Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
இலவங்கப்பட்டையை சமையல் தவிர இந்த அற்புத நன்மைகளை பெறவும் யூஸ் பண்ணலாமாம் தெரியுமா?
சமையலில் பயன்படுத்துவதற்காக பெரும்பாலான சமையலறை அலமாரிகளில் இலவங்கப்பட்டை உள்ளது. ஆனால் இலவங்கப்பட்டை என்பது வெறும் சமையலுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இலவங்கப்பட்டை மேற்கத்திய சமையலில் மிகவும் விரும்பப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும், இது இனிப்புகள், கறிகள் மற்றும் பானங்களில் சேர்க்கப்படலாம்.
இருப்பினும், இலவங்கப்பட்டையின் பயன்பாடு சமையலுக்கு மட்டும் உரித்ததானதல்ல, மேலும் இது பல்வேறு விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். இந்த நறுமண மசாலாவைப் பயன்படுத்துவதற்கான பிற மாற்று வழிகள் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வீட்டை நல்ல வாசனையாக மாற்றுங்கள்
இலவங்கப்பட்டை வீட்டில், குறிப்பாக சமையலறையில் எந்த வகையான வாசனையையும் போக்க பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் சில இலவங்கப்பட்டை குச்சிகள், இரண்டு புதிய ஆரஞ்சு துண்டுகள் மற்றும் ஒரு சில கிரான்பெர்ரிகளை சேர்க்கவும். இந்த மசாலாப் பொருட்களின் நறுமணம் உங்கள் வீட்டை இனிமையான வாசனையால் நிரப்பும்.
கொசுக்கடியை குணப்படுத்தும்
கொசு கடித்த பிறகு ஏற்படும் எரிச்சலைத் தணிக்க இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த கலவையை தயார் செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால் அரிப்பு உணர்வு உடனடியாக நீங்கும்.
அந்துப்பூச்சிகளை விரட்ட உதவும்
உலர்ந்த துணி பையில் சில இலவங்கப்பட்டை குச்சிகள், லாவெண்டர் மற்றும் ரோஸ்மேரி சேர்க்கவும். அந்துப்பூச்சிகள் உங்கள் துணிகளை உண்ணாமல் இருக்க இந்த பையை டிராயரில் வைக்கவும்.
வாசனை மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்
மணமற்ற மெழுகுவர்த்தியின் ஒரு துண்டை சில இலவங்கப்பட்டை குச்சிகளால் அனைத்து பக்கங்களிலும் மூடுவதன் மூலம் மணம் கொண்ட மெழுகுவர்த்தியை உருவாக்கலாம். மெழுகுவர்த்தியை ஏற்றியவுடன், சூடான மெழுகு இலவங்கப்பட்டை குச்சிகளையும் சூடாக்கி அறையை மணம் மிக்கதாக மாற்றும்.
எறும்புகளை விரட்ட உதவும்
எறும்புகளை உங்கள் வீட்டில் இருந்து விலக்கி வைக்க இந்த இயற்கை வழியை பயன்படுத்தலாம். எறும்புகள் இலவங்கப்பட்டையை வெறுக்கின்றன, உங்கள் வீட்டில் எறும்புகள் அதிகம் உலவும் பகுதிளில் இலவங்கப்பட்டை எண்ணெயை தெளிப்பதன் மூலம், கடுமையான இரசாயனங்கள் மற்றும் ஸ்ப்ரேகளைப் பயன்படுத்தாமலேயே எறும்புகளை விரட்டலாம்.
பாத்திரத்தின் வாசனையை விரட்ட உதவும்
அசைவ உணவுகள் சமைத்தப் பிறகு பாத்திரங்களில் கடுமையான வாசனை இருக்கும். அதனை கழுவினாலும் அந்த வாசனை உடனடியாக போகாது. இந்த சூழலில் இலவங்கப்பட்டை உங்களுக்கு உதவும். சிறிது இலவங்கப்பட்டைப் பொடியை அந்த பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி உயர் வெப்பநிலையில் கொதிக்க விடவும். இதனால் அதிலிருக்கும் விடாப்பிடியான வாசனை நீங்கும்.



Click it and Unblock the Notifications

