Latest Updates
-
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
காலை உணவாக கிச்சடி சாப்பிடுவதால் பெறும் முக்கிய நன்மைகள்!
நோயாளி முதல் ஆரோக்கியமான மனிதர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய உணவாக இருக்கும் இந்த கிச்சடியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
இந்திய பாரம்பரிய உணவு வகைகளில் புகழ்பெற்ற ஒரு உணவு வகை கிச்சடி. பருப்பு மற்றும் பல்வேறு காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கிச்சடி பொதுவாக பலரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவாக உள்ளது. பலர் கிச்சடியில் பல்வேறு மசாலாப் பொருட்கள் மற்றும் சில மூலப்பொருட்களை அவரவர் விருப்பத்திற்கு சேர்த்து தயாரித்து உண்டு மகிழ்வர்.

உங்கள் வயிறு சரியில்லை என்றால் சிறிதளவு கிச்சடி சாப்பிடுவதால் உங்கள் வயிற்றின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. பொதுவாக நோயாளிகளுக்கு உகந்த உணவாக கிச்சடி இருப்பதை நாம் அறிந்திருக்கலாம். நோயாளி முதல் ஆரோக்கியமான மனிதர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய உணவாக இருக்கும் இந்த கிச்சடியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா? அதனைப் பற்றி அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.
இக்கட்டுரையில் கிச்சடி பற்றிய 5 ஆரோக்கிய நன்மைகள் விவரிக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து இனிமேலாவது கிச்சடியை அடிக்கடி உங்கள் காலை உணவாக உண்ணுங்கள்.

வாதம், பித்தம், கபம்
ஆயுர்வேத உணவு அட்டவணையில் கிச்சடிக்கு ஒரு முக்கிய இடம் உள்ளதை நம்மில் பலர் அறிந்து கொள்ளவில்லை. கிச்சடி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வதால் ஒரு நபருக்கு வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று நிலைகள் சமநிலையில் உள்ளன. இது மட்டுமில்லாமல், கிச்சடி சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. உடலின் நோயெதிர்ப்புத் தன்மை அதிகரித்து, உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது.

ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து
பருப்பு, அரிசி, காய்கறி மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கிச்சடி ஒரு சுவையான மற்றும் ஊட்டச்சத்து மிக்க ஒரு உணவு வகையாகும். கிச்சடியில் உள்ள இந்த ஊட்டச்சத்துகள் உடலுக்கு ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் தருகின்றன.

குடல் மற்றும் வயிற்றுப் பகுதிக்கு ஆரோக்கியம் அளிக்கிறது
மிகக் குறைந்த அளவு மசாலாப் பொருட்களைக் கொண்டு கிச்சடி தயாரிக்கப்படுவதால், இது ஆரோக்கிய உணவின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. கிச்சடிக்கு ஆயுர்வேதத்தில் ஒரு சிறப்பு இடம் இருப்பதற்கு இதுவே ஒரு முக்கிய காரணமாகும். கிச்சடி நமது குடலுக்கும் வயிற்றுக்கும் மிகவும் நன்மை அளிக்கிறது என்று கூறப்படுகிறது. கிச்சடி செரிமான செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது மற்றும் இது பல நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது.

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது
பெண்கள் கருவுற்றிருக்கும் போது மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறு போன்றவை அடிக்கடி உண்டாகலாம். இதுமட்டுமில்லாமல், அதிகமான ஜங்க் உணவுகள் உட்கொள்வதால் மக்களிடையே வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். இந்த சூழ்நிலையை நீங்கள் கடந்து வரும் போது கிச்சடி உட்கொள்வதால் உங்கள் உடலுக்கு சிறந்த ஆரோக்கியம் உண்டாகும். கிச்சடி சாப்பிட்ட பின் வயிற்றில் கனமான உணர்வு குறைந்து, உணவு விரைந்து ஜீரணமாகிறது.

கிச்சடி மனநிலையை மேம்படுத்துகிறது
பொதுவாக வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் சமைப்பது குறைவு. வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் கிடைத்ததை வாங்கி வந்து சமைக்கும் பழக்கம் நம்மிடையே பலருக்கும் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு சமைக்கும் நேரத்தை குறைவாக்கவும், சமைக்கும் மனநிலையை உருவாக்கவும் ஏற்ற விதத்தில் மிகவும் எளிய முறையில் விரைந்து சமைக்கக் கூடிய ஒரு உணவாக கிச்சடி அமைந்துள்ளது. இதன் சுவையை மேம்படுத்த வேர்க்கடலை, பயறு, பருப்பு என்று உங்களுக்குப் பிடித்த மூலப்பொருட்களை சேர்த்து ருசியோடு தயாரிக்கலாம்.



Click it and Unblock the Notifications