Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிப்பீங்களா? உங்களுக்கு பெரிய பிரச்சனை வர வாய்ப்பிருக்கு..
காலையில் மட்டுமின்றி, நிறைய பேர் பசிக்கும் போது ஒரு கப் டீ குடிப்பார்கள். இப்படி வெறும் வயிற்றில் பால் டீயைக் குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
Milk Tea Side Effects: காபியை விட டீயை விரும்பி குடிப்போர் ஏராளம். அதுவும் இந்தியர்கள் சரியான டீ பிரியர்கள். காலையில் எழுந்ததும் பெரும்பாலானோர் ஒரு கப் டீ குடிக்கவே விரும்புவார்கள். என்ன தான் டீ ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதிலும் சில பக்க விளைவுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடித்தால் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

காலையில் மட்டுமின்றி, நிறைய பேர் பசிக்கும் போது ஒரு கப் டீ குடிப்பார்கள். இப்படி வெறும் வயிற்றில் பால் டீயைக் குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சிலர் ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக டீ குடிப்பார்கள். அளவுக்கு மீறினால் எந்த ஒரு உணவுப் பொருளுமே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். சரி, இப்போது ஒருவர் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் போது எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

வயிற்று உப்புசம்
டீயை வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது வயிற்று உப்புசம் அல்லது வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு டீயில் உள்ள காப்ஃபைன் தான் முக்கிய காரணம். பாலை காப்ஃபைனுடன் சேர்க்கும் போது, இவை இரண்டும் வாயுவை உற்பத்தியை ஊக்குவிக்கும். மேலும் டீயில் காணப்படும் டானின்கள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, வயிற்று வலியை உண்டாக்கும்.

மலச்சிக்கல்
டீயில் காப்ஃபைன் மட்டுமின்றி, தியோஃபில்லைனும் உள்ளது. அளவுக்கு அதிகமாக டீயை ஒருவர் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது உடலில் வறட்சியை ஏற்படுத்தி, தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கி அவதிப்பட வைக்கும்.

பதட்டம்
நீங்கள் அதிக பதட்டத்துடன் இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் முதலில் அடிக்கடி டீ குடிப்பதை நிறுத்துங்கள். ஏனெனில் உங்களின் நிலைமைக்கு இந்த டீ ஒரு முக்கிய காரணம். ஏனெனில் இது பதட்டத்தை மேலும் அதிகரித்து, நிலைமையை இன்னும் மோசமாக்கிடும்.

தூக்கமின்மை
டீயில் இருக்கும் காப்ஃபைன் தூக்க சுழற்சியில் இடையூறை ஏற்படுத்தி, தூக்கமின்மையை உண்டாக்கும். எனவே உங்களுக்கு ஏற்கனவே தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், பால் டீயை வெறும் வயிற்றில் அடிக்கடி குடிப்பதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால், அது தூக்கமின்மை பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கிவிடும்.

இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வுகள்
இன்று பல ஆரோக்கிய பிரச்சனைகளக்கு முக்கிய காரணமாக இருப்பது இரத்த அழுத்த பிரச்சனை தான். ஏனெனில் இரத்த அழுத்த பிரச்சனை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதுவும் உயர் இரத்த அழுத்தமானது இதய பிரச்சனையை தூண்டிவிடுவதோடு, மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கும். அளவுக்கு அதிகமாக டீ குடிப்பது இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே உங்களுக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், வெறும் வயிற்றில் டீயை அதிகம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உடல் வறட்சி
வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் சந்திக்கும் மிகவும் அபாயகரமான ஒரு பக்கவிளைவு தான் உடல் வறட்சி. இதற்கு டீயில் உள்ள காப்ஃபைன் தான் காரணம். அதுவும் உங்கள் உடலில் ஏற்கனவே நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சர்க்கரை சேர்த்த டீயை வெறும் வயிற்றில் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் உடல் வறட்சி பிரச்சனை தீவிரமாகிவிடும்.

தலைவலி
பெரும்பாலானோர் தலை வலிக்கும் போது ஒரு கப் டீ குடிப்பார்கள். ஆனால் அந்த டீயை ஒருவர் அளவுக்கு அதிகமாக வெறும் வயிற்றில் குடித்தால், அது உடல் வறட்சிக்கு வழிவகுத்து, தலைவலியை உண்டாக்கும். எனவே உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது என்றால், சர்க்கரை கலந்த பால் டீ குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications
