கோடையில் உங்க வீட்டை குளுகுளு-ன்னு வெச்சுக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

How to Keep Your Home Cool in Summer In Tamil: தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகிக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலால் வீட்டிற்குள் கூட இருக்க முடியாத அளவில் அனல் காற்று வீசுகிறது. பகல் வேளையில் கூட எப்படியோ சமாளித்து விடலாம் போல, ஆனால் இரவு நேரத்தில் வீட்டிற்குள் தூங்க முடியாத அளவில் புழுக்கம் அதிகமாக இருக்கும்.

5 Tips to Keep Your Home Cool Without AC During Summer

வீட்டில் ஏசி இருப்பவர்களுக்கு இந்த புழுக்கம் தெரியாது. ஆனால் ஏசி இல்லாத வீட்டில் இருப்பவர்களின் நிலை படுமோசமாக இருக்கும். நிறைய பேர் இந்த அனல் காற்றினால் சந்திக்கும் புழுக்கத்தில் இருந்து விடுபடவே, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ஒரு ஏசி வாங்கி விட வேண்டும் என்று வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் ஏசியை மட்டும் எவ்வளவு நேரம் தான் ஓட்ட முடியும். அப்படியே நாள் முழுவதும் ஓட்டினாலும் கரண்ட் பில் தாறுமாறாக எகிறிவிடும். அதுமட்டுமல்லாமல் ஏசியில் நீண்ட நேரம் இருந்தால், உடல் ஆரோக்கியம் தான் பாழாகும்.

இந்நிலையில் ஏசியை அதிகம் பயன்படுத்தாமல், வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நமது பழைய பாரம்பரிய முறைகள் பெரிதும் உதவி புரியும். அதை தெரிந்து வைத்துக் கொண்டால், கோடையிலும் வீட்டை விலை மலிவில் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இப்போது கோடையில் வீட்டை குளுகுளுவென்று வைத்துக் கொள்ள உதவும் சில வழிகளைக் காண்போம்.

5 Tips to Keep Your Home Cool Without AC During Summer

1. ஈரமான திரைச்சீலை

வெயில் காலத்தில் வீட்டினுள் உள்ள அனல் காற்று வெளியே சென்று, வீட்டிற்குள் காற்று வரட்டும் என்று பலர் ஜன்னல் திரைச்சீலைகளை நீக்கிவிட்டு திறந்து வைப்பார்கள். இப்படி வெறுமனே ஜன்னலை மட்டும் திறந்து வைத்தால், வீட்டிற்குள் அனல் காற்று தான் அதிகரிக்கும். ஆனால் ஜன்னலில் நீரில் நனைத்து பிழிந்த காட்டன் திரைச்சீலையை தொங்கவிட்டால், வெளியில் இருந்து வீசும் அனல் காற்று, வீட்டிற்குள் ஜில்லென்று குளிர்காற்றாக வீசும். அதுவும் ஐஸ்நீரில் நனைத்த திரைச்சீலையை தொங்கவிட்டால், இன்னும் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.

அதுவும் உங்கள் வீட்டில் பால்கனி இருந்தால், அங்கு வெட்டி வேரில் கிடைக்கும் பாயை தொங்க விட்டு அதை நனைப்பதன் மூலமும் குளிர்ச்சியான காற்றினைப் பெறலாம். அதேபோல் பால்கனியில் துணியை தொங்கவிட்டு அதை அவ்வப்போது ஈரமாக்க வேண்டும். இதனாலும் வீட்டுக்குள் வரும் அனல் காற்று ஈரத் துணிகள் மூலம் குளிர்ச்சியாக மாறி விடும்.

Take a Poll

2. மின்சாரத்தை வீண் செய்யாதீர்

கொளுத்தும் கோடைக்காலத்தில் வீட்டில் பகல் நேரத்தில் தேவையில்லாமல் லைட், டிவி போடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் வீட்டிற்குள் வெப்பத்தின் அளவு தான் அதிகரிக்கும். மேலும் மின்சார பலகையில் சார்ஜர் ப்ளக் மாட்டி, அதை பயன்படுத்தாமல் வெறுமனே ஆன் செய்து இருந்தால், அதனையும் அணைத்துவிட வேண்டும். ஏனெனில் இவையெல்லாம் ஒருவகையில் வீட்டினுள் வெப்பத்தை அதிகரிக்கும்.

5 Tips to Keep Your Home Cool Without AC During Summer

3. மொட்டை மாடியில் நீரை ஊற்றவும்

உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அனல் இறங்குவதைத் தவிர்க்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை நீரை ஊற்றுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் சணல் பை இருந்தால் அவற்றை விரித்துவிட்டு, அதன் மேல் நீரை ஊற்றுங்கள். இதனால் வெப்பம் இறங்குவது தடுக்கப்படும். மேலும் தென்னை ஓலை, பனை ஓலை போன்றவை கிடைத்தாலும் அவற்றை மொட்டை மாடியில் விரித்து போடுங்கள். இதன் மூலம் வெப்பம் நேரடியாக இறங்குவது தடுக்கப்படும்.

உங்களிடம் பணம் இருந்தால், மொட்டை மாடியின் தரையில் வெப்பம் தரையில் இறங்காதவாறான வெள்ளை நிற பெயிண்ட்டை வாங்கி ஒருமுறை அடித்துவிடுங்கள். இதுவும் வீட்டில் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.

4. வீட்டிற்குள் செடிகளை வளர்க்கவும்

வீட்டிற்குள் அலங்கார செடிகளை வாங்கி வைப்பதனால், வீட்டின் அழகு மேம்படுவதோடு, வீட்டினுள் உள்ள காற்று சுத்திகரிக்கப்படுவது மட்டுமின்றி, வீட்டினுள் உள்ள வெப்பநிலையையும் குறைக்கும். அதற்கு இந்த செடிகளை ஜன்னல் அருகில் அல்லது பால்கனியில் வைக்கலாம். செலவு அதிகம் செய்யாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நினைத்தால், இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்.

5 Tips to Keep Your Home Cool Without AC During Summer

5. வீட்டை துடைக்கவும்

வீடு குளிர்ச்சியாக இருக்க வேண்டுமானால், ஒரு நாளைக்கு இரண்டு முறை வீட்டை துடையுங்கள். மேலும் இரவு நேரத்தில் அதிக புழுக்கமாக இருந்தால், டேபிள் ஃபேனுக்கு அருகில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நீரை நிரப்பி, சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு வையுங்கள். இதனால் டேபிள் ஃபேனில் இருந்து வரும் காற்று ஜில்லென்று இருக்கும். அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் ஜன்னலை திறந்து வையுங்கள். இதனால் வீட்டினுள் காற்றோட்டம் அதிகரித்து, வீடு குளிர்ச்சியுடன் இருக்கும்.

நண்பர்களே! உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள எந்த வழிகளை பின்பற்றுகிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, April 17, 2026, 17:59 [IST]
Desktop Bottom Promotion