Latest Updates
-
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்! -
செவ்வாய் மேஷ ராசியில் உதயமாவதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?
வீட்டில் உள்ள காற்று மாசடைவதற்கு எதுலாம் காரணம்-ன்னு தெரியுமா?
வீட்டிற்குள் இருக்கும் காற்று மாசடைவதற்கு காரணமாக இருப்பவற்றை விரைவில் கண்டுபிடித்து அவற்றை நீக்கி, நமது குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும்.
பொதுவாக வெளிப்புறக் காற்றிலிருந்து வரும் மாசுகளில் இருந்து தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால் வீட்டுக்குள் இருக்கும் காற்றின் தரத்தையோ அல்லது அவற்றில் கலந்து இருக்கும் மாசுகளைப் பற்றியோ நாம் கவலைப்படுவதில்லை. வீட்டிற்குள் வீசும் காற்று மாசு அடைந்திருந்தால் அது நமக்குத் தீங்கை ஏற்படுத்தும். வீட்டிற்குள் வீசும் காற்றில் புகைமூட்டம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வெளிப்புற மாசுகளைப் போலவே வீட்டிற்குள் இருக்கும் மாசுகளும் கெடுதலை ஏற்படுத்தும். பெரும்பாலும் நாம் வீட்டிற்குள் இருக்கும் மாசுகள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை.
பொதுவாக வெளிப்புறத்தில் இருக்கும் மாசுகளைவிட வீட்டிற்குள் இருக்கும் மாசுகள் 2 முதல் 5 மடங்கு அதிகமாக இருக்கின்றன என்றும் சில இடங்களில் 100 மடங்கு அதிகமாக இருக்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. மாசடைந்த காற்றை சுவாசித்தால் மூச்சுத் திணறல், மூச்சுக் குழாய் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே வீட்டிற்குள் இருக்கும் காற்று மாசடைவதற்கு காரணமாக இருப்பவற்றை விரைவில் கண்டுபிடித்து அவற்றை நீக்கி, நமது குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும்.

சமையலறை
வீட்டில் இருக்கும் காற்று மாசடைவதற்கு முக்கிய காரணமாக சமையலறை இருக்கிறது. குறிப்பாக டெஃப்ளான் (Teflon) பூச்சு பூசப்பட்ட சமையல் பாத்திரங்கள், சரியாக அமைக்கப்படாத எரிவாயு அடுப்புகள் போன்றவை வீட்டிற்குள் தீங்கான வாயுக்கள் மற்றும் இரசாயனங்களை வெளியேற்றக் கூடியவை. இவை குமட்டல், தலைவலி, சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

புகைப்பிடிப்பவர்கள் விடும் புகை
புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையை அவர்களே நுகர்ந்தாலும் அல்லது அதை அடுத்தவர்கள் நுகர்ந்தாலும் எந்த அளவிற்கு அது தீங்கை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு வீட்டிற்குள் புகைப்பிடிப்பதால் வெளியிடப்படும் புகையும் வீட்டிற்குள் படிந்து தீங்குகளை ஏற்படுத்தும். குறிப்பாக வீட்டில் புகைப் பிடிக்கும் போது வெளிவரும் நச்சுப் புகை துணிமணிகள், சுவர், மரச்சாமான்கள், கம்பளம், தலையணைகள் போன்றவற்றில் ஒட்டிக் கொள்கிறது. அந்தப் புகை வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்களை ஏற்படுத்துகிறது. ஆகவே வீட்டில் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சுவரில் அடிக்கும் வண்ணங்கள்
நமது வீட்டுச் சுவர்களில் அடிக்கும் வண்ணச் சாயங்களில் எதிர்வினை ஆற்றக்கூடிய கரிம சேர்மங்கள் இருக்கின்றன. வண்ணச் சாயங்கள் காய்வதற்கு முன்பாக அதிலிருக்கும் தீங்கிழைக்கக்கூடிய கரிம சேர்மங்கள் காற்றில் கலந்து சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். ஆகவே வீட்டிற்கு வண்ணம் பூசும் போது கரிம சேர்மங்கள் இல்லாத அல்லது கரிம சேர்மங்கள் குறைந்த சாயங்களைப் பூசுவது நல்லது. மேலும் வீட்டுச் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். அதோடு சாயங்கள் இருக்கும் டப்பாக்களை மூடி வைக்க வேண்டும்.

கம்பளங்கள்
வீட்டுத் தரைகளில் விரித்திருக்கும் கம்பளங்கள் புதிதாக இருந்தாலும் அல்லது பழையதாக இருந்தாலும் அது வீட்டுக் காற்று மாசடைவதற்கு காரணமாக இருக்கிறது. புதிய கம்பளத்தில் இருக்கும் நார் பொருள்கள் மற்றும் பிசின் போன்றவை தீங்கிழைக்கக்கூடிய வாயுக்களை வெளிப்படுத்தும். அதே நேரத்தில் பழைய கம்பளத்தில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய தூசிகள், செல்லப் பிராணிகளின் கழிவுகள் போன்றவை ஒட்டியிருக்கும். தங்கள் வீடுகளில் பழைய கம்பளத்தை எடுத்துவிட்டு புதிய கம்பளத்தை மாற்றும் போது, தலைவலி, தடிப்புகள், கண் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்படுவதாக பலர் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க கம்பளத்தை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது நல்லது.

வீட்டைச் சுத்தம் செய்யும் பொருட்கள்
வீட்டை சுத்தம் செய்வதற்காக பல சுத்தம் செய்யக்கூடிய பொருட்களை வாங்குகிறோம். அந்த சுத்தம் செய்யும் பொருட்களில் இருக்கும் இரசாயனங்கள் தீங்கு விளைவிக்கும் நச்சுத் துகள்களை வெளியிட வாய்ப்பு உள்ளன. அவை வீட்டை மாசுபடுத்திவிடும். ஆகவே வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை வாங்கும் போது, அவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் விவரங்களைப் பார்த்து, தூசுப்படலம் இல்லாத மற்றும் வாசனை இல்லாத பொருட்களாகப் பார்த்து வாங்க வேண்டும்.



Click it and Unblock the Notifications