Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த பழக்கங்கள் புற்றுநோயை உங்கள் வாழ்க்கையில் இருந்து ரொம்ப தூரத்தில் வைக்குமாம்... கண்டிப்பா பண்ணுங்க!
புற்றுநோய் என்பது ஒரு உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது அனைத்துத் தரப்பு மக்களையும் தனிநபர்களையும் பாதிக்கிறது. நமது வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் சில புற்றுநோய்கள் வருவதற்கான அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும்
புற்றுநோய் என்பது ஒரு உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது அனைத்துத் தரப்பு மக்களையும் தனிநபர்களையும் பாதிக்கிறது. நமது வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் சில புற்றுநோய்கள் வருவதற்கான அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும்.

ஆய்வுகளின் படி, நீண்ட காலத்திற்கு உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் என்பதை வெளிப்படுத்துகிறது. இது புற்றுநோய் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பிற நாட்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் சில வாழ்க்கை முறை மாற்றங்களை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

டயட்
நாம் எதை உண்கின்றோமோ அதுவே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்பார்கள். புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்றவற்றை அதிகமாக உண்ணுதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைக் குறைப்பது புற்றுநோயைத் தடுக்கும் முதல் வழியாகும்.

எடைக்கட்டுப்பாடு
ஆரோக்கியமான எடையைப் பராமரித்தல் மற்றும் வயதாகும்போது எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாகச் சாப்பிடுவதன் மூலம் இதைச் செய்யலாம்.

உடல் செயல்பாடுகள்
வழக்கமான உடற்பயிற்சியின் மூலமும், தினமும் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். தினமும் 30-45 நிமிடங்கள் நடப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆல்கஹால்
மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல், அதிகப்படியான மது அருந்துதல் மார்பக, பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் உட்பட பல வகையான புற்றுநோய்களின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு குறைவாக மது அருந்துகிறீர்களோ அவ்வளவு நல்லது.

புகையிலை
புகைபிடித்தல் மற்றும் புகையில்லாத புகையிலை பொருட்கள் உட்பட அனைத்து வகையான புகையிலை பயன்பாட்டையும் தவிர்ப்பது பல புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

ஓய்வு
போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.



Click it and Unblock the Notifications