Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சப்பாத்தியில் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து சுட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமாம் தெரியுமா?
பல இந்திய வீடுகளில், குறிப்பாக வட இந்திய வீடுகளில், சப்பாத்திகளுக்கு நெய்யைப் பயன்படுத்துவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத ஒன்றாகும். தற்போது இது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. நெய் சமநிலையுடன் பயன்படுத்தப்படும் போது உங்கள் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், அதற்காக நீங்கள் நெய்யால் சப்பாத்தியை குளிப்பாட்ட வேண்டுமென்று அர்த்தமல்ல.
பெரும்பாலும், நாம் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, நம் உணவுகளில் இருந்து நெய்யை முழுவதுமாக நீக்க வேண்டுமென்று கூறப்படுகிறது, ஆனால் இது முற்றிலும் தவறானதாகும். நல்ல கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க நெய் அவசியம்.

கூடுதலாக, நெய்யில் அதிக உருகுநிலை உள்ளது, இது செல் செயல்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதைத் தடுக்கிறது. வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் என்பது பல திரை நட்சத்திரங்களின் டயட்டாக இருக்கிறது.
சப்பாத்தியில் நெய் பயன்படுத்தலாமா?
சப்பாத்தியின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்க நெய் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நாளின் பிற்பகுதியில் மற்ற கொழுப்பை உண்டாக்கும் உணவுக,ளை நீங்கள் அதிகமாக சாப்பிடாமல் இருக்க இது உங்களை முழுதாக உணர வைக்கிறது. கணிசமான நெய் சேர்க்கப்பட்ட சப்பாத்திகளைக் காலையில் சாப்பிடும் போது, நீண்ட நேரம் மென்மையாக இருக்கும்.
சமீபத்திய ஆராய்ச்சியின் படி, சுமார் 4 தேக்கரண்டி எண்ணெய் ஒரு உணவுக்கு போதுமான அளவு நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கிறது. எனவே நிறைவுற்ற கொழுப்புகள் நெய் போன்ற மூலங்களிலிருந்து பெறப்படலாம். சப்பாத்தியில் நெய் சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தை எளிதாக்குகிறது.
எண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயன்படுத்தலாமா?
சுத்திகரிப்பட்ட எண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயன்படுத்துவது நீங்கள் செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான சமையல் முறையாகும். ஏனெனில் நெய்யில் கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன, இது எடை இழப்புக்கு உதவுகிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதிலும், ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை பராமரிப்பதிலும் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. சப்பாத்தியில் நெய்யை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
எலும்புகளின் ஆரோக்கியம்
ஆரோக்கியமான சப்பாத்தியில் நெய் சேர்க்கப்படும் போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கிறது. தாதுக்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த நெய், நரம்பியல் அமைப்பு, எலும்புகள் மற்றும் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியம். இதை தினமும் அளவோடு உட்கொள்வது மூளையின் செயல்திறனுக்கு மிகவும் நல்லது மற்றும் எழும்புகளை வலிமையாக்குகிறது.
வளர்சிதை மாற்றம்
நெய் உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும், இது சுறுசுறுப்பான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது மற்றும் சப்பாத்தியில் உள்ள பசையம் மற்றும் நார்ச்சத்துகளை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நெய்யில் அதிகளவு பியூட்ரிக் அமிலங்கள் உள்ளன, இது நோயை எதிர்த்துப் போராடும் டி செல்களை உற்பத்தி செய்ய உடலை ஊக்குவிக்கிறது. முக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E, மற்றும் K ஆகியவற்றின் முக்கிய ஆதாரமாக நெய் உள்ளது. இதனால் பல நோய்களைத் தடுக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
