.
5. வீட்டில் அலங்காரத்திற்காக சிறிய மணியோசை கேட்பது போன்ற தோரணங்கள், பாசி மணிகள் ஆகியவற்றை தொங்கட விடலாம். இவை காற்றில் அசையும் போது ஏற்படும் ஒலியால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகி, பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்க துவங்கும்.
6. வீட்டில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் கல் உப்பிவை சிறிதளவு வைப்பது நல்லது. கல் உப்பிற்கு தீய சக்திகள் அல்லது எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் தன்மை உண்டு. இதனால் தீய சக்திகளால் ஏற்படம் பாதிப்புக்கள் குறைந்து வீட்டில் நல்லது நடக்க துவங்கும்.
7. வீட்டில் நாம் அதிகமாக இருக்கும் அறைகளில் சின்ன சின்ன சாமி சிலைகள், சாமி படங்கள், மற்றும் விநாயகர் உருவம் போன்ற ஆன்மிக சின்னங்களை வைப்பது நல்லது.. அதிலும் வீட்டின் வரவேற்பு அறை, படுக்கை அறை போன்றவற்றில் மாட்டி வைத்தால் பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும் என வாஸ்து சொல்லுகிறது..
8. வீட்டிற்கு வெளியில் அல்லது வீட்டில் நுழைந்த உடன் கண்ணில் படும் இடத்தில் கண்ணாடி ஒன்றை மாட்டி வைக்கலாம். இது எதிர்மறை சக்திகளை வீட்டிற்குள் அண்ட விடாது.
9. வீட்டு வாசலில் பாதைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு பொருட்களை வைப்பதும், வீட்டிற்குள் வரும் பாதையை மறைத்து வாகனங்கள் நிறுத்துவதோ கூடாது. வாசல் பகுதியை சுத்தமாக வைத்திருப்பது பாசிடிவ் எனர்ஜி வீட்டில் அதிகம் நிறைவதற்கு வழிவகுக்கும்.
10. பச்சை கற்பூரத்தை தண்ணீரில் கரைத்து வீடு முழுக்க தெளிக்க வேண்டும்.. பச்சைக் கற்பூர மணம் இருக்கும் இடங்களில் மகாலட்சுமி மற்றும் பெருமாள் நிரந்தரமாக வாசம் செய்வார்கள். பச்சை கற்பூரம், புதினா அல்லது துளசிக்கு இயற்கையாகவே தெய்வீக தன்மை உண்டு என்பதால் அவைகள் இருக்கும் இடங்களில் தீய சக்திகள் நெருங்க முடியாது.



Click it and Unblock the Notifications