Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
நீங்க பேச்சுலரா? அப்ப உங்க அறையை அழகா வெச்சுக்க சுலபமான சில யோசனைகள்!!!
பேச்சுலர் ரூம் என்றாலே ஏதோ குப்பையும் கூளமுமாக தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லைங்க. அதை கூட சுலபமா சுத்தமா வைத்துக் கொள்ளும் வழிகள் இருக்கிறது. இந்த வழிகள் மிகவும் எளிதாகவும், உங்கள் செலவுக்குள்ளும் இருக்கும்.
பேச்சுலர் ரூம்ன்னா அலங்கோலமாகத் தான் இருக்கும் என்ற பொதுவான அபிப்ராயத்திற்கு மாறாக அதை அழகாக வைத்துக் கொள்வது ஒரு எளிதான அதே சமயம் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கும். நீங்கள் உங்கள் நண்பர்கள், ஏன் பெண் நண்பர்கள் கூட பார்த்து அசரக்கூடிய வகையில் உங்கள் பேச்சுலர் அறை அல்லது வீட்டை எளிதான வழியில் அழகாக்கி அவர்களை அசர வைக்க முடியும்.
இங்கு பேச்சுலர் அறையை மிகவும் குறைந்த செலவில் அழகாக வைத்துக் கொள்ள சில சுலபமான யோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உபயோகத்தை முடிவு செய்யுங்க
உங்கள் ரூம் அல்லது அபார்ட்மெண்டிற்கு என்ன தேவை என்பதை முடிவு செய்யுங்கள். அது ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்க வேண்டுமா அல்லது ஹாயாக ஓய்வு எடுக்கும் இடமாக இருக்க வேண்டுமா என்பதை யோசிச்சு அதன் படி செய்யுங்கள்.

விளக்குகள்
பழைய வெள்ளை மஞ்சள் பல்புகள் தற்போது ஓரம் கட்டப்பட்டுவிட்டன. டியூப் லைட்டுகளும் பழைய சமாச்சாரமாக ஆகிவிட்டன. ஆகவே பல வண்ண விளக்குகளால் அலங்கரித்து அறையில் ஒரு புதிய சூழலை உருவாக்க முயற்சி பண்ணிப் பாருங்கள். அதே சமயம் ஏதாவது ஒரு பெரிய விளக்கு அத்தியாவசியத்திற்காக உடனே போடுவது போல் வையுங்கள்.

மாத்துங்க.. தரம் உயர்த்துங்க..
பெட்ஷீட்டுகளை துவைப்பதோ அல்லது சலவைக்குப் போடுவதோ ஆண்மகனுக்கு அழகல்ல என்பது புரிகிறது. ஆனால் சில ஜோடி பெட்ஷீட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டால், சில நாட்களுக்கொருமுறை மாற்றி சலவைக்குப் போடலாம். மாற்றுவதற்கு ஒன்று மட்டுமே உள்ள நிலையில் நீங்கள் உஷாராகி சலவைக்குப் போடுவீர்கள். முக்கியமாக பெட்ஷீட் வண்ணம் சற்று அடர்த்தியானதாக (டார்க்) இருக்கட்டும். ஏனென்றால் இள வண்ணங்கள் உடனடியாக அழுக்கேருவதுடன் அபார்ட்மெண்டிற்கு ஏற்றதாக இருக்காது. இது கைத்துணிகளுக்கும், டவல்களுக்கும் கூட பொருந்தும்.

இசைக்கு இடம் கொடுங்க..
ஒரு மியூசிக் சிஸ்டம் வாங்கி வைத்துக் கொள்வது எப்போதும் நல்லது தான். நீங்கள் ஓய்வேடுக்கும் போதோ அல்லது விசேஷத்தின் போதோ ஒரு நல்ல மியூசிக் சிஸ்டம் தேவைப்படக்கூடிய ஒன்று.

கண்ணாடிப் பொருட்கள்
முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமல்ல, ஆனால் நல்ல கண்ணாடி டம்ளர்களும் தேவை தான். டிஸ்போசபிள் கப்பில் ஊற்றிக் கொடுப்பது சரி தான். ஆனால் அதுப்போன்ற கண்ணாடி டம்ளர் பார்டிக்கு தனி அழகைத் தரும்.

வேறு ஏதாவது?
அறைக்குத் தேவையான திரைச்சீலைகளை வாங்குங்கள். சில சுவர் ஓவியங்களையும் கூட வாங்கலாம். அவை உண்மையானவைகளாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. குப்பைக் கூடையை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். ஒரு புத்தக அலமாரியை வைப்பதும் நல்ல விஷயம் தான். இன்னும் சுவாரஸ்யம் உள்ளவர் என்றால், கவர்ச்சிமிகு வண்ணங்களை அறைச் சுவற்றில் பூசுங்கள். அதிலும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்கள் உகந்தவை.



Click it and Unblock the Notifications