Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
இந்தியாவில் அதிகரிக்கும் வயிற்றுப் புற்றுநோய் - அதுக்கு உண்மையான காரணம் இதானாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!
Stomach Cancer In Tamil: இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அமைதியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
வயிற்றுப் புற்றுநோய் என்பது வயிற்றில் உள்ள செல்களில் வளரும் ஒருவகையான புற்றுநோயாகும். இது மெதுவாக பல ஆண்களாக உருவாகும். வயிற்றுப்புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. ஏனெனில் இதன் பெரும்பாலான அறிகுறிகள் சாதாரணமாகவும், தினசரி சந்திக்கக்கூடியதாகவும் இருக்கும். இதனால் இதை கவனிப்பது என்று கடினம்.

வயிற்றுப் புற்றுநோய் தீவிரமாகும் போது, அது வயிற்றுக்கு அருகில் உள்ள பிற உறுப்புகளுக்கும் பரவுகிறது. இதை கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது தொலைவில் உள்ள உறுப்புக்களையும் தாக்கி சேதப்படுத்த தொடங்கிவிடும். எனவே வயிற்றுப் புற்றுநோய் விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்போது இந்தியாவில் ஏன் வயிற்றுப் புற்றுநோய் வழக்குகள் அதிகரிக்கிறது என்பதைக் காண்போம்.
வயிற்றுப் புற்றுநோய் வழக்குகள் ஏன் அதிகரிக்கிறது?
இந்தியாவில் வயிற்றுப் புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிகப்படியான மன அழுத்தம், மரபணுக்கள் மற்றும் அதிகப்படியான ஜங்க் உணவுகளை உண்பது போன்றவை தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவிர தனித்துவமான உணவு பழக்கங்கள், மிகவும் காரமான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, மது அருந்துவது போன்றவைகளும் இந்தியாவில் வயிற்றுப் புற்றுநோயின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன எனவும் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பெரும்பாலும் வயிற்றுப் புற்றுநோயானது 50 வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்கும் மற்றும் இது 60 வயதில் தான் கண்டறியப்படுகிறது. மேலும் பெண்களை விட ஆண்களே வயிற்றுப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஆண்களின் சிகரெட் பழக்கம், மதுப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்கள் தான் முக்கிய காரணம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். உலகை எடுத்துக் கொண்டால் மிகவும் காரமான, உப்பு நிறைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் பகுதிகளில் தான் வயிற்றுப் புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள்
வயிற்றுப் புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
* தொடர்ச்சியான வயிற்று வலி அல்லது அசௌகரியம்
* பசியின்மை
* விவரிக்க முடியாத எடை இழப்பு
* விழுங்குவதில் சிரமம்
* குமட்டல்
* வாந்தி
* இரத்தம் கலந்த மலம்
வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை கண்டறிய முடியாது என்பதால் தான் அதிக ஆபத்துள்ள நபர்கள் சீரான இடைவெளியில் உடலை அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
வயிற்றுப் புற்றுநோயின் வகைகள்
வயிற்றுப் புற்றுநோயில் மூன்று வகைகள் உள்ளன. அவை அடினோகார்சினோமா, லிம்போமா, இரைப்பை குடல் ஸ்ட்ரோமல் கட்டிகள் (GISTs). துரதிர்ஷ்டவசமாக, வயிற்றுப் புற்றுநோயை பெரும்பாலும் முற்றிய நிலையில் கண்டறியப்படுவதால், இது அதிக இறப்பு விகிதங்களுக்கு பங்களிக்கிறது.
உலகளவில் மற்றும் வளர்ந்த நாடுகளில், இரைப்பை புற்றுநோயின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் இது மேம்படுத்தப்பட்ட உணவு சுகாதாரம், சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு நுட்பங்களால் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் சில பகுதிகளில் இந்த சரிவு காணப்படவில்லை. இதற்கு காரணம் உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள வேறுபாடு, சிகரெட் மற்றும் ஆல்கஹால் பயன்பாடு போன்றவை தான் காரணம் .
வயிற்றுப் புற்றுநோயை தடுப்பது எப்படி?
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, ஆரோக்கியமான உணவுகளை உண்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதன் மூலம் வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுவும் நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதுவும் பரம்பரையில் புற்றுநோயை யாரேனும் கொண்டிருந்தால், அவர்கள் கட்டாயம் இவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
