Latest Updates
-
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...!
பெரும்பாலும் உடலுறவிற்கு பிறகு மக்கள் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், ஆனால் உடலுறவிற்கு பிறகு சாப்பிடும் பழக்கம் கொண்ட மக்களும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறார்கள்.
அனைவருக்குமே தங்கள் துணையுடன் திருப்திகரமான மற்றும் தீவிரமான உடலுறவில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை இருக்கும். பெரும்பாலும் உடலுறவிற்கு பிறகு மக்கள் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், ஆனால் உடலுறவிற்கு பிறகு சாப்பிடும் பழக்கம் கொண்ட மக்களும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறார்கள்.

ஆராய்ச்சியின் படி, தீவிரமான உடலுறவு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 150 கலோரிகளை எரிக்கும். எனவே, தீவிர உடலுறவிற்குப் பிறகு பசியுடன் இருப்பது இயல்பானதுதான், ஆனால் உடலின் செயல்பாடு உடலுறவுக்குப் பிறகு இயல்பானதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், இதனால் ஹெவியான உணவுகளை சாப்பிடுவது சில ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடலுறவுக்குப் பிறகு நீங்கள் ஒருபோதும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பீட்சா
நிபுணர்களின் கூற்றுப்படி, சீஸ் உடன் சுத்திகரிக்கப்பட்ட மாவு சாப்பிடுவது ஒரு தீவிர உடலுறவிற்குப் பிறகு உங்கள் உடலை எரிச்சலடையச் செய்யலாம். எனவே பீட்சா போன்ற துரித உணவுகளைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் உடலுறவிற்குப் பிறகு, இரத்த ஓட்டம் மிக அதிகமாக உள்ளது மற்றும் பீட்சா போன்ற கனமான உணவுகளை ஜீரணிக்க குடலுக்கு இது ஒரு கடினமான சூழ்நிலையாக மாறும்.

காபி/டீ
காபி மற்றும் தேநீர் இரண்டிலும் காஃபின் உள்ளது மற்றும் உடலுறவுக்குப் பிறகு இவற்றைக் குடிப்பது உங்களை விழித்திருக்க வைக்கும் மற்றும் தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்களைத் தொந்தரவு செய்யும். உடலையும் மனதையும் அமைதிப்படுத்த உடலுறவுக்குப் பிறகு தூங்க அல்லது பவர் ஸ்னாப் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

சிப்ஸ்
சிப்ஸ்கள் பதப்படுத்தப்படுகின்றன, வறுத்தெடுக்கப்படுகின்றன மற்றும் அதிக அளவு சோடியம் கொண்டிருக்கின்றன, அவை உடலுறவுக்குப் பிறகு உங்களை உற்சாகப்படுத்தக்கூடும், ஆனால் இது ஒரு தீவிரமான உடலுறவுக்குப் பிறகு தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

சீஸ்
பாலாடைக்கட்டியில் சோடியம் மற்றும் கொழுப்பு அதிகம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கல்லீரல் அல்லது செரிமான பிரச்சனை உள்ளவர்கள், உடலுறவுக்குப் பிறகு இதனை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது செரிமான அமைப்பின் அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் ஜீரணிக்க கடினமாக மாறுகிறது.

ஆல்கஹால்
உடலுறவுக்குப் பிறகு ஆல்கஹால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஒன்றாகும், ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை மேலும் மெதுவாக்கும் மற்றும் எரிச்சல், பலவீனம் மற்றும் தலைச்சுற்றலுக்கு வழிவகுக்கும்.

முட்டை
இவற்றில் புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன, அவை ஜீரணிக்க சற்று கடினமாக இருக்கும். மேலும், அவை போதுமான இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாததால், உடனடி ஆற்றல் ஊக்கத்தை வழங்க ஏற்றவை அல்ல. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இதில் கொழுப்பு அதிகம் உள்ளது மற்றும் உடலுறவுக்குப் பிறகு அதை சாப்பிடுவது உடலில் அமைதியின்மையை உருவாக்கும். எனவே ஒரு தீவிரமான உடலுறவுக்குப் பிறகு இதனைத் தவிர்ப்பது நல்லது.

என்ன சாப்பிட வேண்டும்?
உடலுறவிற்கு பிறகு நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவெனில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளாகும். உதாரணமாக, பழங்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும், ஏனெனில் அவை உடனடி ஆற்றலையும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் வழங்கும். முந்திரி மற்றும் பிஸ்தா போன்ற நட்ஸ்கள், திராட்சை போன்ற பிற இலகுவான உணவுப் பொருட்களை சாப்பிடலாம். அதேசமயம் உடலுறவிற்கு பிறகு நீங்கள் எதை சாப்பிட்டாலும் அதனை குறைவான அளவில் சாப்பிடுங்கள்.



Click it and Unblock the Notifications
