உங்க சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலைமை வராமல் இருக்க... நீங்க இதை செய்யணுமாம்!

அதிகப்படியான குடிப்பழக்கத்தின் விளைவுகள் கல்லீரலை மட்டும் பாதிக்காது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மேலும், மது அருந்துதல் போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடையவை.

நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது சிறுநீரகம். சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் தண்ணீரை சிறுநீராக வெளியேற்றும் வேலையை செய்துவருகிறது. மேலும், இவை உடலில் உள்ள இரசாயனங்களான சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவற்றை சமநிலையில் வைக்க உதவுகின்றன. சிறுநீரகம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களையும் உருவாக்குகிறது மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க எலும்பு மஜ்ஜையைத் தூண்டுகிறது. இதன் செயல்பாடுகள் தடைபடும்போது அல்லது சிறுநீரகம் செயலிழக்கும்போது, உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஆதலால், உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்வது மிக முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது.

World Kidney Day: Everyday Habits To Keep Your Kidneys Healthy in tamil

சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறுநீரக நோயின் அதிர்வெண் மற்றும் தாக்கத்தை குறைக்கவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. 2023 நடப்பு ஆண்டில் உலக சிறுநீரக தினம் மார்ச் 9 இன்று அனுசரிக்கப்படுகிறது. உங்கள் சிறுநீரகத்தை நீங்கள் எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் எனக் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பழக்கங்கள்

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பழக்கங்கள்

உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உங்கள் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் உடலின் தினசரி செயல்பாடுகளுக்கும், உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிக்கவும் ஆரோக்கியமான சிறுநீரகம் அவசியம். உலகெங்கிலும் உள்ள மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்கள் இறப்பதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரோக்கியமான சிறுநீரகத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடிப்பதாகும். எனவே, உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இங்கே கொடுக்குக்கப்பட்டுள்ள அன்றாட பழக்கங்களை பின்பற்றுங்கள்.

சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்

சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்

சுறுசுறுப்பான வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியமாகும். மேலும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் இது பொருந்தும். உங்கள் இடுப்புக்கும் உடற்பயிற்சி செய்வது நல்லது. இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. சுறுசுறுப்பாககவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், உங்களுக்கு ஏற்படும் சிறுநீரக பாதிப்பைத் தடுக்கலாம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.

இரத்த அழுத்தத்தை தவறாமல் சரிபார்க்கவும்

இரத்த அழுத்தத்தை தவறாமல் சரிபார்க்கவும்

உயர் இரத்த அழுத்த நிலை சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோய், இதய நோய் அல்லது அதிக கொழுப்பு போன்ற பிற சுகாதார நிலைமைகளுடன் இணைந்து, உயர் இரத்த அழுத்தம் உங்கள் உடலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது உங்கள் சிறுநீரகத்தின் அரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கலாம்.

நீரேற்றமாக இருங்கள்

நீரேற்றமாக இருங்கள்

உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்வது எப்போதும் நல்லது. உடல் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு போதுமான தண்ணீர் குடிப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கலாம். போதுமான அளவு தண்ணீர் மற்றும் பிற திரவங்களை குடிப்பது, உடலில் இருந்து சோடியம், யூரியா மற்றும் பிற நச்சுகளை அகற்றும் சிறுநீரகத்தின் திறனுக்கு உதவும்.

ஆரோக்கியமான உணவைப் பராமரிக்கவும்

ஆரோக்கியமான உணவைப் பராமரிக்கவும்

பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம், நீங்கள் பல நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கலோரி நுகர்வு குறையும் மற்றும் உப்பு உட்கொள்ளலைக் குறைக்கலாம். பதப்படுத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை மிதமாக எடுத்துக்கொள்ளுங்கள். சிறுநீரகத்திற்கு ஏற்ற உணவு முறையை பின்பற்றுவதற்கான வழிகாட்டுதலுக்கு உணவு நிபுணரை நீங்கள் அணுகலாம்.

தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்க்கவும்

தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்க்கவும்

அதிகப்படியான குடிப்பழக்கத்தின் விளைவுகள் கல்லீரலை மட்டும் பாதிக்காது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மேலும், மது அருந்துதல் போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடையவை. அதன்படி, அதிகப்படியான புகைபிடித்தல் நுரையீரலுக்கு மட்டுமல்ல, உங்கள் சிறுநீரகத்தையும் பாதிக்கலாம். ஆதலால், தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை முற்றிலுமாக தவிருங்கள்.

இறுதிக்குறிப்பு

இறுதிக்குறிப்பு

உடல் கழிவுகளைச் செயலாக்குதல் மற்றும் ஹார்மோன்களை உருவாக்குதல் போன்ற பல செயல்பாடுகளுக்கு இந்த உறுப்புகள் பொறுப்பாவதால், உங்கள் சிறுநீரகங்களைப் பராமரிப்பது உங்கள் முதன்மையான உடல்நலக் கவலைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion