Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
காலையில் தூங்கி எழுந்ததும் கண்ணு வீக்கமா இருக்கா?
இரவு தூங்கி காலை எழும்போதே கண்களில் வீக்கம் பார்க்கலாம். திடீரென்று இவை உண்டாக என்ன காரணம். இந்த வீக்கத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
1. போதுமான தூக்கம் இல்லாத போது கண்களை சுற்றியுள்ள ரத்த நாளங்கள் விரிவடைந்து அவை திரவத்தை கசியவிடலாம், இது தோலின் கீழ் உருவாகலாம். இந்த திரவ கலவை கண்களை சுற்றியுள்ள பகுதியை வீக்கமாக தோன்ற செய்யும். தூக்கமின்மையால் வரும் வீங்கிய கண்கள் பிரச்சனையை சரி செய்ய தினசரி போதுமான அளவு தூங்க வேண்டும்..

2. சில சமயங்களில் நாம் அழும் போது கண்களை சுற்றியுள்ள பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் காணப்படும். இது அப்பகுதியில் உள்ள ரத்த நாளங்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம், இதனால் அவற்றில் கசிவு ஏற்படும். தோலுக்கு அடியில் உள்ள அதிகப்படியான திரவம் வீக்கத்தை உருவாக்கலாம். அழுவதை நிறுத்தி விட்ட சில நிமிடங்களுக்கு பிறகு கண்களில் கூல் கம்ரசர்(cool compress-ஐ) பயன்படுத்துவது வீக்கத்தைக் குறைக்க உதவும்.
3. வீங்கிய கண்கள் என்பது பருவகாலத்தில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் இருக்கலாம்.. சிலருக்கு மழைக் காலத்தில்தான் அலர்ஜி ஏற்படும்.. உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்..
4. ஆல்கஹால் பழக்கம் இருந்தால் உங்கள் உடலை நீரிழப்புக்கு ஆளாக்கும் கண்களை உலர வைக்கும். காரம் அதிகம் உள்ள உணவுகள் எடுப்பவர்களுக்கு கண்களில் நீர் தேங்குவதால் அவர்களுக்கு சிறிது வீக்கத்தை தருகிறது.
5. கண்களைச் சுற்றிய வீக்கத்தில் ஒரு கண்ணைச் சுற்றி மட்டும் வீங்கியிருந்தால் அது அலர்ஜியாக இருக்கலாம். இரண்டு கண்களையும் சுற்றி வீங்கியிருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சிலருக்கு ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையாலும் இப்படி நிகழலாம். எனவே அப்படி ஏதேனும் மருந்துகள் எடுப்பவராக இருந்தால் அவை குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications