Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மது அருந்திவிட்டு செக்ஸ் வைச்சுக்கலாமா? அப்படி செஞ்சீங்கனா என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
மது அருந்துதல் என்பது உலகம் தோன்றிய காலம் முதலே கொண்டாட்டத்துடன் நெருங்கிய தொடர்புடையது. துரதிர்ஷ்டவசமாக உலகில் எவ்வவளவோ பழக்கங்கள் மாறிவிட்டாலும் இந்த பழக்கம் மட்டும் இன்றுவரை மாறாமல் உள்ளது. மது தற்காலிக மகிழ்ச்சியையும், மயக்கத்தையும் தருவதால் பலரும் அதற்கு அடிமையாக இருக்கின்றனர்.
மதுவினால் சமூகத்தில் மற்றும் தனிப்பட்ட ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்று அறிந்திருந்தாலும் யாரும் அதனை தவிர்ப்பதற்கு தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை. ஆல்கஹாலால் ஏற்படும் ஆபத்துக்களில் மிகவும் முக்கியமானது பாலியல் பிரச்சினைகள்.

மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபடுவது சிறப்பாக செயல்பட உதவும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்பது இதற்கு முற்றிலும் எதிர்மறையானது. மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபடுவது தற்காலிக மற்றும் நீண்ட கால பாலியல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். மதுவால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும் பாலியல் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களிடையே ஏற்படும் தாக்கங்கள்
பாலியல் உணர்வு குறையலாம்
மது அருந்தியவுடன் சில பெண்கள் மனரீதியாக உடலுறவில் அதிக ஆர்வம் காட்டுவார்கள், ஆனால் அதற்காக அவர்கள் உடல்ரீதியாக தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. மது பெண்களை அவர்கள் அதிக பாலுணர்வுடன் இருப்பதாக நினைக்கத் தூண்டும், ஆனால் அவர்களின் உடலோ அல்லது பிறப்புறுப்போ அதற்கு ஒத்துழைக்காது.
மது அருந்திவிட்டுதான் உடலுறவில் ஈடுபட வேண்டுமென்றால் அதனை மிதமான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் எவ்வளவு அதிகமாக குடிக்கிறார்களோ அவ்வளவு குறைவாக அவர்களின் பிறப்புறுப்பு தூண்டப்படும்.
உச்சக்கட்டம் அடைவதை கடினமாக்கும்
மதுவானது உடலியல், அறிவாற்றல் மற்றும் நடத்தை சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும், இதனால் உச்சக்கட்டம் ஏற்படுவதில் தாக்கம் ஏற்படலாம். உடலுறவிற்கு முன் மது அருந்துவது உச்சக்கட்டம் அடைவதை தாமதப்படுத்தும் மற்றும் குறைவான உச்சக்கட்டம் ஏற்படலாம். உடலுறவில் முழுமையான இன்பத்தைப் பெற மது அருந்தாமல் உறவில் ஈடுபடுவது நல்லது.
பிறப்புறுப்பை வறட்சியாக்கும்
பெண்கள் உடலுறவுக்கு தயாராகும் போது, அவர்கள் பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் உடலுறவுக்கு உங்கள் உடல் தயாராகிறது, இதனால் பிறப்புறுப்பில் சுயமாக ஈரப்பதம் ஏற்படுகிறது.
அதிகப்படியான மது இந்த உடலியல் பதில்களை நிறுத்தலாம் மற்றும் யோனி ஈரப்பதத்தில் தலையிடலாம், இதன் விளைவாக உராய்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும்.
ஆண்களிடையே ஏற்படும் தாக்கங்கள்
விறைப்புத்தன்மை பெறுவதைக் கடினமாக்கும்
ஆல்கஹால் விறைப்புத்தன்மையை பெறுவதையும் அதனை நீண்ட நேரம் பராமரிப்பதையும் கடினமாக்கும். இது தாற்காலிகமானதாக இருந்தாலும் தொடர்ச்சியான மது பழக்கம் இந்த நிலையை நிரந்தரமாக்கலாம். மது ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது, மேலும் ஆஞ்சியோடென்சின் என்ற விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் ஹார்மோனை பாதிக்கிறது.
காமஉணர்வை அதிகரிக்கலாம்
ஒன்று அல்லது இரண்டு பானங்கள் ஆண்களின் காம உணர்வை அதிகரிக்கலாம், ஆனால் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் இது உடல்ரீதியான சில சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக எடை அதிகமாக இருப்பவர்கள் குடிப்பழக்கத்தால் விறைப்புத்தன்மை பெறுவதில் அதிக சிக்கல்களை சந்திக்கலாம்.
ரிஸ்க் எடுக்கத் தூண்டும்
நீங்கள் எவ்வளவு அதிகமாக குடிக்கிறீர்களோ, அவ்வளவு அபாயகரமான உங்கள் பாலியல் செயல்பாடுகளை நீங்கள் முயற்சிப்பீர்கள். பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், மது போதையில் இருக்கும் போது, பாதுகாப்பு இல்லாத உடலுறவு, ஆபத்தான பாலியல் நிலைகள் போன்ற ஆபத்தான பாலியல் நடத்தைகளில் ஆண்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அனுபவத்தில் குறைபாடு
மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபடும் போது அது உடலுறவு அனுபவத்தை நேரடியாக பாதிக்கும். போதையின் ஆதிக்கத்தில் இருக்கும்போது உங்களின் உடலுறவு அனுபவம் குறித்து உங்களுக்கு எந்த நியாபகமும் இருக்காது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய உடலுறவு மது அருந்திவிட்டு நடக்கும் போது அது வெறும் சம்பவமாகவே இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

