Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
World Mental Health Day 2025: மன ஆரோக்கியத்தை மேம்படுத்தணுமா? இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
World Mental Health Day 2025: மனிதன் இவ்வுலகில் நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், அதற்கு உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதில் உடல் ஆரோக்கியமாக இருக்க எப்படி உடற்பயிற்சிகளும், உணவுகளும் உதவி புரிகிறதோ, அதேப் போல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உணவுகளும், உடற்பயிற்சிகளும் உதவி புரிகின்றன.
குறிப்பாக நாம் உண்ணும் உணவுகள் நமது மன ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எப்படி உடல் எடையைக் குறைக்க பலர் டயட்டுகளை மேற்கொள்கிறார்களோ, அதேப் போல் மூளையின் செயல்பாடு, அறிவாற்றல் பிரச்சனைகள் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியமான உணவுகள் நிறைந்த டயட்டை மேற்கொள்ளலாம். இப்படி மேற்கொள்ளும் போது அந்த உணவுகளில் உள்ள வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள் போன்றவை மூளைக்கு நன்மை விளைவித்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் மனநல பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல விழிப்புணர்வுகள் ஆங்காங்கு நடத்தப்படும். இப்போது நாம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருவர் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
சால்மன் மீன்
மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் மன அழுத்த அறிகுறிகள் மற்றும் பிற மனநல பிரச்சனைகளைக் குறைக்கவும், நிறைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதுவும் மீன்களில் சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. அதோடு வைட்டமின் டியும் கொண்டுள்ளன. இந்த மீனை அடிக்கடி வாங்கி சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் குறைந்து, மனம் ரிலாக்ஸாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சிக்கன்
சிக்கனில் ட்ரிப்டோபேன் உள்ளது. இந்த ட்ரிப்டோபேன் செரடோனின் உற்பத்திக்கு உதவி புரிந்து, மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சிக்கனில் மூளையின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய பி வைட்டமின்கள் மற்றும் மக்னீசியம் அதிகளவில் உள்ளன. எனவே மனஆரோக்கியத்திற்கு சிக்கனையும் அவ்வப்போது சாப்பிடுங்கள்.
முழு தானியங்கள்
முழு தானிய வகையைச் சேர்ந்த ஓட்ஸ், கவுனி அரிசி, சோயா போன்றவற்றில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை க்ளுக்கோஸ் உற்பத்தியை மெதுவாக ஊக்குவித்து, உடலுக்கு ஆற்றலை நிலையாக வழங்குகிறது. ஆனால் பலர் சிம்பிளான கார்போஹைட்ரேட்டுகளை எடுக்கின்றனர். இதன் விளைவாக பல மனநல பிரச்சனைகளுடன் தொடர்புடைய உயர் இரத்த அழுத்தத்தை சந்திக்கின்றனர். முழு தானியங்களும் டிரிப்டோபான் உறிஞ்சுதலுக்கு உதவுகின்றன. எனவே, வான்கோழி அல்லது கோழியுடன் முழு தானியங்களை உண்ணும் போது, மனச்சோர்வு, மனக்கவலை போன்ற அறிகுறிகள் குறையலாம்.
அவகேடோ
அவகேடோ பழம் மூளைக்கு மிகவும் நல்ல பழமாகும். இதில் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான நல்ல கொழுப்புக்கள் அதிகளவில் உள்ளன. இவை மூளையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் அவகேடோ பழத்தில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே உள்ளன. இது மனநிலை, அறிவாற்றல், செறிவு போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது. அதோடு இந்த பழத்தில் வைட்டமின் பி, மெக்னீசியம், வைட்டமின் சி போன்ற பல சத்துக்களும் உள்ளன.
கீரைகள்
கீரைகள் மூளைக்கு நல்லது மற்றும் மனச்சோர்வை தடுக்கவும், டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கவும், தூக்கமின்மையைத் தடுக்கவும் உதவுகின்றன. இதற்கு காரணம் கீரைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மக்னீசியம் மற்றும் பிற சத்துக்கள் தான். எனவே உங்கள் உணவில் கீரைகளை தவறாமல் சேர்த்து வாருங்கள்.
தயிர்
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், தயிரும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதற்கு அதில் உள்ள ப்ரோபயோடிக்குகள் தான் காரணம். ப்ரோபயோடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தயிரை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். முக்கியமாக தயிரில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது மூளைக்கு ஆக்ஸிஜன் செல்ல உதவுகிறது. மூளையில் ஆக்ஸிஜன் அதிகம் இருந்தால், மனநலம் சிறப்பாக இருக்கும்.
நட்ஸ்
நட்ஸ்களிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நினைத்தால், முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்ற நட்ஸ்களுடன், சியா விதைகள், பூசணி விதைகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்து வாருங்கள். முக்கியமாக பல நட்ஸ்களில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது, இது மூளைக்கு ஆக்ஸிஜனைப் பெற உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications