Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
இந்த பிரச்சினைகளில் ஒன்னு இருந்தாலும் உங்க செக்ஸ் வாழ்க்கை....ரொம்ப கஷ்டமா இருக்குமாம் தெரியுமா?
அனைவரின் வாழ்க்கையிலும் உடலுறவு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உங்களை நன்றாக உணர வைக்கிறது. உடலுறவு கொள்வதை ஒரு வேலையாக உணரக்கூடாது.
அனைவரின் வாழ்க்கையிலும் உடலுறவு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உங்களை நன்றாக உணர வைக்கிறது. உடலுறவு கொள்வதை ஒரு வேலையாக உணரக்கூடாது. இது உங்களுக்கு பயத்தையோ, பதட்டத்தையோ அல்லது அசௌகரியத்தையோ ஏற்படுத்தக்கூடாது குறிப்பாக வலியை ஏற்படுத்தக்கூடாது.

உடலுறவு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் மாறாக அது வலியை ஏற்படுத்தக் கூடாது. உடலுறவு உண்மையில் வலி அல்லது அசௌகரியமாக இருந்தால், அது நிறைய விஷயங்களைக் குறிக்கும். அதற்கு சில காரணங்கள் உடல்ரீதியாக இருக்கலாம், சில காரணங்கள் உளவியல்ரீதியானதாக இருக்கலாம். என்ன காரணமாக இருந்தாலும், வலிமிகுந்த உடலுறவை புறக்கணிக்கக்கூடாது. வலிமிகுந்த உடலுறவுக்கான பொதுவான காரணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிறப்புறுப்பில் வறட்சி
யோனியில் போதுமான உயவு இல்லாத போது யோனி வறட்சி ஏற்படும். உங்கள் பிறப்புறுப்பில் உள்ள திசுக்கள் வறண்டு, மெல்லியதாகவும், ஈரப்பதம் இல்லாததாகவும் இருக்கும் போது இது நிகழ்கிறது என்று ஆய்வுகள் விளக்குகிறது. இது ஊடுருவும் உடலுறவை மிகவும் அசௌகரியமாகவும், வலி நிறைந்ததாகவும் மாற்றும். இது பொதுவாக மாதவிடாய் நிறுத்தம், ஹார்மோன்கள் குறைதல் (ஈஸ்ட்ரோஜன்), தாய்ப்பால் மற்றும் சில மருந்துகளுடன் தொடர்புடையது.

வஜினிஸ்மஸ்
வஜினிஸ்மஸ் என்பது ஒரு வகையான வினோதமான பாலியல் செயலிழப்பு ஆகும், இதில் யோனி தசைகள் ஊடுருவல் உடலுறவின் மீதான பயம் காரணமாக தானாக இறுக்கமடைகின்றன. இது யோனியின் இறுக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும் தற்செயலாக தசைப்பிடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆண்குறி, விரல், டம்போன் அல்லது மருத்துவ கருவி உட்பட யோனிக்குள் என்ன நுழைந்தாலும், வஜினிஸ்மஸ் ஏற்பட்டால் வலி ஏற்படும்.

பாக்டீரியா அல்லது ஈஸ்ட் தொற்று
ஈஸ்ட் அல்லது பாக்டீரியல் வஜினோசிஸ் போன்ற பாக்டீரியா தொற்றுகள், வால்வார் அல்லது பிறப்புறுப்பு திசுக்களில் எரிச்சலை ஏற்படுத்தலாம், இது உடலுறவின் போது உடனடி வலிக்கு வழிவகுக்கும். ஸ்க்வாமஸ் ஹைப்பர் பிளாசியா அல்லது லிச்சென் ஸ்க்லரோசஸ் போன்ற தோல் நிலைகளும் வால்வார் தோலை சேதப்படுத்தலாம் மற்றும் எரிச்சலூட்டலாம், இது தொட்டாலே வலியை ஏற்படுத்தும். நீங்கள் ஈஸ்ட் தொற்றுடன் உடலுறவு கொண்டால், அது மிகவும் வேதனையாகவோ அல்லது மிகவும் சங்கடமாகவோ இருக்கலாம். வீங்கிய லேபியா மற்றும் வுல்வாவுடன்இருக்கும் போது, சருமத்துடன் சருமம் தொடர்பு கொள்வது அசௌகரியமாக இருக்கும்.

வல்வோடினியா
வல்வோடினியா என்பது பெண்ணுறுப்பில் ஒரு தொடர்ச்சியான, விவரிக்க முடியாத வலி ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். இது கருப்பை வலி என்றும் அழைக்கப்படுகிறது, இது எல்லா வயதினருக்கும் ஏற்படும். இது வலிமிகுந்த உடலுறவுக்கு வழிவகுப்பதைத் தவிர, இது எரிச்சல், வலி அல்லது புண் போன்ற வலிக்கு வழிவகுக்கும். மேலும், உடலுறவின் போது இது தொடுதலால் தூண்டப்படலாம். உட்காரும்போது இந்த வலி அதிகமாகலாம்.

எண்டோமெட்ரியோசிஸ்
எண்டோமெட்ரியோசிஸ் என்பது உங்கள் கருப்பையின் உட்புறத்தில் உள்ள திசுக்கள் கருப்பைக்கு வெளியே வளரும் ஒரு சிக்கலாகும். எண்டோமெட்ரியோசிஸ் கொண்ட பெண்கள் இடுப்பு வலி அல்லது அடிவயிற்று அசௌகரியத்தை அனுபவிக்கலாம். மேலும் இது டிஸ்மெனோரியா, வலிமிகுந்த மாதவிடாய் காலங்கள், கீழ் முதுகு வலி, உடலுறவின் போது வலி, கருவுறாமை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
