Latest Updates
-
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
உப்பை தினமும் குறைவாக சாப்பிட்டால் உங்க உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
ஒவ்வொரு உணவிலும் உப்பு மிக முக்கியமான பொருளாகும், அனைத்து உணவிற்கும் சுவையைக் கொடுப்பது உப்புதான். உப்பு இல்லாமல் எந்தவித உணவும் முழுமையடையாது. ஆனால் உடலில் சோடியம் அதிகமாக இருப்பது ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, அதிக சோடியம் நுகர்வு உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமாகிறது மற்றும் இதய ஆபத்தை அதிகரிக்கின்றன. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவாக உப்பு உட்கொள்வது இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய், பக்கவாதம் மற்றும் கரோனரி மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆய்வுகளின் படி, உணவில் உப்பைச் சேர்க்காதவர்களுக்கு இதயக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு 18% குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மட்டுமின்றி உப்புக் குறைவாக சாப்பிடுவதில் வேறுசில நன்மைகளும் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
சோடியம் குறைவாக உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. இது அதிகப்படியான கழிவுகளை நிரப்ப சிறுநீரகங்களுக்கு பயனளிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இதயத்தை பாதுகாக்கிறது
தினமும் உணவில் அதிக உப்பு ஒருவரை மாரடைப்புக்கு ஆளாக்குகிறது. எனவே உப்பு உட்கொள்வதை குறைப்பது இருதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
வீக்கத்தைக் குறைக்கிறது
உப்பு உட்கொள்ளல் அதிகரிப்பது உடலில் நீர் தேக்கத்திற்கு வழிவகுக்கிறது, இது பின்னர் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. உப்பு குறைவாக இருந்தால் வீக்கம் குறையும்.
எலும்பை வலுப்படுத்தும்
நீண்ட காலத்திற்கு உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பது உடல் திசுக்கள் மற்றும் செல்களில் திரவத்தை சேகரிக்க வழிவகுக்கும். இது கால்சியத்தை வெளியேற்ற உடலை கட்டாயப்படுத்துகிறது, இது எலும்புகளின் சிதைவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. அன்றாடம் உப்பைக் குறைப்பது எலும்புகள் சிதைவடையும் அபாயத்தைக் குறைக்கிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது
அதிக உப்பு உணவு வயிற்று புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. உப்பு நமது வயிற்றின் உட்புறத்தில் ஏற்படும் சேதத்திற்கு முக்கிய காரணமாகும். ஆய்வுகளின் படி, குறைந்த உப்பு உணவு உங்கள் வயிற்று புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.
சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது
அதிக உப்பு உட்கொள்வது நமது சிறுநீரகங்களை நம் உடலில் இருந்து உப்பை அகற்ற கடினமாக உழைக்க வைக்கிறது. இது சிறுநீர் கழிப்பதன் மூலம் அதிக கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கிறது. இது சிறுநீரக கற்கள் மற்றும் பிற சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே உப்பை குறைவாக சாப்பிடுவது சிறுநீரக ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

