Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
கொரோனா தடுப்பூசியின் சில விசித்திரமான பக்கவிளைவுகள்!
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைப் பெறுவதற்கு முன், அந்த தடுப்பூசியைப் பெற்ற பின்னர் சந்திக்கக்கூடும் பக்கவிளைவுகளை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
உலகையே அழித்துக் கொண்டிருந்த கொரோனாவிற்கு முடிவு கட்டும் வகையில், விஞ்ஞானிகள் அல்லும் பகலும் அயராது உழைத்து ஒரு வருடத்திற்கு பின், அதற்கு எதிரான தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். தற்போது உலகில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. பொதுவாக கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும்.

காய்ச்சல், குளிர், தசை வலி, ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் உடலில் ஒருவித அசௌகரியம் ஏற்படும் போன்றவை தடுப்பூசிக்கு பின் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகளாகும். இருப்பினும், அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதால், அறிகுறிகளின் பட்டியல் தொடர்ந்து உணர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக சிலர் தடுப்பூசியைப் பெற்ற பின் ஒருசில வித்திரமான மற்றும் அசாதாரண பக்கவிளைவுகளை சந்திப்பதாக கூறப்படுகிறது.
எனவே கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைப் பெறுவதற்கு முன், அந்த தடுப்பூசியைப் பெற்ற பின்னர் சந்திக்கக்கூடும் பக்கவிளைவுகளை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால், தடுப்பூசியைப் பெறுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இப்போது கொரோனா தடுப்பூசியின் சில வித்தியாசமான பக்கவிளைவுகளைக் காண்போம்.

உதடுகளில் வீக்கம்
உலகெங்கிலும் பல வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் மாடர்னா தடுப்பூசியைப் பெற்ற சிலர் உதடு வீக்கம் மற்றும் கொப்புளங்களை சந்தித்து வருகின்றனர். அதுவும் லிப் ஃபில்லர்களைக் கொண்டவர்களுக்கு இந்த தடுப்பூசி ஒருவித ஒவ்வாமையை உருவாக்கலாம் என்று பரிந்துரைக்கும் சில கோட்பாடுகள் இருந்தாலும், உண்மையில் இது ஒரு அரிய மற்றும் அசாதாரண எதிர்வினையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இம்மாதிரியான அலர்ஜி பிரச்சனை உள்ள மக்கள் தடுப்பூசி போட்டால் வலிமிக்க கொப்புளம், அசௌகரியம் மற்றும் வாய் வறட்சியையும் உணரக்கூடும் என்று கூறியுள்ளனர். உதடு வீக்கம் ஒரு பாதிப்பில்லாத எதிர்வினை என்றாலும், இது தடுப்பூசியின் தாமதமான எதிர்வினையின் ஒரு வடிவமாக இருக்கலாம்.

கோவிட் ஆர்ம்
கொரோனா தடுப்பூசியால் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புதிய பக்கவிளைவு தான் கோவிட்-ஆர்ம். இது ஒரு விசித்திரமான பக்கவிளைவாக இருப்பதோடு, ஊசி போட்ட இடத்தை சிவந்து போகச் செய்து, நீடித்த விறைப்பு மற்றும் வலியை அனுபவிக்க வைக்கும். கோவிட் ஆர்ம் பிரச்சனையை சந்தித்த சிலர், கடுமையான வலி மற்றும் அரிப்பை அனுபவித்ததாக தெரிவித்தனர். இந்த பக்கவிளைவு மற்றவர்களை விட வித்தியாசமான மாற்றுவது என்னவெனில், சில சமயங்களில் இது தடுப்பூசி போட்ட 7-9 நாட்களுக்கு பின் ஏற்படலாம். ஒரு நற்செய்தி என்னவெனில், இது பாதிப்பில்லாத எதிர்வினை மற்றும் இரண்டாவது ஷாட் பெறுவதற்கு தடையாக இது இருக்கக்கூடாது.

வீங்கிய நிணநீர்
கோவிட்-19 தடுப்பூசிகளின் வித்தியாசமான பக்கவிளைவுகளின் பட்டியலில், நிணநீர் முடிச்சுக்கள் வீங்கி காணப்படுவது ஒன்று. ஆனால் இம்மாதிரியான வீக்கம் பலருக்கும் புற்றுநோய் கட்டி என்று தவறாக நினைக்க வைக்கும். கொரோனா தடுப்பூசி பெற்ற பலரும் இம்மாதிரியான எதிர்வினைகளை அனுபவிப்பதை மருத்துவர்கள் காண்பதாக கூறுகின்றனர். அதோடு இந்த எதிர்வினை தடுப்பூசி போடப்பட்ட அதே கையில் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பக்கவிளைவு நேரடியாக தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், இந்த பக்கவிளைவை சந்திக்கும் நோயாளிகளுக்கு கவலையைத் தூண்டுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் இது புற்றுநோயின் அறிகுறியை ஒத்திருக்கிறது. எனவே கொரோனா தடுப்பூசியைப் பெறும் ஒவ்வொருவரும் இந்த பக்கவிளைவு குறித்து அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இரத்த உறைவு
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சில நாடுகளில் பயன்படுத்த தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த தடுப்பூசியைப் பெற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு கடுமையான இரத்தக் கட்டிகளை உருவாவதோடு, பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது. இந்த பக்கவிளைவு கொரோனா தடுப்பூசியால் நேரடியாக ஏற்பட்டதா என்பது தெரியவில்லை என்றாலும், மருத்துவர்கள் இந்த பக்கவிளைவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு அரிய நிகழ்வாக நம்புகிறார்கள். சில சந்தர்ப்பங்களில், தடுப்பூசியால் ஏற்படும் இரத்த உறைவானது வலிமிக்க கொப்புளங்கள், தடிப்புகள் மற்றும் காயங்களையும் ஏற்படுத்தும்.

மங்கலான பார்வை
கொரோனா தடுப்பூசியின் மற்றொரு விசித்திரமான பக்கவிளைவு என்பது சிலரின் பார்வையை பலவீனப்படுத்துவதாகும். சில வழக்கு ஆய்வுகளின் படி, தடுப்பூசி போடுவதால் சிலருக்கு சில நாட்கள் மங்கலான பார்வை இருக்கும். அமெரிக்காவில், சுகாதார பணியாளர் ஒருவர் தடுப்பூசி போட்ட பின்னர் கண் வீக்கத்தை அனுபவித்தார். இந்த பக்கவிளைவு ஒரு அசாதாரண மற்றும் சற்று கவலை அளிக்கக்கூடியதாக இருந்தாலும், மற்ற தடுப்பூசிகளிலும் பார்வை பிரச்சனை பொதுவாக அனுபவிக்கக்கூடிய ஒன்று என்று நிபுணர்கள் குறிப்பிடுவதால், இந்த ஒரு காரணத்தால் கோவிட் தடுப்பூசிகளின் செயல்திறன் அல்லது பாதுகாப்பை சந்தேகிக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications











