Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
ஹலாசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் இதை செய்யக்கூடாது?
Halasana Yoga Benefits: அதிகாலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்தால், அந்நாள் முழுவதும் உடலும், மனமும் ரிலாக்ஸாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். அதுவும் யோகாசனங்களை செய்தால், உடல் நன்கு ஃபிட்டாக இருப்பதோடு, மன அழுத்தங்கள் குறைந்து, செய்யும் செயல்களை முழு ஈடுபாட்டுடன் செய்யலாம். நாம் தினமும் ஒரு யோகாசனம் குறித்து காண்கிறோம். இன்று நாம் காணவிருப்பது ஹலாசனம் குறித்து தான்.
யோகாசனங்களில் ஹலாசனம் சற்று கடினமான, அதே சமயம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய ஆசனமாகும். இந்த ஆசனம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக இது அடிவயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இந்த ஆசனம் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் சமமான அளவில் நன்மைகளை வழங்குகிறது. முக்கியமாக இந்த ஆசனம் அடிவயிறு மற்றும் முதுகு தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.

இப்போது ஹலாசனம் செய்வது எப்படி, அதன் நன்மைகள் என்னென்ன, இந்த ஆசனத்தை முதன்முதலாக செய்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டியவைகள் மற்றும் யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்பன குறித்து காண்போம்.
ஹலாசனம் செய்முறை
* முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்த படி, இரண்டு கால்களையும் ஒன்றாக மேலே உயர்த்த வேண்டும்.
* இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வைத்திருக்க வேண்டும்.
* பின் கால்களை மெதுவாக தலைக்கு மேல் உயர்த்து, முதுகை வளைத்து பாதங்களை தலைக்கு பின்புறத்தில் உள்ள தரையைத் தொட முயற்சிக்க வேண்டும்.
* இந்நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிட வேண்டும்.
* பின்பு மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* இந்த ஆசனத்தை 3-5 முறை செய்யலாம்.
முதலில் ஹலாசனம் செய்பவர்களுக்கான சில டிப்ஸ்:
நீங்கள் முதன்முதலாக ஹலாசனம் செய்பவராயின், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:
* இந்த ஆசனத்தை காலை அல்லது மாலை என எந்த வேளையிலும் செய்யலாம். ஆனால் இந்த ஆசனத்தை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
* இந்த ஆசனத்தை நிபுணரின் மேற்பார்வையில் மட்டுமே முதன்முதலாக செய்பவர்கள் செய்ய வேண்டும்.
* இந்த ஆசனம் செய்வதாக இருந்தால், அதுவும் உணவு உண்ட பின் செய்வதாக இருந்தால், குறைந்தது 5-6 மணிநேரம் கழித்து தான் செய்ய வேண்டும்.
* முக்கியமாக இந்த ஆசனம் செய்யும் போது, எடையை தோள்பட்டையில் தான் சுமக்க வேண்டுமே தவிர, கழுத்தில் அல்ல.
ஹலாசனம் செய்வதால் பெறும் நன்மைகள்
* ஹலாசனம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
* தைராய்டு பிரச்சனைகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
* தூக்கமின்மை பிரச்சனையைப் போக்கும்.
* எடை இழப்பிற்கு உதவும்.
* உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.
* தலைவலி பிரச்சனையைக் குறைக்கும்.
* நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* தொப்பையைக் குறைக்க உதவி புரியும்.
யாரெல்லாம் ஹலாசனம் செய்யக்கூடாது?
* மூட்டு லவி, சியாட்டிகா, கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. இது தவிர, உயர் இரத்த அழுத்த நோயாளிகள், முதுகு வலியைக் கொண்டவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
* மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. கர்ப்பிணிகளும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
* வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இந்த ஆசுனத்தை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
* ஆஸ்துமா அல்லது பிற சுவாச நோய்களைக் கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
* உங்களால் பின்புறத்தில் உள்ள தரையைத் தொட முடியாவிட்டால், இந்த ஆசனத்தை செய்யாதீர்கள் அல்லது நிபுணரின் மேற்பார்வையில் செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications