Latest Updates
-
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
கொரோனா தடுப்பூசி போட்டதும் இந்த விஷயங்களை செய்யாதீங்க... இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...
கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் ஒருசில விஷயங்களை கட்டாயம் செய்யக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மக்களிடையே போட ஆரம்பித்த பின்னர், இதுவரை பலர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுள்ளனர். ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள பலர் தயக்கம் கொண்டார்கள். ஏனெனில் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று பலர் கூறினார்கள். ஆனால் அவ்வாறு சந்திக்கும் பக்கவிளைவுகள் அனைத்தும் சாதாரணம் மற்றும் ஓரிரு நாட்களில் சரியாகக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளார்கள். மேலும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டால், நோய்த்தொற்றின் தீவிரத்தை தடுக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே தற்போது பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுவதோடு, தடுப்பூசி போட்ட பின் என்ன வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதையும் அறிய விரும்புகிறார்கள். முக்கியமாக கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் ஒருசில விஷயங்களை கட்டாயம் செய்யக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். கீழே ஒருவர் கோவிட் தடுப்பூசியைப் போட்ட உடனேயே செய்யக்கூடாத விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாஸ்க் அணிவதைத் தவிர்க்கக்கூடாது
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டால், உங்களுக்கு கொரோனாவை எதிர்ப்பதற்கான எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைத்துவிட்டது என்று அர்த்தமல்ல. தடுப்பூசி போட்டவர்களாலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனாவை பரப்ப முடியும். எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், மறக்காமல் மாஸ்க் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருக்கக்கூடாது
கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள், கூட்டமான இடத்திற்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். இது உங்களுக்கு மட்டுமின்றி, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லது. ஏனெனில் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், கொரோனா வரக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அறிகுறிகளை சந்தித்தால் மருத்துவரை அணுகாமல் இருக்கக்கூடாது
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் உங்களுக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் தெரிந்தால், தடுப்பூசி போட்டதால் தானாக சரியாகிவிட்டும் என்று சாதாரணமாக நினைக்காமல், சற்றும் தாமத்திக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

டாட்டூ போடக்கூடாது
கொரோனா தடுப்பூசி போட்டதும் டாட்டூ போடக்கூடாது. ஏனெனில் தடுப்பூசிக்கு பின் இச்செயலை மேற்கொண்டால், அது நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும். எனவே சில நாட்கள் காத்திருப்பது நல்லது. மேலும் தடுப்பூசி போட்ட பின் டாட்டூ போடுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

மற்ற தடுப்பூசி போடக்கூடாது மற்றும் பதிவு செய்யக்கூடாது
நீங்கள் ஏற்கனவே முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால், உடனேயே வேறு தடுப்பூசி போடவோ அல்லது பதிவு செய்யவோ கூடாது. ஏனெனில் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கோவிட் 19 தடுப்பூசி மற்றவையுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளும் என்பது குறித்து இன்னும் போதுமான தகவல்கள் இல்லை. எனவே மற்றொரு வகையான தடுப்பூசியைப் பெற குறைந்தது இரண்டு வாரங்கள் காத்திருப்பது நல்லது.

கடுமையான உடற்பயிற்சி செய்யக்கூடாது
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட உடனேயே கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது. பொதுவாக கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது.

நீர் அதிகம் அருந்தவும்
மற்ற நாட்களில் தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருக்கலாம். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டால், உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதற்கு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இதனால் தடுப்பூசிக்கு நமது உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு நீர் உதவுகிறது.

தடுப்பூசி அட்டையை தொலைக்காதீர்கள்
கொரோனா தடுப்பூசிக்கான அட்டையை தொலைக்காதீர்கள். இது ஒரு மருத்துவ ஆலோசனை அல்ல. ஆனால் தடுப்பூசியை அட்டையை வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இந்த அட்டை எப்போது, எங்கு தேவைப்படும் என்பது நமக்குத் தெரியாது என்பதால், தொலைத்துவிடாமல் வைத்துக் கொள்வது நல்லது.

தடுப்பூசிக்கு பின் மது அருந்தக்கூடாது
தடுப்பூசி போட்ட பிறகு ஆல்கஹால் அருந்துவது ஏதேனும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று இதுவரை எந்த ஒரு ஆய்வும் இல்லை என்றாலும், சில நாட்களுக்கு ஆல்கஹால் அருந்தாமல் இருப்பது நல்லது. பொதுவாக தடுப்பூசி போட்ட பின், அந்த தடுப்பூசியானது உடலினுள் செயல்பட ஆரம்பித்து ஒருசில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுவதால், சில நாட்கள் ஆல்கஹாலில் இருந்து விலகி இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications