Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
ஆண்களுக்கு ஆண்மை குறையை ஏற்படுத்த கூடிய வீட்டில் உள்ள பொருட்கள் என்னென்ன..?
வீடு என்றாலே பல வித பொருட்கள் இருக்க தான் செய்யும். அவற்றின் தன்மை பெரும்பாலும் நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை. வீட்டில் ஒவ்வொரு முறையும் நாம் வாங்கி வைக்க கூடிய பொருளை ஒரு சில நாட்களிலே நாம் மறந்து விடுவோம். அடுத்த முறையும் அதே பொருளை வாங்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது.

பொருட்களை வாங்குவது தவறில்லை. ஆனால், அவற்றின் தன்மை அறிந்து நாம் வாங்கி பயன்படுத்த வேண்டும். நாம் வாங்க கூடிய அதிகபட்சமான பொருட்கள் நமது ஆயுளையே குறைத்து விடும் என தற்போதைய ஆராய்ச்சிகள் கூறியுள்ளன. அத்துடன் ஆண்களுக்கு ஆண்மை குறைவை உண்டாக்கும் எனவும் கண்டறிந்து உள்ளனர்.
இந்த வகை பொருட்கள் நமக்கு புற்றுநோய், மலட்டு தன்மை, உடல் எடை கூடுதல் போன்ற பின் விளைவுகளை தந்து நம்மை மரணத்தின் வாசலுக்கே கொண்டு செல்கிறது. சரி, வாங்க இப்படி நம் உயிரை குடிக்கும் அந்த பொருட்கள் என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

விஷம் கொண்ட உலகம்..!
நாம் இருக்க கூடிய எல்லா இடங்களிலும் நம்மை ஒரு வித விஷ தன்மை, கால்களை சுற்றிய பாம்பு போல சுற்றி வருகின்றன. இவை தான் நம் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி சாப்பிட கூடியவை.
நாம் பயன்படுத்தும் வீட்டு பொருட்களில் இந்த நச்சு தன்மை அதிக அளவில் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் அவ்வளவு தான்..!

Non-stick பாத்திரங்கள்
பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் இந்த Non-stick பாத்திரங்கள் அதிக அளவில் இருக்கும். சுலபமாக சமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நாம் பயன்படுத்தும் இந்த பொருள் அதிக விஷ தன்மை கொண்டதாம்.
காரணம் இவற்றை தயாரிக்க பயன்படுத்தும் perfluorooctanoic acid என்கிற கொடிய விஷ தன்மை கொண்ட அமிலங்கள் தான். இது புற்றுநோயை செல்களை உருவாக்கும் தன்மை கொண்டதாம்.

ரூம் ஸ்பீரியர்ஸ் (Room spray)
வாசனை மிக்க இடமாக நமது வீடு இருக்க வேண்டும் என்கிற உங்கள் ஆசை தான் உங்களுக்கு மரண மேடையாக மாறி விடுகிறது. ஆமாங்க, ந பயன்படுத்தும் இந்த வகை ரூம் ஸ்பீரியர்களில் 2, 5-dichlorophenol என்கிற வேதி பொருட்கள் கலந்துள்ளன.
இவை குழந்தைகளுக்கு பருவமடைதல் செயலை தடுத்து விடும். மேலும், சுவாச கோளாறுகள், நுரையீரல் பாதிப்பு, அதிக மன அழுத்தம் போன்றவையும் ஏற்பட கூடும்.

மரபணு மாற்றப்பட்டதா..?
இன்று எதை தொட்டாலும் அதில் மரபணு மாற்றப்பட்ட தன்மை கொண்ட உணவுகள் உள்ளன. இந்த வகை உணவுகள் தான் குழந்தை இன்மை, மலட்டு தன்மை, விந்தணு குறைபாடு போன்ற பிரச்சினைகளை இந்த காலத்தினருக்கு ஏற்படுத்துகிறது.

அந்தரங்க உறுப்பு நோய்கள்..!
மைக்ரோவேவ்-வில் நாம் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கிற்கும் இதே தன்மை தான் உள்ளது. இந்த வகை பிளாஸ்டிக் ஆண்களின் வாழ்வை சீரழிக்கும் தன்மை கொண்டது.
காரணம் இதிலுள்ள Bisphenol A மற்றும் Bisphenol S என்கிற நச்சு பொருள் ஆணுறுப்பை பாதித்து, புற்றுநோயை உண்டாகுமாம்.

செயற்கை சர்க்கரைகள்
வீட்டில் இருக்க கூடிய உணவுகள் பொருட்களே நமக்கு எமனாக மாறினால் எத்தகைய கொடுமையாக இருக்கும்..! சர்க்கரை என்கிற பெயரில் இன்று நாம் பயன்படுத்தும் அதிக சுத்திகரிப்பு தன்மை உள்ள சர்க்கரைகளை உணவில் சேர்த்து கொண்டால் புற்றநோய் ஏற்பட்டு மரணம் உறுதியாகும்.

பிளாஸ்டிக்கும் நோய்களும்..!
இப்போது தான் தமிழகத்தில் பிளாஸ்டிகிற்கு தடை வந்துள்ளது. இருப்பினும் நம்மில் பலர் பிளாஸ்டிக்கை வேறு விதங்களில் பயன்படுத்தி வருகின்றோம்.
பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பாக்ஸ் ஆகியவற்றில் நாம் சூடாக எந்த உணவை வைத்து சாப்பிட்டாலும் மரணம் நமக்கு தான்.

சோப்புகள்
உடலில் இருக்க கூடிய அழுக்குகள் நீங்கவும், வாசனையுடன் இருக்கவும் பெரும்பாலும் நாம் சோப்பை உபயோகிப்போம். இவற்றில் triclosan என்ற மூல பொருள் அதிக அளவில் இருந்தால் சருமத்தை பாதிக்கும்.
மேலும், கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை பாதித்தல், உடல் பருமன், தைராய்டு போன்ற கோளாறுகளும் ஏற்படும்.

ஹேண்ட் வாஷ் லிக்வீட்
எதை செய்தலும் காய் கழுவும் பழக்கம் கொண்ட பலருக்கும் தான் இந்த பதிவு. கையை எப்போதுமே ஹேண்ட் வாஷ் லிக்வீட்களை பயன்படுத்தி கழுவினால் கிருமிகள் அழிவதோடு வேதி பொருட்கள் உங்களின் கையில் அதிக அளவில் ஒட்டி கொள்ளும். இவை அந்த கிருமிகளை விட மிக ஆபத்தானவை என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

இயற்கையே சிறந்தது..!
நம் முன்னோர்கள் எப்போதுமே மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்ததற்கு முக்கிய காரணமே இயற்கை வழிகள் தான். அவர்களின் வாழ்வும் இயற்கையும் ஒரு சேர இருந்ததால் தான் 100 வருஷத்துக்கும் மேல் சொந்த உழைப்பில் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
எனவே, நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களில் வேதி தன்மை குறைந்தாலே நம் ஆயுள் தானாகவே கூடும்.



Click it and Unblock the Notifications