Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்..
பர்ஃபெக்ட்டாக வீட்டை அலங்காரம் செய்ய வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
உங்கள் வீட்டை ஒழுங்காக அழகுப்படுத்தும் ஐடியாக்கள் அனைத்துமே அதிக செலவைக் கொண்டு வரும் என்று சொல்ல முடியாது. உங்களால் முடிந்த வரையில், குறைவான செலவிலும் கூட வீடுகளின் உட்பகுதிகளை அலங்காரம் செய்ய முடியும்.
அதிலும் வார இறுதி நாட்களிலோ அல்லது ஓய்வு நேரங்களிலோ கூட இந்த அலங்காரங்களை செய்து, உங்கள் வீட்டை தனித்தன்மை வாய்ந்த அழகுடைய வீடாக மாற்றிட முடியும். இங்கு வீட்டை மிகவும் கச்சிதமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிறிய வீட்டையும் பெரியதாக காட்சியளிக்க சில டிப்ஸ்...

ஃபர்னிச்சர்களை மாற்றி வைத்தல்
உங்கள் வீட்டு உபயோக பொருட்களை (ஃபர்னிச்சர்களை) சுவற்றிலிருந்து விலக்கி வையுங்கள். வித்தியாசமான கோணங்களில் அவற்றை நிறுத்தி வையுங்கள். குறுகலான ஹாலில், குறுக்குவெட்டாக சோபாவை வைத்தால், அந்த அறை பெரிய, கதகதப்பான வரவேற்பறையாக இருக்கும்.

சுவருக்கு வண்ணம்
உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தை, சுவற்றில் அடிப்பது அழகைக் கூட்டும். அந்த சுவற்றில், ஆர்வம் தரக்கூடிய கலைப் பொருட்களையோ அல்லது அற்புதமான அழகிய ஃபர்னிச்சரையோ வைத்து அழகு பாருங்கள்.

பசுமை
பசுமை என்றும் உங்களுடைய அறைக்கு புத்துணர்வு மிக்க காற்றைக் கொண்டு வரும். உங்களிடம் பசுமைக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தால், சில்க் செடிகள் மற்றும் மரங்களை முயற்சி செய்து பாருங்கள். இவற்றின் தரம் மிகவும் சிறந்ததாக இருப்பதால், உண்மையான மரங்கள், செடிகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

தூக்கலான வண்ணம்
பளிச்சென்று இருக்கும் வண்ணங்கள் மற்றும் சிறந்த லைட்டிங் ஆகிய இரண்டும் சேர்த்து உங்கள் இல்லத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.

வெளிச்சம்
வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பும் போது, இயற்கையான வெளிச்சம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக வீட்டுக்குள் வர வைக்க முடியோமோ, அந்த அளவிற்கு வரச் செய்ய வேண்டும். மிகவும் வெளிச்சாமாக இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும்.

டிரெஸ்-அப்
உங்கள் வீட்டிலுள்ள மோல்டிங்குகள், துணிகள், மேலும் பெயிண்ட் ஆகியவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால், அவை உங்களுடைய கதவுகள் மற்றும் ஜன்னல்களில் மாயாஜாலத்தை உருவாக்கும். இவற்றை மரம் அல்லது சிந்தடிக் வகைகளாக உங்கள் வீட்டின் உபயோகத்தில் பயன்படுத்த முடியும்.

படங்கள் அல்லது கண்ணாடியை தொங்க விடுதல்
உங்களுடைய பர்சனாலிட்டியை பிரதிபலிக்கக் கூடிய படங்களை மாட்டி வையுங்கள். சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டு ஃபிரேம்களை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். குண்ணாடிகளைத் தொங்க விடும் போது, அவை நன்றாக பிரதிபலிக்கக் கூடிய மற்றும் சிறந்த கலையுணர்வை ஏற்படுத்தக் கூடிய கோணங்ளில் மாட்டி வைக்கவும்.

இரைச்சல் வேண்டாம்
இரைச்சல் எப்பொழுதுமே உங்களுக்கு எதிராக வேலை செய்யும். சாதாரண அல்லது புத்தக அலமாரிகளில் செங்குத்தாக இடங்களை அமைப்பதன் மூலம் இரைச்சலை பெருமளவு குறைத்திட முடியும்.

விரிப்புகள்
உரையாடக் கூடிய இடங்களில் கம்பளங்களை விரித்திருப்பது இரம்மியமான காட்சியாக இருக்கும். உங்களுடைய அறைக்கு ஏற்றவாறான ஒரு கம்பளத்தை முயற்சி செய்யுங்கள். நீங்கள் காபி குடிக்கும் மேஜைக்கு அடியில் இந்த விரிப்புகளை போடுங்கள்.

விளக்குகளை மாற்றுதல்
உங்களுடைய வீடு இன்னமும் மாற்றம் பெறவில்லை என்பதைக் காட்டும் ஒரு அறிகுறியாக விளக்குகள் உள்ளன. எனவே, புதிய, அழகான விளக்குகளை வாங்கி மாற்றுங்கள்.

அலங்காரமான போர்வைகள்
அலங்கார போர்வைகள் நம் வீட்டின் அமைப்பiயும், வடிவத்தையும் எளிதில் மாற்றி விடக் கூடிய திறன் கொண்டவையாகும். மேலும், இவை சோஃபா மற்றும் சேர்களின் தோற்றத்தையும் கூட சிறப்பான வகையில் அழகு பெறச் செய்து, முதன்மைப்படுத்திக் காட்டும் திறன் கொண்டவையாகவும் உள்ளன.

மெழுகுவர்த்தி/மெழுகுவர்த்தி தாங்கி
இது எப்பொழுதும் வெற்றி தரும் வழிமுறையாகும். உங்களிடம் ஏதாவது அலங்காரமான, ஆர்வம் தரக்கூடிய மெழுகுவர்த்தி தாங்கிகள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தவும். குறைந்த பட்சம் 2 மெழுகுவர்த்தி ஹோல்டர்களையாவது பயன்படுத்துங்கள்.

சிலைகள்
கண்ணைக் கவரும் சிலைகளை வீட்டில் அழகாக வைத்திருப்பது, நீங்கள் இருக்கும் இடத்தை அற்புதமான அழகு பெற வைக்கும்.

புத்தகங்கள்
கடின அட்டைகள் கொண்ட ஆர்வம் தரக்கூடிய மற்றும் உங்கள் வீட்டின் வண்ணத்திற்கு ஏற்றவாறாகவும் உள்ள சில புத்தகங்களை காட்சிக்கு வைக்கலாம். அந்த புத்தகங்கள் பெரிய அளவினதாக இருக்க வேண்டும், மெல்லியதாக இருக்கத் தேவையில்லை.

மண்பாண்டங்கள்
களிமண்ணால் செய்யப்பட்ட, சுட்ட மண்பாண்டங்கள் உங்கள் வீட்டின் உட்புறத்தின் அழகை மேம்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.



Click it and Unblock the Notifications