Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
மூச்சை அடக்கும்போது உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
நாமாக மூச்சை அடக்கி நீண்ட நேரம் வைத்திருப்பது தன்னார்வ மூச்சுத்திணறல் ஏற்படும். இதனை முறையான பயிற்சி மூலம் மட்டுமே பெற முடியும். இல்லையெனில் உங்கள் உயிருக்கே இது ஆபத்தை ஏற்படுத்தும்.
தண்ணீருக்குள் மூச்சை அடக்கி அனைவரும் விளையாடி இருப்போம், இது ஒரு வகை முக்கிய விளையாட்டுக்கூட. நாமாக மூச்சை அடக்கி நீண்ட நேரம் வைத்திருப்பது தன்னார்வ மூச்சுத்திணறல் ஏற்படும். இதனை முறையான பயிற்சி மூலம் மட்டுமே பெற முடியும். இல்லையெனில் உங்கள் உயிருக்கே இது ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான ஒரு இளைஞர் ஒன்று முதல் இரண்டு நிமிடம் வரை சுவாசத்தை கட்டுப்படுத்தலாம். இதற்கு மேல் அதிகரிக்கும்போது அது உங்களை ஆபத்தில் தள்ளும். நீங்கள் மூச்சை அடக்கும் போது உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் ஆகிசிஜன் அளவு குறையும்
நமது உடலுக்குள் புதிய ஆக்சிஜனின் வரவு இல்லாமல் இருக்கும் போது உங்கள் இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவு குறைந்து கொண்டே வரும். இதன் பொருள் நமது மூளை மற்றும் உறுப்புகள் செயல்படத் தேவையான ஆக்ஸிஜனைப் பெறுவதில்லை என்பதாகும். நமது மூளை ஹைபாக்சிக் நிலையை அடையும்போது ஏற்படும் முதல் அறிகுறிகள் குழப்பம், முடிவெடுக்க இயலாமை, ஒருங்கிணைப்புக் கோளாறுகள் போன்றவையாகும்.

உங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும்
நீங்கள் உங்கள் சுவாசத்தை கட்டுப்படுத்தத் தொடங்கும்போது உங்கள் உடலில் இருக்கும் ஆக்சிஜனின் அளவு குறையத் தொடங்கும், அதேசமயம் மறுபுறம் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கத் தொடங்கும். நாம் சுவாசிக்கும் போது நமது உடலில் இருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு வெளிவருகிறது. எனவே அதனை தடுக்கும்போது நாம் உடனடியாக ஆக்சிஜனை பெறுவதற்கு உந்தப்படுவோம். தண்ணீருக்கடியில் சுவாசத்தை கட்டுப்படுத்தும் போது இதன் அளவு அதிகரிக்காது.

மூளை பாதிப்பு
சுவாசத்தை நீண்ட நேரம் கட்டுப்படுத்தும் போது இரத்த ஓட்டத்தில் எஸ்100பி என்ற புரோட்டினின் அளவு அதிகரிக்கிறது. இது மூளையின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இது தற்காலிகமான ஒன்றாகும். மீண்டும் சுவாசிக்கத் தொடங்கிய பின் இதன் அளவு சகஜ நிலைக்கு திரும்பிவிடும். இந்த ஆய்வின் முடிவின் படி தன்னார்வ மூச்சுத்திணறல் மத்திய நரம்பு மண்டலத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்கிறது, மேலும் அதன் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நீங்கள் ஒருங்கிணைப்பை இழக்க நேரலாம்
சுவாசத்தை கட்டுப்படுத்தும் போது அது உங்கள் இரத்தத்தில் இருக்கும் லாக்டேட்டின் அளவை அதிகரிக்கிறது. நீண்ட நேர அல்லது தீவிரமான உடற்பயிற்சியின் போது தசைகளில் ஏற்படும் தசைப்பிடிப்பு, ஒருங்கிணைப்பு சிதைவு போன்றவற்றிற்கு லாக்டிக் அமிலம்தான் காரணமாகும். இப்படி நடக்கக் காரணம் உங்கள் தசைகளுக்கு போதுமான அக்கவு ஆக்சிஜினை கொடுக்கவில்லை.

உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்
உங்கள் சுவாசத்தை நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கும். டைவர்களுக்கு அவர்கள் தண்ணீரில் குதிக்கும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. நமது உடலில் ஆக்சிஜனின் அளவு குறையும்போது சர்க்கரையின் அளவு ஏன் அதிகரிக்கிறது என்பது இன்றும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்
மூச்சை கட்டுப்படுத்தும் போது உங்கள் இதயத்துடிப்பின் அளவு வெகுவாக குறைகிறது. உங்கள் இதய துடிப்பின் அளவு குறையும்போது அதனை ஈடுசெய்ய உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கப்படுகிறது. இது நமது உடலின் இரத்த நாளங்கள் மூலம் நடைபெறுகிறது. சுவாசத்தை கட்டுப்படுத்திய மூன்று நிமிடங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது.

மரணம் ஏற்படலாம்
தண்ணீருக்கடியில் சுவாசத்தை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து என்னவெனில் இதனால் நீங்கள் மரணிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் தண்ணீருக்கடியில் மூச்சை அடக்கும்போது அவர்களின் மார்பில் உள்ள அழுத்தம் அவர்களின் இரத்த நாளங்கள் இதயத்தின் வலது பக்கத்திற்கு இரத்த ஓட்டத்தை துண்டிக்க காரணமாகிறது. இதனால் அவர்கள் இதயத்தால் இரத்தத்தை பம்ப் செய்ய இயலாது. இதனால் அவர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த விதி பெரியவர்களுக்கும் பொருந்தும்.



Click it and Unblock the Notifications











