Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வைட்டமின் பி12 குறைபாடு இருக்கா? அப்ப அது உங்க உடலில் என்னென்ன ஆபத்துக்களை ஏற்படும் தெரியுமா?
வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாக இருப்பது 'நிரந்தர நரம்பியல் சேதத்திற்கு' வழிவகுக்கும்
உங்கள் உடல் துல்லியமாகவும் சரியாகவும் செயல்பட, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கான தினசரி தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அந்த வகையில் உங்கள் உடலுக்கு தேவைப்படும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் பி12. இது டிஎன்ஏவை ஒருங்கிணைக்க உதவுகிறது, ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. மேலும், வைட்டமின் பி 12 சத்து இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடலில் வைட்டமின் பி 12 இன் போதுமான அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால், நீங்கள் வைட்டமின் பி 12 குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.

இந்த முக்கியமான ஊட்டச்சத்து குறைபாடு பல்வேறு அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உங்கள் உடலை பாதிக்கும். எனவே, வைட்டமின் பி 12 குறைபாட்டை எவ்வாறு தவிர்க்கலாம் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

சோர்வு, தலைவலி மற்றும் மனநிலை பிரச்சினைகள்
உடலில் வைட்டமின் பி 12 போதுமான அளவு இருக்கும்போது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. இருப்பினும், உடலில் போதுமான வைட்டமின் பி 12 அளவுகள் இல்லை என்றால், அது ஆக்ஸிஜன் விநியோகத்தை பாதிக்கலாம் மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியைக் குறைக்கலாம். இது மெகாலோபிளாஸ்டிக் அனீமியாவை ஏற்படுத்தும். இந்த விளைவுகள் அனைத்தும் உங்களுக்கு சோர்வு மற்றும் தலைவலியை ஏற்படுத்தும் மற்றும் மனநிலை மாற்றங்களுக்கும் வழிவகுக்கும்.

இரைப்பை குடல் பிரச்சினைகள்
நம் உடல் வைட்டமின் பி12 சத்தை உணவில் இருந்து பெறுகிறது. இது நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள புரதங்களுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது. வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் என்சைம்கள் வைட்டமின் பி12 ஐ அதன் கட்டற்ற வடிவில் பிரிக்க உதவுகிறது. பின்னர் அது சிறுகுடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவும் புரதத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. இருப்பினும், வைட்டமின் பி-12 குறைபாடு செரிமான மண்டலத்தை பாதிக்கும். ஊட்டச்சத்தின் பற்றாக்குறையானது குடலைச் சென்றடைய போதுமான ஆக்ஸிஜனை அனுமதிக்காது. இது வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல், வீக்கம், வாயு, மற்றும் பசியின்மை மற்றும் எடை இழப்பு உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

நரம்பியல் பாதிப்பு
வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாக இருப்பது 'நிரந்தர நரம்பியல் சேதத்திற்கு' வழிவகுக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, முந்தைய வெளிப்பாடுகள் பொதுவாக நுட்பமானவை அல்லது அறிகுறியற்றவை. இருப்பினும், நரம்பியல் பிரச்சினைகள் உருவாகினால், அவை மீண்டு வர முடியாததாக இருக்கலாம் என்று சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.

சில அறிகுறிகள்
யுகே(UK) இன் தேசிய சுகாதார சேவைகள் (NHS) வைட்டமின் 12-உடன் தொடர்புடைய சில அறிகுறிகளை பட்டியலிடுகிறது. உங்கள் தோல் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும், புண் மற்றும் சிவப்பு நாக்கு(குளோசிடிஸ்) ஏற்படலாம், வாய் புண், நீங்கள் நடந்து செல்லும் மற்றும் நடமாடும் விதத்தில் மாற்றங்கள், குழப்பமான பார்வை, எரிச்சல் மற்றும் மனச்சோர்வு ஆகியவை வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்.

தோலில் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
வைட்டமின் பி 12 குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும், இது கோபாலமின் குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இது உடல் போதுமான ஆரோக்கியமான இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்காதபோது ஏற்படும் நிலையை குறிக்கிறது. எனவே இது, உங்கள் தோலில் வெளிர் மஞ்சள் நிறம் ஏற்படும் சரும பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

வாய்வழி அறிகுறிகள்
உங்கள் வாயிலும் வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள் ஏற்படும். அந்த அசாதாரண அறிகுறிகளில் ஒன்று 'பரேஸ்தீசியா', இது ஒரு விரும்பத்தகாத உணர்வு அல்லது கூச்ச உணர்வு அல்லது குத்துதல் அல்லது நாக்கில் வீக்கம் அல்லது எரியும் உணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் வாய்வழி நிலை. அழற்சி மற்றும் வீங்கிய நாக்குடன் தொடர்புடைய நிலை, குளோசிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications