Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
எத பார்த்தாலும் எரிச்சலா வருதா?... இத மனசுல நெனச்சுக்கங்க...
எதற்கெடுத்தாலும் எரிச்சலடைகின்ற குணம் கொண்டவரான நீங்கள் எப்படி அதிலிருந்து மீண்டு வருவது என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
உங்களுக்கு எதற்கெடுத்தாலும் எரிச்சலா வருதா? இதோ அதற்கான டிப்ஸ்கள்
சிலர் எடுத்ததுக்கு எல்லாம் எரிச்சல் அடைவார்கள். சிலர் எரிச்சல் அடைவதே வாழ்க்கையாக வைத்திருப்பார்கள். இவர்களை உற்று நோக்கினால் தான் தெரியும் இவர்களுக்கு உள்ள சில பிரச்சினைகள் இருப்பது. நம் வாழ்க்கையில் நம்மைப் பற்றி ஏற்படும் சில பகுத்தறிவற்ற எண்ணங்கள், சூழல்கள் இந்த மாதிரியான எரிச்சலுக்கு காரணமாகின்றன.

மற்றவர்களை நாம் எப்படி நினைக்கிறோம் என்பதை பொருத்தும் நம் மனநிலை இருக்கிறது. இந்த மாதிரியான மன நிலை கூட நம் மனதில் எரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.இந்த எரிச்சல் மனப்பான்மையை அப்படியே விட்டால் மன அழுத்தம் ஏற்படக் கூடும். சரி வாங்க நமக்கு எரிச்சல் தரக்கூடிய விஷயங்களை எப்படி போக்க லாம் என இப்பொழுது பார்ப்போம்.

நான் எல்லா விஷயத்தையும் புரிந்தவன் அல்ல
சிலர் நம்மிடம் கூறுவதை நாம் தவறாக புரிந்து கொள்ளும் போது எரிச்சல் உண்டாகும். எல்லாரும் எல்லாரைப் பற்றியும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அடுத்தவர்கள் ஒன்று சொன்னால் அதை அவர்கள் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்ள முற்படுங்கள். அடுத்தவரை நல்லவர், கெட்டவர் மற்றும் மோசமானவர் என்று தீர்ப்பளிக்க முயலாதீர்கள். இது உங்களுக்கு தேவையில்லாத எரிச்சலை தரும். மற்றவர்கள் உங்களை தரக்குறைவாக நினைக்கிறார்களா?, பயனற்றவராக நினைக்கிறார்களா இதெல்லாம் தேவையில்லாதது. நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மட்டும் யோசியுங்கள். அதுவே போதும். உங்களை நீங்களே மதிக்கா விட்டால் யார் உங்களை மதிப்பார்.

எந்த ஒரு ஆபத்தும் வேண்டாம் என இருப்பது
எந்த ஒரு ஆபத்தும் வேண்டாம் என இருப்பது தான் மிகப்பெரிய ஆபத்தே. எல்லாவற்றுக்கும் பயப்படவோ எரிச்சல் படவோ வேண்டாம். உங்களால் முடியும் என்று தெரியும் விஷயங்களுக்கு முயற்சி செய்யுங்கள். இரண்டு விதமான விருப்பங்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். உங்களது குறிக்கோளில் நீங்கள் விரும்பிய முடிவை பெறாமல் போகலாம், ஆனால் கற்றுக் கொள்ள வேண்டியதை நிறைய கற்றுக் கொள்வீர்கள்.

உறவு தோல்வியுற்றால் எனது தவறு என்று நினைக்காதீர்கள்
ஒரு உறவு தோல்வியுற்று விட்டால் அது முழுக்க எனது தவறு என்று நினைக்காதீர்கள். ஏனெனில் உறவு என்றாலே இரண்டு பேர்களின் பங்களிப்பு இருக்கும். இரண்டு பேர்களுமே உறவை வளர்க்க முயற்சிக்க வேண்டும். இருவரில் ஒருவர் முயற்சிக்கத் தவறினால் கூட உறவு மோசமடையத் துவங்கி விடும். இதற்காக நீங்கள் எரிச்சல் அடைய வேண்டாம். நீங்கள் தவறுகள் செய்து இருக்கலாம் ஆனால் எல்லாமே உங்கள் தவறு அல்ல.

மகிழ்ச்சியை இழப்பதை நினைத்து கவலைப்படுதல்
நம்முடைய எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப விஷயங்கள் நடப்பதை நினைத்து நாம் மகிழ்ச்சியாக இருக்கோம். ஆனால் அதுவே அப்பொழுது பிரச்சனைகள் எழுந்தால் மகிழ்ச்சி போகிறதே என்று எரிச்சல் அடைய ஆரம்பித்து விடுவோம். இப்படி ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை இழக்க பெரிதும் பயப்படுகின்றனர். இந்த பயமே அவர்களை மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் செய்து விடும். எனவே எதிர்காலத்தை பற்றி யோசிப்பதை விட்டு விடுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் வேண்டாம். நீங்கள் முதலில் இந்த நேரத்தில் வாழ்ந்து விடுங்கள்

என் வாழ்க்கை என் வழி அல்ல
வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதுக்கும் உங்கள் எரிச்சலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. வாழ்க்கை என்பது முடிவில்லாத ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது. ஆனால் அதற்காக எப்பொழுதும் துக்கப்படுவீர்கள் என்று அர்த்தமில்லை. வாழ்க்கையை அழகாக்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது.

செய்வதற்கு எந்த விஷயமும் இல்லை
நாம் பல நேரங்களில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சரியானவரா என்று சோதித்து கொண்டே இருப்போம். ஆனால் ஒவ்வொரு முறையும் அப்படி செய்வது சரியானது கிடையாது. இது உங்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மையும் முடிவு எடுக்காத நிலையையும் கொடுக்கும்.

தவறு செய்தும் முட்டாளாக இருக்காதீர்கள்
தவறு செய்வது பரவாயில்லை. ஆனால் முட்டாளாக இருக்காதீர்கள். செய்த தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் விட்டு விட்டு சதா செய்த தவறையே நினைத்து முட்டாளாக இருக்காதீர்கள்.

சுய பராமரிப்பு சுயநலம் ஆகாது
உங்கள் சுய பராமரிப்பு ஒரு போதும் சுயநலம் ஆகாது. மற்றவர்களுக்கு முன்பாக உங்கள் சுயத்தை கவனிப்பது முக்கியம். நீங்கள் முதலில் உங்களை நேசிக்கும் போது தான் உங்களைச் சுற்றி மகிழ்ச்சியையும், அன்பையும் பரப்ப முடியும்.நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாக மாறுங்கள்.

நான் வெற்றியாளனாக இருக்க வேண்டும்
நான் எப்பொழுதும் வெற்றியாளனாள இருக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் என்னை விரும்புவார்கள் என்ற எண்ணம் வேண்டாம். உங்களை நேசிக்காதவர்களிடமிருந்து விலகி இருங்கள். உங்கள் வெற்றி தோல்வி எல்லாரையும் மகிழ்விப்பது கிடையாது. எனவே அது குறித்து கவலை கொள்ளாதீர்கள். உங்கள் இயல்புக்கு உண்மையாக இருங்கள். அது போதும்.
எல்ல நேரத்திலும் மகிழ்ச்சியான நபர் நீங்களே என நம்புங்கள். எரிச்சல் ஊட்டும் விஷயங்களை தள்ளி வையுங்கள். மகிழ்ச்சியை நோக்கி நடைபோடுங்கள். வாழ்க்கை வசந்தமாகும்.



Click it and Unblock the Notifications