Latest Updates
-
கேது கடக ராசிக்குள் செல்வதால் 18 மாதங்களுக்கு நரகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும் -
இந்த 5 ராசிக்காரங்க பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல... அதை பல மடங்கு பெருக்குவதிலும் வல்லவர்களாம்!
உங்களுக்கே தெரியாமல் நீங்க உண்ணும் இந்த உணவுகளில் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காஃபின் அதிகமுள்ளதாம்!
வெப்பமான காலநிலையில் பெரும்பாலான மக்கள் விரும்பும் கோலாஸ் மற்றும் பிற இனிப்பு ஃபிஸி பானத்திலும் காஃபின் உட்கொள்ளல் அதிகம்.
இரவு கண் விழித்து வேலை செய்ய வேண்டுமா? அல்லது அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சிக்கு செல்ல வேண்டுமா? இந்த செயல்களில் எப்போதும் உங்களுக்கு முதலில் நியாபகத்திற்கு வருவது காபிதான். ஒரு கப் சூடான காபி நம்மை உற்சாகப்படுத்தவும், நமது செறிவு சக்தியை அதிகரிக்கவும், நம் மனநிலையை உயர்த்தவும் போதுமானது. ஒரு நாளில் 400 மில்லி காபி குடிப்பது நடுத்தர வயது வந்தவருக்கு ஆரோக்கியமானது மற்றும் போதுமானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் அதற்கு அடிமையாகும்போது உண்மையான பிரச்சினை தொடங்குகிறது.

காஃபின் அதிகமாக உட்கொள்வது நீரிழப்பு மற்றும் பதட்டம் போன்ற பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். காஃபின் முக்கிய ஆதாரம் காபி என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கணிசமான அளவு காஃபின் கொண்டிருக்கும் பல உணவுப் பொருட்களும் உள்ளன. மேலும் உங்கள் அன்றாட அளவைக் குறைக்க முயற்சிக்கும்போது சிக்கலாக இருக்கலாம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மறைக்கப்பட்ட காஃபின் ஆதாரங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

சாக்லேட்
காஃபின் இயற்கையாகவே கோகோ பீன்ஸ் காணப்படுகிறது. எனவே, உங்களுக்கு பிடித்த சாக்லேட்டில் ஓரளவு தூண்டுதலும் இருக்கலாம். பால் சாக்லேட்டில் குறைந்த அளவு காஃபின் இருக்கலாம். ஆனால் டார்க் சாக்லேட்டில் பொதுவாக 10 மில்லிகிராம் காஃபின் உள்ளடக்கம் உள்ளது. சாக்லேட் ஐஸ்கிரீமில் கூட காஃபின் உள்ளன.

பானம்
வெப்பமான காலநிலையில் பெரும்பாலான மக்கள் விரும்பும் கோலாஸ் மற்றும் பிற இனிப்பு ஃபிஸி பானத்திலும் காஃபின் உட்கொள்ளல் அதிகம். காஃபின் உள்ளடக்கம் ஒரு பாட்டிலுக்கு 23 மில்லிகிராம் முதல் 41 மில்லிகிராம் வரை மாறுபடும். மேலும், இதன் அளவு வெவ்வேறு பிராண்டுகளிலிருந்து மாறுபடும். உங்கள் வொர்க்அவுட் அமர்வுக்குப் பிறகு நீங்கள் குடிக்கும் எனர்ஜி பானத்தில் கூட ஓரளவு காஃபின் உள்ளது.

ஐஸ் டீ
தேநீரில் ஓரளவு காஃபின் இருப்பதை நாம் அறிவோம். ஐஸ்கட் டீயிலும் அது இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், பீச் மற்றும் எலுமிச்சை உள்ளிட்ட சுவையான ஐஸ்கட்-டீயும் காஃபின் மூலமாக இருப்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள். இதில், 500 மில்லிக்கு 42 மி.கி காஃபின் கொண்டிருக்கலாம்.

வலி நிவார்ணி
தலைவலி அல்லது மூட்டு வலியால் அவதிப்படும்போது மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் நம் அனைவருக்கும் உள்ளது. பெரும்பாலும், நாம் வலி நிவார்ணி மாத்திரைகளைதான் எடுத்துக்கொள்ளுகிறோம். ஆனால் உங்களுக்குத் தெரியாத விஷயம் என்னவென்றால், உங்கள் வலி நிவாரணியில் கொஞ்சம் காஃபின் உள்ளது. ஒரு சிறிய அளவு காஃபின் வலியைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சில மருந்து நிறுவனங்கள் இதை வலி நிவாரணியில் சேர்க்கின்றன.

புத்துணர்ச்சியை சுவாசிக்கவும்
சூயிங் கம் அல்லது குமிழி கம், கிட்டத்தட்ட எல்லா வகையான வாய் புத்துணர்ச்சிகளிலும் சில அளவு காஃபின் உள்ளது. நீங்கள் உங்கள் வாயில் துறுநாற்றம் வீசாமல் இருக்க சாப்பிடும் ஃப்ரஸ்னர் பிராண்டுகளில் உள்ள காஃபின் உள்ளடக்கம் ஒரு கப் காபியில் காணப்படும் அளவுக்கு சமமாக உள்ளது. எனவே, அடுத்த முறை நீங்கள் எந்த புதினா ஃப்ரஸ்னர் வாங்கும்போது, அதன் லேபிளைப் படிக்க மறக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
