இரத்தசோகைக்கு 'டாடா' சொல்ல தினமும் இந்த பழத்தை ஒரு கையளவு சாப்பிடுங்க...

இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் போது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையானது குறைந்துவிடும். இதற்கு பெயர் தான் இரத்தசோகை எனும் அனீமியா. இரத்த சோகைக்கு நாவல் பழம் நல்லது.

இன்று உலக இரும்புச்சத்து குறைபாடு நாள்... சமீப காலமாக இரத்தசோகை பிரச்சனை உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறதாம். அதுவும் வயது வரம்பிற்கு எல்லா வயதினருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

World Iron Deficiency Day 2019: Know-How Jamun is effective in Battling Anemia

இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் போது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையானது குறைந்துவிடும். இதற்கு பெயர் தான் இரத்தசோகை எனும் அனீமியா. இரத்த சிவப்பு அணுக்கள் குறையும் போது, ஹீமோகுளோபின் அளவும் குறையும்.

ஹீமோகுளோபின் தான் நம் உடலின் பிற பகுதிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. அது குறைந்தால் நமது உடலின் நிலை என்ன? எனவே, ஆரோக்கியமான உடலுக்கு இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையானது மிகவும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தசோகை ஏற்படுவதற்கான காரணங்கள்:

இரத்தசோகை ஏற்படுவதற்கான காரணங்கள்:

* பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியாக இரத்த போக்கு இரத்தசோகையை ஏற்படுத்தலாம்.

* அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும், சிறுநீர் பாதையில் இரத்தபோக்கு ஏற்படுபவர்களுக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கூட இரத்தசோகை ஏற்படுவதற்காக வாய்ப்புகள் உள்ளன.

* இரத்த உறைதல் கோளாறுகள், ஆட்டோ இம்யூன் தாக்குதல், கடுமையான உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில மருந்துகளின் காரணமாக கூட சிவப்பு இரத்த அணுக்கள் குறையலாம். இன்னும் சிலருக்கு, இரத்தசோகை ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதே பெரும் சவாலாக அமையக்கூடும்.

இரத்தசோகை இருப்பதற்கான அறிகுறிகள்:

இரத்தசோகை இருப்பதற்கான அறிகுறிகள்:

* தேவையற்ற உடற்சோர்வு, பலவீனமாக உணர்தல், தலைவலி

* மஞ்சள் மற்றும் வெளிர் நிற தோல் அல்லது கை, கால் வீங்கம்.

* மூச்சுத் திணறல் அல்லது சில நேரங்களில் கனமான சுவாசம்

* எலும்புகள், மார்பு மற்றும் மூட்டுகளில் வலி

* பார்வை கோளாறு

* வேகமான, ஒழுங்கற்ற அல்லது அசாதாரண இதய துடிப்பு

இரத்தசோகை மற்றும் அதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. ஏனென்றால், இயற்கையே அதற்கான ஒரு அற்புத மருந்தை படைத்துள்ளது. அது தான், நாவல் பழம். இப்போது நாவல் பழத்தின் நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1

நன்மை #1

நாவல் பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதால், இரத்தசோகை உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இதனால், இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யலாம். உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரித்தாலே போதும், இரத்தசோகை எனும் வார்த்தைக்கே இடம் இருக்காது. அதுமட்டுமல்லாமல், நாவல் பழத்தில் அதிகப்படியான வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், புரதச்சத்துக்கள், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், என மேலும் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.

நன்மை #2

நன்மை #2

நாவல் பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள இரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு, உடலின் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தினசரி நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். இதனால், எளிதில் எந்த நோயும் உடலை அண்டாது.

நன்மை #3

நன்மை #3

குறிப்பாக, பெண்கள் மாதவிடாய் காலங்களில் இந்த பழத்தை சாப்பிட வேண்டும். இதனால், அதிகப்படியாக இரத்த போக்கில் இருந்து உடலை தற்காத்துக் கொள்ளலாம்.

நன்மை #4

நன்மை #4

உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அதிகரிப்பதால் நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியோடு, ஆரோக்கியமாக இருக்கும்.

நன்மை #5

நன்மை #5

சர்க்கரை நோய்க்கு நாவல் பழம் சிறந்த அருமருந்தாக விளங்குவதால் இதனை எந்த வயதினரும் தயங்காமல் சாப்பிடலாம்.

நன்மை #6

நன்மை #6

குறைந்த அளவிலான கலோரிகளை மட்டுமே கொண்டு நாவல் பழத்தை தினசரி சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைவதோடு, சிறந்த ஜீரண ஆற்றலையும் பெற முடியும்.

நாவல் பழம் ஒரு பசுமையான பழம் என்பதால் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது. எனவே, தினசரி உணவில் நாவல் பழத்தையும் சேர்த்துக் கொண்டாலே போதும் இரத்தசோகை ஏற்பட எவ்வித வாய்ப்பும் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion