Latest Updates
-
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
உங்க வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியலையா? இந்த ஈஸியான வழிகள் எலிகளை நிரந்தரமாக விரட்டுமாம்...
கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் அனைவரும் தங்கள் வீட்டில் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை என்றால் அது எலித்தொல்லைதான். எலிகள் துணி மற்றும் உணவுப்பொருட்களை வீணாக்குவதுடன் பல ஆரோக்கியப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. எலிகள் இருக்கும் வீடுகளில் யாருமே நிம்மதியாக இருக்க முடியாது.
எலிப்பொறி, எலிமருந்து என எலிகளை விரட்ட பல நிவாரணிகள் இருந்தாலும் எலித்தொல்லையை முழுதாக விரட்ட இதுவரை எந்த மருந்தும் கண்டறியப்படவில்லை. வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்தே உங்கள் இல்லத்தை எலித்தொல்லை இல்லாத வீடாக மாற்றலாம். எலியை உங்கள் வீட்டை விட்டு விரட்டும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பெப்பர்மிண்ட் எண்ணெய்
புதினா வாசனை எலிகளுக்கு அறவே பிடிக்காது. நீங்கள் பருத்தித் துணியில் சிறிது பெப்பர்மிண்ட் எண்ணெயை தெளித்து, அதனை வீட்டின் நுழைவு வாயில் மற்றும் பிற மூலைகளில் வைக்கலாம். எலிகள் பெரும்பாலும் மூலைகளில்தான் வசிக்கும். இதனைத் தடுக்க சில நாட்களுக்கு இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும் இதனால் உங்கள் வீடும் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
உருளைக்கிழங்கு
எலிகள் அடிக்கடி வரக்கூடும் என்று நீங்கள் நினைக்கும் எல்லா இடங்களிலும் உருளைக்கிழங்கு பொடியைத் தெளிக்கவும். எலிகள் இந்த பொடியை உண்ணும், ஆனால் உருளைக்கிழங்கு செதில்கள் எலிகளின் குடலில் வீங்கி, இறுதியில் அவற்றைக் கொன்றுவிடும்.
வெங்காயம்
வெங்காயத்தின் கடுமையான வாசனை நமக்கு மட்டுமல்ல, எலிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இந்த வீட்டு வைத்தியத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் வெங்காயம் விரைவில் அழுகும் மற்றும் இது வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். இரண்டு நாளுக்கு ஒருமுறை வெங்காயத்தை மாற்ற வேண்டும்.
கோகோ பவுடர் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கலவை
உலர்ந்த பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பவுடருடன் கோகோ அல்லது சாக்லேட் பவுடர் கலந்து எலிகள் இருக்கும் இடத்தில் அடிக்கடி பரப்ப வேண்டும். எலிகள் கலவையை சாப்பிட்டவுடன், அவை உங்கள் வீட்டை விட்டு வெளியேறி அதிகளவு தண்ணீர் குடித்து இறந்துவிடும்.
மிளகாய் விதைகள்
உங்கள் வீட்டில் எலிகள் மற்றும் பூச்சிகளை விராட் வெளியேற்ற இது மிகவும் விலைகுறைவான வழியாகும். மிளகாய் விதைகளை தூவுதல் என்பது விலங்குகளை தாவரங்களிலிருந்து விலக்கி வைப்பதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழியாகும். நுழைவாயில் மற்றும் வீட்டின் பிற மூலைகளிலும் மிளகாய் விதைகள் தூவுவது எலிகளை நுழையாமல் தடுக்கும்.
பூண்டு
நறுக்கிய பூண்டை தண்ணீரில் கலப்பதன் மூலம் நீங்களே சொந்தமாக எலிமருந்தை தயாரிக்கலாம். இந்த கலவையை வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளிக்கவும்.
கிராம்பு
எலிகளுக்கு கிராம்பு சுத்தமாக பிடிக்காது. ஒரு துணியில் சிறிதளவு கிராம்புகளை போட்டு கட்டி எலி வரும் இடங்களுக்கு அருகில் வைக்கவும். இதற்குப் பதிலாக கிராம்பு எண்ணெயையும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications

