Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
World Health Day 2023: ஹை பிபி-யை குறைக்க உதவும் மகராசனம் - எப்படி செய்வது? அதன் நன்மைகள் என்ன?
World Health Day 2023: இன்று உலக சுகாதார தினம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 07 ஆம் தேதி ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒருவரது ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், உடல் மற்றும் மனதை ரிலாக்ஸாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள உதவும் உடற்பயிற்சியில் தினமும் ஈடுபட வேண்டும். அதுவும் யோகாசனங்களை தினமும் மேற்கொண்டு வருவது மிகவும் நல்லது.
இந்த யோகாசனங்களில் ஒன்று தான் மகராசனம். சமஸ்கிருதத்தில் மகர் என்றால் முதலை, ஆசனம் என்றால் நிலை . முதலை போன்ற நிலையில் இந்த ஆசனம் இருப்பதால், இது மகராசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் ஒரு வகையான தியான ஆசனம்.

இது ஒட்டுமொத்த உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்யும் ஆசனமும் கூட. முக்கியமாக இந்த ஆசனம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இப்போது இந்த மகராசனம் செய்வது எப்படி, அதன் நன்மைகள் என்ன என்பதைக் காண்போம்.
மகராசனம் செய்யும் முறை
* முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும்.
* இரண்டு கால்களையும் சற்று அகற்றி வைத்துக் கொள்ள வேண்டும். குதிகால்கள் இரண்டும் உள்பக்கமாகவும், கால்விரல் பகுதிகள் வெளிப்புறமாகவும் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கைகள் இரண்டையும் முகத்திற்கு முன் மடித்து, இரண்டு கைவிரல்களையும் கோர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடது கன்னத்தை கைகளின் மேல் வைத்து, கண்களை மூடி படுக்க வேண்டும்.
* இந்நிலையில் ஒட்டுமொத்த உடலும் தளர்ந்து இருக்க வேண்டும்.
எவ்வளவு நேரம் இந்நிலையில் இருக்க வேண்டும்?
மிகவும் டென்சனாக இருக்கும் போது மகராசனத்தை செய்பவர்கள், இந்த முதலை நிலையில் 2-10 நிமிடங்கள் வரை இருக்கலாம். இதனால் டென்சன் குறைந்து, மனம் ரிலாக்ஸாகும். முதன்முதலாக செய்பவர்கள் இந்த ஆசனத்தை 2-3 நிமிடங்கள் வரை செய்யலாம்.
மகராசனம் செய்வதால் பெறும் நன்மைகள்
* மகராசனம் உடலுறுப்புக்களை தளர்த்தவும், மனதை அமைதிப்படுத்தகவும் உதவுகிறது.
* தோள்பட்டை மற்றும் தண்டுவடத்திற்கு நல்ல ரிலாக்ஸை அளிக்கிறது.
* குடல்கள் சீராக இயங்கி, செரிமான பிரச்சனைகளைத் தடுக்கிறது.
* இதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் நல்ல ஓய்வை அளிக்கிறது.
* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
* தூக்கமின்மையைப் போக்குகிறது.
* மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
மகராசனம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
* மகராசனத்தை வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும்.
* மகராசனத்தை காலையில் எழுந்ததும் செய்வது நல்லது. ஒருவேளை காலை வேளையில் முடியாதவர்கள் மாலை வேளையில் செய்யலாம்.
* மகராசனம் செய்யும் போது ஒட்டுமொத்த உடலும் ரிலாக்ஸாக இருக்க வேண்டும். கடுமையான முதுகு, கழுத்து, அல்லது மூட்டு காயங்களைக் கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications