Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி கட்டிலுக்கு கீழே இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்ல வீட்டு செலவு தான் அதிகரிக்கும்..
நம் அனைவரது வீட்டிலும் கட்டிலுக்கு கீழே இடம் காலியாக இருப்பதால், பல பொருட்களுக்கு கட்டிலுக்கு கீழே வைப்போம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் கட்டிலுக்கு கீழே வைக்கக்கூடாத பொருட்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் வாழும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டும். வாஸ்துப்படி இல்லாத வீட்டில் பிரச்சனைகளும், கஷ்டங்களும் தான் அதிகம் இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீட்டில் எந்த பொருள் எந்த இடத்தில் இருக்க வேண்டும், எந்த இடத்தில் இருக்கக்கூடாது என்றெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மக்கள் வாஸ்துவின் அதிகம் கவனம் செலுத்து, வாஸ்துப்படி தங்களின் வீடுகளில் உள்ள பொருட்கள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

நம் அனைவரது வீட்டிலும் கட்டிலுக்கு கீழே இடம் காலியாக இருப்பதால், பல பொருட்களுக்கு கட்டிலுக்கு கீழே வைப்போம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் கட்டிலுக்கு கீழே வைக்க வேண்டிய மற்றும் வைக்கக்கூடாத பொருட்கள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளன. அதை ஒருவர் சரியாக பின்பற்றாவிட்டால், வீட்டில் பண பிரச்சனைகளை சந்திப்பதோடு, வீட்டு உறுப்பினர்களிடையே சண்டைகளையும் சந்திக்க நேரிடும். இப்போது வாஸ்துப்படி கட்டிலுக்கு கீழே வைக்கக்கூடாத சில பொருட்கள் குறித்து காண்போம்.

துடைப்பம்
சிலரது வீடுகளில் துடைப்பமானது கட்டிலுக்கு கீழே இருக்கும். ஆனால் படுக்கைக்கு கீழே துடைப்பத்தை வைப்பது மோசமானதாக கருதப்படுகிறது. நீங்கள் இதுவரை அப்படி வைத்திருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அது உங்கள் மனதிலும், வீட்டிலும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். முக்கியமாக பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர வீட்டில் உள்ளோர் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் அதிகமாக வரும்.

இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்
வாஸ்துப்படி, ஒருவரது வீட்டில் எப்போதும் கட்டிலுக்கு அடியே இரும்பு பொருட்களையும், பிளாக்ஸ்டிக் பொருட்களையும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அந்த வீட்டில் தோஷம் ஏற்பட்டு, பண பிரச்சனையை அதிகமாக சந்திக்க நேரிடும்.

செருப்பு
வாஸ்துப்படி, செருப்புகளை படுக்கைக்கு அடியில் அல்லது தலைக்கு அருகில் வைத்துக் கொண்டு படுக்கக்கூடாது. அப்படி செய்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரவழைக்கும்.

கண்ணாடி
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கண்ணாடியை தலைக்கு பின்புறம் அல்லது படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது கணவன் மனைவிக்கு இடையே சண்டைகளை வரவழைக்கும்.

எலக்ட்ரானிக் பொருட்கள்
வாஸ்துப்படி, எலக்ட்ரானிக் பொருட்களை படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், ஒருவரது மனநலம் பாதிக்கப்படுவதோடு, தூக்க பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications