Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
கற்பூரம் ஏன் இனிப்புகள் மற்றும் உணவுகளில் சேர்க்கப்படுகிறது? இதனை உட்கொள்வது பாதுகாப்பானதா?
இந்தியாவின் அனைத்து வீடுகளிலும், கோவில்களிலும் அவசியம் இருக்கும் ஒரு பொருளென்றால் அது கற்பூரம்தான். கற்பூரம் பல நூற்றாண்டுகளாக அதன் வலுவான, நறுமண வாசனைக்காக அறியப்படும் ஒரு பொருளாகும். கற்பூரம் நேர்மறை ஆற்றலை வெளியிடுவதால் ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமான பொருளாகக் கருதப்படுகிறது.
ஆன்மீக நோக்கங்கள் மட்டுமின்றி பெரும்பாலும் இனிப்புகள் உட்பட பல்வேறு கலாச்சார மற்றும் சமையல்களிலும் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக தெற்காசிய உணவுகளில், புத்துணர்ச்சியூட்டும் மற்றும் மருத்துவ குணம் கொண்ட ஒரு தனித்துவமான சுவையை வழங்க கற்பூரம் இனிப்புகளில் சேர்க்கப்படுகிறது.

இருப்பினும், அதன் பாதுகாப்பு மற்றும் சமையல் பயன்பாடு பற்றி பல தீர்க்கப்படாத கேள்விகள் உள்ளன. கற்பூரம் என்றால் என்ன, அது ஏன் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அது நுகர்வுக்கு பாதுகாப்பானதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கற்பூரம் என்றால் என்ன?
கற்பூரம் என்பது தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட சின்னமோமம் கற்பூர மரத்தின் மரத்திலிருந்து பெறப்படும் இயற்கை கலவை ஆகும் அல்லது அதனை செயற்கையாகவும் உற்பத்தி செய்யலாம். கற்பூரம் ஒரு வலுவான வாசனையைக் கொண்டுள்ளது மற்றும் மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பூச்சி விரட்டி உட்பட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
கற்பூரம் அதன் தூய வடிவத்தில் இருக்கும்போது வெள்ளை படிகப் பொருளாக இருக்கிறது. ஆனால் சமையல் மற்றும் இனிப்புகளில் பயன்படுத்தப்படும் கற்பூரம் பெரும்பாலும் தூய்மையான கற்பூரம் அல்ல, ஆனால் பாதுகாப்பான நுகர்வுக்கு கவனமாக தயாரிக்கப்பட்ட மிகவும் லேசான, உணவு தர வடிவமாகும்.
இனிப்புகளில் ஏன் கற்பூரம் சேர்க்கப்படுகிறது?
பல பாரம்பரிய உணவுகளில், குறிப்பாக இந்திய மற்றும் பாகிஸ்தானிய சமையலில், இனிப்புகளின் சுவையை அதிகரிக்க கற்பூரம் சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது சேர்க்கப்படுவதற்கான காரணங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
தனித்துவமான சுவை
கற்பூரம் குளிர்ச்சி குணம் கொண்டது மற்றும் தனித்துவமான வாசனைக் கொண்டது, இது இனிப்புக்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது. இது சர்க்கரை, பால் மற்றும் நெய் போன்ற இனிப்புகளுடன் கற்பூரம் இணையும் போது, அது இனிப்புகளின் சுவையை உயர்த்தும்.
பாரம்பரியம்
இனிப்புகளில் கற்பூரத்தைப் பயன்படுத்துவது ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது, குறிப்பாக தெற்காசியாவில் இது மிகவும் முக்கியமானதாகும். பல சமூகங்களில், கற்பூரம் ஒரு சுத்திகரிப்பு மற்றும் மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது, பெரும்பாலும் ஆன்மீக சடங்குகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த மரபுகளில், கற்பூரம் தூய்மையின் அடையாளமாக நம்பப்படுகிறது மற்றும் எதிர்மறை ஆற்றலைத் தடுக்கும் என்று கருதப்படுகிறது. உணவில் கற்பூரத்தை சேர்ப்பது. குறிப்பாக பண்டிகை காலங்களில் சேர்ப்பது ஆன்மீகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
செரிமான ஆரோக்கியம்
கற்பூரம் செரிமான பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதை நிரூபிக்கும் அறிவியல் சான்றுகள் குறைவாக இருந்தாலும், செரிமானம் அடைய ஊக்குவிக்கும் உணவுகளை ஜீரணிக்க இது உதவும் என்று கருதப்படுகிறது. கற்பூரத்தின் மிதமான மருத்துவ குணங்கள் சில இனிப்புகளின் தீவிரத்தை சமன் செய்ய பயன்படுத்தப்படலாம்.
கற்பூரத்தை உணவில் சேர்ப்பது பாதுகாப்பானதா?
கற்பூரம் இனிப்புகளின் சுவையை அதிகரிக்க முடியும் என்றாலும், அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது அவசியம். உணவு வகை கற்பூரத்தை மட்டுமே சமையலில் பயன்படுத்த வேண்டும். கற்பூரமானது அதன் இயற்கையான வடிவிலோ அல்லது பெரிய அளவிலோ நுகரும் போது நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் ஒருபோதும் உட்கொள்ளக் கூடாது.
கற்பூரம் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள்
Food and Drug Administration (FDA), கற்பூரத்தை பாதுகாப்பாக உணவில் பயன்படுத்துவதற்கான நுகர்வுக்கான வழிகாட்டுதல்களை அமைத்துள்ளது. உணவில் பயன்படுத்தப்படும் கற்பூரம் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாமல் இருக்க வேண்டும், மேலும் சமையலில் அதன் பயன்பாடு பொதுவாக சிறிய அளவில் மட்டுமே இருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
