டெல்டா Vs டெல்டா பிளஸ் Vs கப்பா Vs லாம்ப்டா - இவற்றிற்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?

கொரோனா வைரஸ் தோன்றி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்று வரை இந்த வைரஸ் பலமுறை பிறழ்ந்துள்ளது. ஒவ்வொரு உருமாற்றமும் வைரஸின் தீவிரம் மற்றும் தொற்றுநோய் குறித்த பல புதிய கேள்விகளுடன், அச்சத்தையும் அதிகரிக்கிறது.

கொரோனா வைரஸ் தோன்றி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்று வரை இந்த வைரஸ் பலமுறை பிறழ்ந்துள்ளது. ஒவ்வொரு உருமாற்றமும் வைரஸின் தீவிரம் மற்றும் தொற்றுநோய் குறித்த பல புதிய கேள்விகளுடன், அச்சத்தையும் அதிகரிக்கிறது. அதில் இந்தியாவில் தோன்றிய கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு, முதன்முதலாக தோன்றிய கொரோனாவை விட தொற்றுநோயாக இருந்தது மற்றும் இது தான் இந்தியாவில் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாகவும் இருந்தது.

Coronavirus Variants: Difference Between Delta, Delta Plus, Lambda And Kappa COVID Variants

இந்த டெல்டா மாறுபாடு மேலும் உருமாற்றமடைந்து டெல்டா பிளஸ் மாறுபாட்டை உருவாக்கி, இது கவலைக்குரிய மாறுபாடு என பெயர் பெற்றது. இது தவிர, லாம்ப்டா மற்றும் கப்பா போன்ற பிற கொரோனா தொற்று வகைகளும், அபாயகரமானதாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இப்போது இந்த கொரோனா வகைகள் ஒன்றிற்கு ஒன்று எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெல்டா மாறுபாடு

டெல்டா மாறுபாடு

கொரோனாவின் டெல்டா மாறுபாடு அல்லது B.1.617.2 என்பது B.1.617 வைரஸ் பரம்பரையைச் சேர்ந்ததாகும். இது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாற்றமடைந்த வைரஸ் மற்றதை விட வேகமாக பரவக்கூடியது என்பது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் உலக சுகாதார அமைப்பு இதை ஒரு கவலையின் மாறுபாடு என வகைப்படுத்தியுள்ளது.

உருமாற்றமடைந்த வைரஸ் மாறுபாடு அதிவேகமாக பரவக்கூடியது மற்றும் இது பல நாடுகளில் கொரோனா வழக்கு அதிகரிப்பதற்கும் காரணமாக இருந்துள்ளது. இது தவிர, இந்த வைரஸ் அறிகுறிகளானது ஆரம்பத்தில் தோன்றிய கொரோனாவை விட கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும். மேலும் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்த மாறுபாட்டிற்கு எதிராக 8 மடங்கு குறைவான செயல்திறன் கொண்டவை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இப்படிப்பட்ட டெல்டா மாறுபாட்டின் வழக்குகள் இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலிலும் பதிவாகியுள்ளன.

டெல்டா பிளஸ் மாறுபாடு

டெல்டா பிளஸ் மாறுபாடு

டெல்டா பிளஸ் மாறுபாடு என்பது இந்தியாவில் தோன்றிய டெல்டா மாறுபாட்டின் உருமாற்றமாகும். இது முதன்முதலில் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் இது தான் பெரும்பான்மையான கோவிட் நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக இருந்தது. மேலும் இந்த வகை மாறுபாடு மேற்கு மாநிலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலையைத் தூண்டக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

டெல்டா பிளஸ் மாறுபாட்டின் அறிகுறிகள்

டெல்டா பிளஸ் மாறுபாட்டின் அறிகுறிகள்

டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனாவின் முதன்மை அறிகுறிகளைத் தவிர, வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தும். நீண்ட கால விளைவுகளாக மூட்டு வலிகள் மற்றும் செவித்திறன் குறைபாடு ஆகியவை ஏற்படலாம். இந்த டெல்டா பிளஸ் மாறுபாடு இந்தியாவைத் தவி உலகெங்கிலும் உள்ள 9 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் மாறுபாட்டின் வழக்குகள் இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, போலாந்து, நேபாளம், சீனா, இந்தியா மற்றும் ரஷ்யாவில் பதிவாகியுள்ளன.

கப்பா மாறுபாடு

கப்பா மாறுபாடு

கப்பா மாறுபாடு, B.1.167.1 என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்டது. இது கொரோனாவின் இரட்டை விகாரத்திரிபு ஆகும். ஏனெனில் இது E484Q பிறழ்வு and L452R பிறழ்வு ஆகிய இரண்டு வகை வைரஸ்களால் ஆனது. இதில் E484Q பிறழ்வு பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா வகைகளில் அடையாளம் காணப்பட்ட E484K பிறழ்வுக்கு ஒத்ததாக இருக்கிறது. அதே வேளையில் கலிபோர்னியாவில் தோன்றிய L452R பிறழ்வு, அதன் சிக்கலான தன்மை காரணமாக, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயற்கையான பாதுகாப்புகளில் இருந்து தப்பிக்கக்கூடியது. ஆகவே இதை உலக சுகாதார அமைப்பு 'ஆர்வத்தின் மாறுபாடு' என்று அடையாளம் கண்டுள்ளது.

கப்பா மாறுபாட்டின் ஆன்டிபாகிள் நடுநிலையான திறன்களைக் கொண்டுள்ளது என்றும், தடுப்பூசிகள் மற்றும் இயற்கையான தொற்றுகளில் இருந்து உருவாகும் நோயெதிர்ப்பு சக்தி ஆகிய இரண்டிற்குமான செயல்திறனைக் குறைக்கலாம் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. இந்த வகை மாறுபாடு தடிப்புகள், அதிக காய்ச்சல், மூக்கு ஒழுகல் மற்றும் கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற பல்வேறு அறிகுறிகளை உண்டாக்கும்.

லாம்ப்டா மாறுபாடு

லாம்ப்டா மாறுபாடு

உலக சுகாதார அமைப்பு லாம்ப்டா மாறுபாட்டை 'ஆர்வத்தின் மாறுபாடு' என்று கூறியுள்ளது. பெருவில் தோன்றிய லாம்ப்டா மாறுபாடு, கடந்த நான்கு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும், தென் அமெரிக்காவில் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் புதிய இந்த லாம்ப்டா மாறுபாட்டின் வழக்குகள் இன்னும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை. லாம்ப்டா மாறுபாடு L452Q மற்றும் F490S போன்ற மாறுபாடுகளின் குறிப்பிடத்தக்க மாற்றங்களால் உருவாகிறது. ஆகவே இது இந்த மாறுபாட்டை மேலும் கவலையடையச் செய்கிறது. லாம்ப்டா மாறுபாடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், மற்ற பிறழ்வுகளை விட தீவிரமான தொற்றுநோயை ஏற்படுத்துமா அல்லது சிகிச்சைகளுக்கு நன்கு பதிலளிக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

கொரோனா வைரஸின் B.11.318 மற்றும் B.1.617.3 வகைகள்

கொரோனா வைரஸின் B.11.318 மற்றும் B.1.617.3 வகைகள்

இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 பரம்பரையின் B.1.617.3 மாறுபாடு உள்ளது. அதாவது இது டெல்டா மாறுபாட்டின் உறவினர் என்றே கூறலாம். இருப்பினும் இது ஆர்வத்தின் அல்லது கவலையின் மாறுபாடாக இன்னும் உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தவில்லை.

இறுதியாக, B.11.318 என்ற மாறுபாடு ஒன்று உள்ளது. இது 14 பிறழ்வுகளைக் கொண்டது. இதில் கப்பா மாறுபாட்டிற்கு ஒத்த E484K ஸ்பைக் புரத பிறழ்வு உள்ளது. இதுவரை B.11.318 மாறுபாட்டின் இரண்டு மரபணு காட்சிகளை இந்தியா தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion