Latest Updates
-
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
எதுக்கு எடுத்தாலும் ஊட்டச்சத்து தேவை என்று ஏன் சொல்கிறோம்? அதுனால என்ன நமக்கு என்ன கிடைக்குது?
ஊட்டச்சத்துக்கள் என்பது உடலுக்கு தேவையான ஒன்றாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் உணவில் இருந்து பெறப்படுகிறது. நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. அதனால் தான் உணவு, ஆரோக்கியம் மற்றும் நோய் இவற்றிற்கு இடையே பெரிய தொடர்பு உள்ளது என்கிறது ஆய்வு.
ஊட்டச்சத்து நிபுணர்கள் மூலக்கூறு உயிரியல், உயிர்வேதியியல் மற்றும் மரபியல் ஆகியவற்றிலிருந்து ஊட்டச்சத்துக்கள் மனித உடலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள நிறைய ஆராய்ச்சிகளை இன்றளவும் செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வின் மூலம் நோயின் அபாயத்தை குறைக்க உணவுத் தேர்வுகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், ஒருவருக்கு ஊட்டச்சத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் என்ன நடக்கும், உணவு ஒவ்வாமை எப்படி ஏற்படுகிறது இப்படி பல விதமான கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்த ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு ஏன் தேவை? இந்த ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் இல்லாவிட்டால் என்னென்ன நடக்கும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
ஊட்டச்சத்துக்களின் வகைகள்
மேக்ரோநியூட்ரியன்கள்: மேக்ரோநியூட்ரியன்கள் என்பது மக்களுக்கு பெரிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து தேவையாகும்.
கார்போஹைட்ரேட்டுகள்
சர்க்கரை, நார்ச்சத்துக்கள் மற்றும் ஸ்டார்ச் போன்ற உணவுகள் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இதில் சர்க்கரைகள் எளிய கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இது உடலுக்கு தேவையான விரைவான ஆற்றலை வழங்க உதவுகிறது. அதே நேரத்தில் அடிக்கடி சர்க்கரை எடுத்துக் கொள்வது டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
நார்ச்சத்தும் ஒரு கார்போஹைட்ரேட் உணவாகும். இது குடல் பாக்டீரியாக்களால் வளர்சிதை மாற்றம் செய்து உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. நார்ச்சத்து மற்றும் பதப்படுத்தப்படாத ஸ்டார்ச் ஒரு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். நார்ச்சத்து நீரிழிவு, இருதய நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.
புரோட்டீன்கள்
புரதங்களில் நிறைய அமினோ அமிலங்கள் காணப்படுகிறது. இதில் 20 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த வகை உணவுகள் முழுமையான புரதத்தை வழங்குகிறது. இவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலத்தை கொண்டுள்ளன.
கொழுப்புகள்
கொழுப்புகள் மூட்டுகளை சரி செய்யவும், ஹார்மோன்கள் உற்பத்தியை சரி செய்யவும் உதவுகிறது. உடலானது சில வைட்டமின்களை உறிஞ்ச உதவுகிறது. இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க கொழுப்புகள் உதவுகிறது. அதே சமயத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் எடுத்துக் கொள்வது உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.
நீர்
ஒரு வயது வந்த மனிதரின் உடலில் 60% அளவிற்கு நீர் உள்ளது. தண்ணீரில் கலோரிகள் எதுவும் இல்லை என்றாலும் கூட தண்ணீர் மிகவும் அவசியம். தண்ணீர் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்காது. ஒரு நாளைக்கு 2 லிட்டர் அல்லது 8 டம்ளர் அளவிற்கு தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தண்ணீரின் அளவை நீங்கள் காய்கறிகள், பழங்கள் மூலங்களில் இருந்தும் பெறலாம். ஒரு நபருக்கு தினமும் தண்ணீர் தேவை.
மைக்ரோநியூட்ரியன்கள்
தாதுக்கள்
நம் உடலுக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மைக்ரோநியூட்ரியன்கள் என்று அழைக்கப்படுகிறது. நம் உடலுக்கு கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற தாதுக்கள் மிகவும் அவசியம். இரும்பு, பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்களும் மிகவும் அவசியம்.
பொட்டாசியம்
பொட்டாசியம் ஒரு எலக்ட்ரோலைட் ஆகும். இது சிறுநீரகங்கள், இதயம், தசைகள் மற்றும் நரம்புகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது. பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் 4,700 மில்லிகிராம் (மிகி) பொட்டாசியத்தை உட்கொள்வதைப் பரிந்துரைக்கின்றன.
பொட்டாசியம் சத்து குறைவாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் சிறுநீரகக் கற்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவகேடா, தேங்காய், வாழைப்பழம், உலர்ந்த பழங்கள், பூசணி, பீன்ஸ் மற்றும் பருப்பு போன்றவற்றில் பொட்டாசியம் காணப்படுகிறது.
சோடியம்
சோடியம் ஒரு எலக்ட்ரோலைட் ஆகும். இது நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. சோடியம் குறைவாக இருந்தால் ஹைபோநெட்ரீமியாவுக்கு வழிவகுக்கும். சோம்பல், குழப்பம் மற்றும் சோர்வு ஆகியவை அறிகுறிகளாக தோன்ற வாய்ப்பு உள்ளது. சோடியம் அளவு அதிகமாகும் போது உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம் சோடியம் அல்லது ஒரு டீஸ்பூன் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதைத் தவிர கால்சியம், பாஸ்பரஸ், ஜிங்க், இரும்புச்சத்து செலினியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்களும் தேவை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












