Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நைட்டு இரும்பி இரும்பி தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறீங்களா? அதுக்கு என்ன காரணம் தெரியுமா?
Nighttime Coughing Reasons In Tamil: இருமல் தொடர்ந்து வரும் போது அது உங்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் தொடர்ந்து இரும்பி நம் நெஞ்சே வலிக்க ஆரம்பித்து விடும். எரிச்சலூட்டும் காரணிகளால் கூட சிலருக்கு இருமல்கள் ஏற்படலாம்.
மூக்கு மற்றும் சுவாச பாதையில் ஏற்படும் எரிச்சல்களால் இருமல் அதிகமாகி இத்தகைய பாதிப்பு ஏற்படக் கூடும். இருமல் அதிகமாக இருக்கும் போது பலர் தூக்கத்தில் இருந்து கூட எழுந்திருப்பார்கள். இப்படி தூக்கத்தை பாதிக்கும் இருமலை இரவு நேர இருமல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சரி வாங்க அதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

இரவு நேரத்தில் ஏன் இருமல் ஏற்படுகிறது?
இருமல் என்பது தொண்டை, மூச்சுக்குழாய் ஆகியவற்றிலிருந்து எரிச்சலூட்டும் சளி போன்ற பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. சுற்றுப்புற காற்று மாசுபாடு காரணமாக சிலருக்கு இரவு நேர இருமல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சில காரணிகள் அழற்சியை ஏற்படுத்தலாம். வாசனை குச்சிகள், கொசுவர்த்தி சுருள்கள், ஈரமான சுவர்கள் போன்றவை பூஞ்சை தொற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. புகைப்பிடித்தல் காரணமாக கூட சிலருக்கு இந்த இருமல் தொல்லை ஏற்படலாம்.
இதர சுவாச பாதை பிரச்சனைகள்
* மூச்சுக் குழாய் அழற்சி
* நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்
* சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்
* இடைநிலை நுரையீரல் நோய் (ILD)
* முதன்மை அல்லது இரண்டாம் நிலை நுரையீரல் கட்டிகள்
* சர்கோயிடோசிஸ்
* காசநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
பிற காரணங்கள்
* இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD)
* இடது இதய வெண்ட்ரிக்கிள் வால்வு பாதிப்பு
* மிட்ரல் ஸ்டெனோசிஸ்
* நுரையீரல் அழற்சி
* சைக்கோஜெனிக் இருமல்
இரவு நேர இருமலை எப்படி சரிசெய்யலாம்?
சிலருக்கு இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் பாதிப்பு இருக்கும். இவர்களுக்கு அடிக்கடி இரவு நேர இருமல் வர வாய்ப்பு உண்டு. இந்த பாதிப்பு இருக்கும் நபர்கள் இரவு உணவிற்கும், உறங்குவதற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவெளி இருப்பது நல்லது. இரவு நேர இருமலை சரிசெய்ய ஆன்டி ஹிஸ்டமைன் மற்றும் டிகோங்கஸ்டெண்டுகள் போன்ற மூக்கு சொட்டு மருந்துகளை பயன்படுத்தி வரலாம். உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
உங்கள் படுக்கையை சாய்த்து வைத்து படுங்கள்
சாப்பிட்ட உடனே படுப்பதை நிறுத்துங்கள். இது உங்களுக்கு எதுக்களித்தல் பிரச்சினையை ஏற்படுத்தலாம். சாப்பிட்ட பிறகு குறைந்தது 2.5மணி நேரம் காத்திருந்து அப்புறமாக படுப்பது நல்லது. அதே மாதிரி உங்கள் தலையணையை 6-8 அங்குலங்கள் உயர்த்த வேண்டும். நீங்கள் தலையை உயர்த்தி தூங்குவது உங்கள் இருமலை குறைக்க பயன்படுகிறது.
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க வேண்டும்
கரப்பான் பூச்சிகளின் உமிழ்நீர், கழிவு போன்றவை கூட உங்களுக்கு இருமலை உண்டாக்கும். எனவே வீட்டில் கரப்பான் தொல்லை இருந்தால் அதை முதலில் ஒழிக்க முற்படுங்கள். உணவுப் பாத்திரங்களை எப்பொழுதும் மூடி வையுங்கள்.
அறையில் ஈரப்பத மூட்டியை பயன்படுத்துங்கள்
வறண்ட வெதுவெதுப்பான காற்று தொண்டைக்கு செல்லும் போது உங்களுக்கு இதமாக இருக்கும். எனவே அறையில் ஈரப்பத மூட்டியை பயன்படுத்தலாம். இந்த ஈரப்பதமூட்டி தொண்டையில் இருக்கும் காற்றை இதமாக வைத்திருக்க உதவுகிறது.
தேன் சாப்பிடுங்கள்
உறங்குவதற்கு முன்பு 2-3 டீ ஸ்பூன் தேன் உட்கொள்வது மிகவும் நல்லது. இது உங்கள் தொண்டையில் உள்ள சளியை தளர்த்த உதவுகிறது. தேநீரில் கூட 2 டீ ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம்.
லெமன் ஜூஸ் குடியுங்கள்
எலுமிச்சை சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே வெதுவெதுப்பான எலுமிச்சை சாறு, இஞ்சி டீ, தேன் சேர்த்து கலந்து குடித்து வரலாம். இது உங்கள் தொண்டைக்கு இதமான உணர்வை தரும்.
உப்பு தண்ணீர் கொண்டு கொப்பளியுங்கள்
உப்பு தண்ணீர் கொண்டு கொப்பளிப்பது உங்கள் சுவாசப் பாதை சரி செய்ய உதவுகிறது. இது இருமல், ஆஸ்துமா, அழற்சி மற்றும் தொற்றுக்களை போக்க உதவுகிறது. 8 அவுன்ஸ் வெதுவெதுப்பான நீரில் 1 அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொப்பளியுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications