Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்த இடங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கணுமாம்... இல்லனா அவ்வளவுதான்!
கொடிய வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி உங்களுக்கு தடுப்பூசி போடுவதுதான், நீங்கள் இன்னும் தடுப்பூசி பெறவில்லை என்றால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
SARs-COV-2 வைரஸ் பல வழிகளில் கணிக்க முடியாததாக இருக்கிறது. பரவுதல் அல்லது தீவிரத்தின் அடிப்படையில், இது மக்களை பெரும் குழப்பம் மற்றும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், கோவிட் தடுப்பூசிகள் சிறந்த கவசமாக கருதப்படுகின்றன. தடுப்பூசி போட்டவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருந்தாலும், தடுப்பூசி கண்டிப்பாக கடுமையான தொற்று மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் அபாயத்தைக் குறைத்துள்ளது.

தடுப்பூசி போடப்படாத நபர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், தொற்றுநோய்கள் பரவும் அபாயத்திலும் இருக்கிறார்கள். கொடிய வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி உங்களுக்கு தடுப்பூசி போடுவதுதான், நீங்கள் இன்னும் தடுப்பூசி பெறவில்லை என்றால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதகள் தொற்றுநோய் அபாயத்தில் உள்ளனர்
இந்த கடுமையான தொற்றுநோயின் போது தடுப்பூசி போட காட்டப்படும் தயக்கம் ஒரு தீவிர பிரச்சனையாக உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் ஜப்களை எடுத்துக் கொண்டாலும், அதைப் பற்றி இன்னும் சந்தேகம் கொண்ட பலர் அதைவிட அதிகமாக உள்ளனர். சமீபத்தில் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் தொற்றுக்கு ஆளானதால் தடுப்பூசியின் செயல்திறன் பற்றி சந்தேகம் கொண்டுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் அறிவியல் வல்லுநர்கள் தடுப்பூசிகள் தொற்றுநோயைத் தடுக்கவில்லை என்றாலும், அது ஒரு நபரை கடுமையான தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது என்று தெளிவுபடுத்தினர். முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில், இன்னும் கோவிட் ஷாட் பெறாத நபர்கள் மூன்று மடங்கு நோய்த்தொற்று அபாயத்தில் உள்ளனர்.

தடுப்பூசி போடாதவர்கள் எங்கே, எப்போது கவனமாக இருக்க வேண்டும்?
தடுப்பூசி போடப்படாத நபர்கள் நோய்த்தொற்றுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர் மற்றும் வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதால், அவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. முதலில் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், குறிப்பாக தகுதியுள்ளவர்கள் மற்றும் வைரஸால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளவட்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கோவிட் -19 என்பது யாரையும் விட்டு வைக்காத ஒரு நோய் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் மற்றும் விழிப்புணர்வு தற்போது வைரஸுக்கு எதிரான இரண்டு சவாலாக உள்ளது. எனவே நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், நீங்கள் சரியான கவனிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள இடங்களுக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உணவகங்கள் மற்றும் டீக்கடை
நண்பர்களை உணவகம், ஓட்டலில் அல்லது மதுக்கடையில் சந்திப்பது புத்துணர்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கும். ஒரு வருடத்திற்கும் மேலாக தொற்றுநோய் மற்றும் வைரஸைப் பிடிக்கும் என்ற பயம் இன்னும் நம் மனதில் உள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கு, இது இன்னும் ஆபத்தானது. உணவகம் அல்லது கஃபே போன்ற இடங்களுக்குச் செல்வது மகிழ்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் மிகவும் பாதுகாப்பாக இல்லை. கோவிட் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தவிர, தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்புகள் ங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் இன்னும் பலர் தடுப்பூசி போடவில்லை, எனவே வைரஸ் பரவும் ஆபத்து இன்னும் உள்ளது. நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் நீங்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்.

தியேட்டர்
தமிழநாட்டில் தியேட்டர்கள் இன்னும் திறக்க அனுமதிக்கப்படவில்லை, இருப்பினும் தீர்க்கப்பட்டவுடன் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடமிது. திரையரங்குங்கள் திறந்த பின்னரும், நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் அங்கு செல்வதைத் தவிர்க்கவும். இது ஒரு மூடப்பட்ட இடம் மற்றும் தடுப்பூசி போடப்படாத நபர்களையும் உள்ளடக்கியிருப்பதால், நீங்கள் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளீர்கள், மேலும் அதை மற்றவர்களுக்கும் பரப்பலாம்.

நெரிசலான இடங்கள்
தடுப்பூசி போடாதவர்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு வருகைத் தருவைத்து, அங்கு தொற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். அனைவரின் கூச்சல், ஆரவாரம், சிரிப்பு, பேச்சு உங்களை உற்சாகமடைய வைக்கலாம். மக்களில் சிலர் கோவிட் விதிகளை மீறி சில நேரங்களில் முகமூடி இல்லாமல் அலையலாம். இதனால் நீங்கள் எந்த வகையிலும் வைரஸிலிருந்து பாதுகாக்கப்பட மாட்டீர்கள், அதனால்தான் இதுபோன்ற இடங்களைத் தவிர்ப்பது நல்லது.

கூட்டமான பொது போக்குவரத்து
இந்தியாவில் பொது போக்குவரத்து என்பது மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுகிறது. இது பெரும்பாலான நேரங்களில் கூட்டமாக இருக்கும் மற்றும் இன்றைய காலத்திலும் கூட அப்படியே உள்ளது. போக்குவரத்து தொடர்பாக சில சமூக விலகல் விதிகள் வகுக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், சிறிது காலம் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மிகவும் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் உங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும்.

எப்படி உங்களை பாதுகாப்பது?
உங்களில் இன்னும் உங்கள் கோவிட் தடுப்பூசிகளைப் பெறாதவர்கள் முதலில் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சாத்தியமான மூன்றாவது அலை எந்த நேரத்திலும் எழலாம் என்பதால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அது தவிர, நீங்கள் ஒரு கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே இருங்கள் மற்றும் உங்கள் பயணங்களைக் கட்டுப்படுத்துங்கள். நெரிசலான இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, ஒவ்வொரு வெளிப்புற அமைப்பிலும் முகமூடியை அணியுங்கள். சரியான கை சுகாதாரத்தை பயிற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications