For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாக்டர்கிட்ட போனா ஊசியை ஏன் இங்க போடறாங்கன்னு தெரியுமா?

|

காய்ச்சல் மற்றும் தலைவலி என்று நாம் டாக்டரிடம் சென்றால் அவர்கள் பிட்டத்தில் ஒரு ஊசியை போட்டு சரியாக்குவார்கள். கைகளில் ஊசி போடுவது மிகவும் குறைவாகவே இருக்கும். ஏன் இப்படி பிட்டத்தில் ஊசி போடுகிறார்கள் என்று என்றாவது நாம் யோசித்து இருக்கோமா? காரணம் வென்ட்ரோலூட்டல் என்ற பகுதி நமது இடுப்பின் மேல்புறத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் தான் ஊசி போட ஏதுவான இடமாகும்.

health

image courtesy

இங்கே தான் குளுட்டியஸ் மெட்யூஸ் தசைகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் மருந்தை செலுத்தும் போது அது உடலுக்குள் வேகமாக ஊடுருவும் இதைத் தான் இன்ட்ராமஸ்குலர் இன்ஸ்செக்சன் என்று சொல்லுகின்றனர். இதன் ஊறிஞ்சப்படும் திறன் 1மில்லி கிராம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமைந்துள்ள இடம்

அமைந்துள்ள இடம்

இந்த வென்ட்ரோலூட்டல் பகுதி குளுட்டியஸ் மீடியஸ் தசையில் அமைந்துள்ளது. இந்த தசை பார்ப்பதற்கு தடினமாக, பரந்த மற்றும் கதிர்வீச்சு உடன் காணப்படும். இது இடுப்பின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது.

குளுட்டியஸ் மீடியஸ் என்பது மூன்று தசைகள் சேர்ந்து குளூட்டியஸை உருவாக்கியுள்ளது. அவைகள் :குளுட்டியஸ் மாக்சிமஸ், குளுட்டியஸ் மீடியஸ், குளுட்டியஸ் மினிமஸ் ஆகியவை ஆகும்.

இந்த குளுட்டியஸ் மீடியஸ் இடுப்பெலும்புக்கு வெளிப்புறத்தில் அதே நேரத்தில் இது இலாக் க்ரஸ்ட் இடையே மற்றும் பின்புற குளூட்டல் லைனுக்கு மேலேயும் முன்புற குளூட்டல் லைனுக்கு கீழேயும் அமைந்துள்ளது. குளுட்டல் அபோனெரோசிஸ் தசைகளிலிருந்து தோன்றுகிறது.

தசையின் பயன்கள்

தசையின் பயன்கள்

image courtesy

இந்த தசைகளானது குளுட்டியஸ் மினிமஸ் உடன் சேர்ந்து தொடையை கடத்த மற்றும் நடுநிலையிலிருந்து இழுக்க போன்ற செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

அதே மாதிரி இந்த இரண்டு தசைகளும் இடுப்பு நெகிழ்த்தி தொடையை உட்புறமாக சுத்தவும், இடுப்பை விரித்து தொடையை வெளிப்புறமாக சுத்தவும் உதவுகிறது.

வெளிப்புற சுத்து உட்புற சத்தை தடுப்பதால் பாதங்களில் வலி, கால், இடுப்பு போன்றவற்றில் வலி உண்டாகுகிறது.

குளுட்டியஸ் மீடியஸ் மற்றும் குளுட்டியஸ் மினிமஸ் ஆகியவை ஒரு காலில் நிற்கும் போது உடலுக்கு ஆதரவாக செயல்படுகின்றன, மேலும் அவை அடிவயிற்றின் பக்கவாட்டு நகர்வுடன் இணைந்து ஃபாசியா லேட் தொனியைத் தடுக்கின்றன.

இன்ட்ராமஸ்குலார் இன்ஜெக்ஷன்

இன்ட்ராமஸ்குலார் இன்ஜெக்ஷன்

image courtesy

இது பிட்டத்தின் மேல் மற்றும் வெளிப்புற பகுதி ஆகும். இந்த இடத்தை சரியாக கண்டறியாமல் ஊசி போட்டால் இடுப்பு நரம்பை நிரந்தரமாக பாதிக்கும். இதுவே பின்னர் திசுக்களில் காயம், தசை நரம்பு மண்டலம் பாதிப்பு , இரத்தப்புற்றுநோய், நரம்பு முடக்குதல், கட்டி மற்றும் சருமம் அழுகுதல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இந்த ஆபத்துகள் காரணமாக இதை கவனமாக மருத்துவர்கள் கையாள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

டெல்டோய்டு

டெல்டோய்டு

image courtesy

இது கைகளின் மேற்புறத்தில் அமைந்துள்ளது. தோள்பட்டையிலிருந்து இரண்டு அங்குலம் கீழே காணப்படும் பகுதி. மருந்தின் அளவு 1 மில்லி லிட்டருக்கு குறைவாக இருந்தால் இந்த இடத்தில் ஊசி போடுவார்கள். வாக்சின் (தடுப்பு ஊசி) போன்றவை இங்கே போடப்படும். அடுத்தடுத்த நாள் இதே இடத்தில் ஒரே கையில் ஊசி குத்தக் கூடாது. வேண்டும் என்றால் அடுத்த கையில் போட்டுக் கொள்ளலாம்.

வெஸ்டஸ்லட்டலலிஸ்

வெஸ்டஸ்லட்டலலிஸ்

image courtesy

இது தொடையின் நடுப்பகுதியின் மேற்புறத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் பொதுவாக குழந்தைகளுக்கு ஊசி போட பரந்துரைக்கப்படுகிறது. பிறந்த குழந்தையிலிருந்து 7 மாதக் குழந்தை வரை தொடையில் உள்ள தசைகளில் ஊசி போடப்படுகிறது.

ரக்டஸ் ஃபெமோரிஸ்

ரக்டஸ் ஃபெமோரிஸ்

image courtesy

இதுவும் குழந்தைகளுக்கு ஊசி போடும் இடமாகும். இது தொடையின் நடுப்பகுதியின் உட்புறத்தில் அமைந்துள்ளது.

ஊசியின் அளவு

ஊசியின் அளவு

இன்ட்ராமஸ்குலார் இன்ஜெக்ஷன் ஊசியின் அளவானது நோயாளிகளின் எடையை பொருத்து மாறுபடுகிறது. ஊசியின் நீளம் தசைகளை தொடும் அளவிற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதிகமான உடல் எடை உடையவர்களுக்கு 1.5 அங்குலம் என்ற அளவிலும், குறைந்த எடை உடையவர்களுக்கு அதற்கு குறைவாகவும் ஊசியின் நீளம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மருந்தின் அளவு

மருந்தின் அளவு

ஒரு இன்ஜெக்ஷன் கருவியும் ஊசியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அளவு 1-5 மில்லி லிட்டர் வரை உள்ளது. இந்த அளவானது நோயாளின் தசையின் அளவின் விகிதத்திற்கு இருக்கும்.

அளவிற்கு ஏற்ற ஊசி இடம்

அளவிற்கு ஏற்ற ஊசி இடம்

பொதுவாக வென்ட்ரோலூட்டல் பகுதி, டார்ஸோகுளூட்டில் இடம் போன்றவை 4 மில்லி லிட்டர் அளவுள்ள மருந்தேற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஊசி போடும் முறை

ஊசி போடும் முறை

முதலில் இன்ஜெக்ஷன் கருவியில் உள்ள பிஸ்டனை அழுத்தி மருந்தை ஊசியின் வழியாக அழுத்தி செலுத்த வேண்டும். ஊசி போடுவதற்கு முன் கண்டிப்பாக ஊசியின் முனையில் மூடியை கொண்டு கவர் செய்து இருக்க வேண்டும். இது விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், தொற்றுகள் பரவாமல் இருக்கவும் உதவும்.

ஏற்றப்படும் மருந்துகள்

ஏற்றப்படும் மருந்துகள்

கோடெய்ன், லொரஸெபம், ஓலான்சாபின், டயஸெபம், பென்சிலின், ஸ்ட்ரெப்டோமைசின், மார்பின், டெஸ்டோஸ்டிரான், வைட்டமின் பி 12 ஆகியவை அடங்கும். ஹெபடைடிஸ் ஏ, ராபிஸ், மற்றும் காய்ச்சல் தடுப்பூசிகள் ஆகியவையும் இந்த இன்ட்ராமஸ்குலார் வழியான ஊடுருவலாக வழங்கப்படுகின்றன.

கடைபிடிக்க வேண்டிய முறைகள்

கடைபிடிக்க வேண்டிய முறைகள்

ஊசி போட போகும் இடத்தை முதலில் ஆன்டி மைக்ரோ பியல் திரவம் பஞ்சை கொண்டு துடைத்து உலர வைத்து கொள்ள வேண்டும்.

கைகள் நடுங்காமல் பயம் இல்லாமல் வேகமாக ஊசியை செலுத்தினால் அந்த அளவுக்கு வலி இருக்காது.

ஊசியை குத்தும் போது அது நோயாளியின் உடம்பிற்கு செங்குத்தாக இருக்க வேண்டும். அதன் கோண அளவு 72-90 டிகிரி வரை இருக்கலாம்.

ஊசியை கைகளால் தொடாமல் அசையாமல் இருக்கும் வண்ணம் நிலைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மெதுவாக ஊசியை தசைகளினுள் செலுத்தி மருந்தை நேயாளியின் உடம்பில் செலுத்த வேண்டும்.

எந்த கோணத்தில் ஊசி குத்தப்பட்டதோ அதே கோணத்தில் தான் ஊசியை திரும்ப எடுக்க வேண்டும்.

Z-டிராக் முறை

Z-டிராக் முறை

இது ஒரு ஷிக்ஜேக் முறையாகும். இந்த முறையில் சருமத்தை இழுத்து ஒரு அங்குலம் அளவிற்கு கீழாக பிடித்து கொள்ள வேண்டும். இது உங்கள் சருமத்தில் உள்ள தசைகளை கண்டறிய உதவும்.

ஊசி போட்ட பிறகு வேகமாக தேய்க்காமல் மெதுவாக தேய்த்து விடலாம். இது மறுபடியும் மருந்து ஊசியின் வழியாக வெளியே வருவதை தடுக்கும்.

வென்ட்ரோலூட்டல் இன்ஜெக்ஷன் போடும் போது Z-டிராக் முறையை பின்பற்றுகின்றனர்.

ஏனெனில் இந்த முறை அதிக வலியில்லாமலும் தசைகளில் கடுகடுப்பு இல்லாமலும் நோயாளிகளுக்கு இருக்கும்.

வென்ட்ரோலூட்டல் இன்ஜெக்ஷன் போடும் முறை

வென்ட்ரோலூட்டல் இன்ஜெக்ஷன் போடும் முறை

நோயாளிகளின் குளுட்டியஸ் தசைகள் தெரியும் படி நிற்க அல்லது படுக்க வைக்க வேண்டும். தசைகள் சுருக்கம் அடைந்தால் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நோயாளி ரிலாக்ஸாக இருக்க வேண்டும்.

முதலில் நோயாளி தனது ஆடைகளை தளர்த்தி பிட்ட தசைகளை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஊசி போடுவதற்கு முன் அந்த பகுதியில் உள்ள தசைகள் தெரிகிறதா என்று ஆராய வேண்டும்.

அந்த பகுதியில் ஏதேனும் காயங்களோ, தழும்புகளோ, சிவத்தல் அல்லது வீக்கம் போன்றவைகள் இருந்தால் அந்த இடத்தில் ஊசி போடக் கூடாது.

மெதுவாக ஊசியை தசைகளில் உட்செலுத்தி இரத்தம் வெளியேறாமல் குத்த வேண்டும்.

மருந்தின் அளவு 1 மில்லி லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக இருக்கலாம். நோயாளியின் வயது 2 வயதுக்கு கீழே இருந்தால் 1மி.லி க்கு குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஊசியின் நீளமானது அருகில் உள்ள தசைகளை பாதிக்காதவாறு சரியான அளவை பயன்படுத்த வேண்டும். பெரியவர்களுக்கு 1.5 அங்குலம் ஊசியின் நீளம் பயன்படுத்தப்படுகிறது. எடை மற்றும் குழந்தைகளை கருத்தில் கொண்டு இந்த ஊசியின் நீளம் மாறுபடும்.

இரத்தம் வெளியேறவில்லை என்றால் ஊசி சரியாக தசைகளில் குத்தப்பட்டுள்ளது. எனவே இரத்த குழாய்களில் குத்தி விடாமல் பார்க்க வேண்டும்.

சரியான இடத்தை கண்டறிதல்

சரியான இடத்தை கண்டறிதல்

நோயாளியின் பிட்ட பகுதியில் உள்ளங்கைகளை வைக்க வேண்டும்.

ஆள்காட்டி விரலை கொண்டு இல்யாக் ஸ்பைனின் வெளிப்புற மற்றும் முன்புற பகுதியை கண்டறிய வேண்டும்.

நோயாளியின் இடது பக்க தொடையில் ஊசி போட்டால் மருத்துவர் வலது கையை பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் வலது தொடை என்றால் இடது கையை பயன்படுத்த வேண்டும்.

நடுவிரலை நகர்த்தி Vவடிவத்தில் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது முக்கோண தசைகள் கிடைக்கும். அதன் நடுப்பகுதியில் ஊசியை குத்த வேண்டும்.

முதலில் அந்த பகுதியை ஆல்கஹால் கொண்டு துடைத்து விட்டு ஊசியை உட்செலுத்த வேண்டும்.

நன்மைகள்

நன்மைகள்

இந்த வென்ட்ரோலூட்டல் இன்ஜெக்ஷனை Z முறையில் உட்செலுத்தும் போது மருந்து வேகமாக உடலினுள் செல்லும்

இங்கே நிறைய வாஸ்குலார் பிரிவுகள் மற்றும் நரம்புகள் உள்ளன

ஊசி போட ஏதுவாக இந்த பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள இல்யாக் ஸ்பைனை கொண்டு எளிதாக இடத்தை கண்டறியலாம்.

நோயாளியை எந்த மாதிரியான நிலையில் வைத்தும் ஊசி போட ஏதுவாக இருக்கும். இடது பக்கம், வலது பக்கம், நின்று கொண்டு, படுத்து கொண்டு என்று எல்லா நிலைக்கும் ஏதுவாகும். மேலும் வலி, அசெளகரியமும் நோயாளிக்கு ஏற்படாது.

விளைவுகள்

விளைவுகள்

மருத்துவர் இந்த பகுதியில் ஊசி போட அனுபவம் இல்லையென்றால் தவறாக போய் முடிந்து விடும்.

இந்த இடம் அதிக ஊறிஞ்சும் தன்மையுடன் இருப்பதால் மருந்தை தாமதிக்காமல் செலுத்த வேண்டும்.

அனுபவம் இல்லாதவர்கள் இந்த இடத்தில் ஊசி போட்டால் தவறான தசைகளில் குத்தி வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் தசைகள் சுருக்கம், தொடையின் முன், பின் மற்றும் இடுப்பு நரம்புகள் பாதிப்பு ஏற்படும்.

வென்ட்ரோலூட்டல் vs டார்ஸோகுளூட்டியஸ்

வென்ட்ரோலூட்டல் vs டார்ஸோகுளூட்டியஸ்

ரெம்ப காலமாக டார்ஸோகுளூட்டியஸ் முறை தான் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த இடத்தில் ஊசி போடும் போது தசை நார்களில் பாதிப்பு, தசை சுருக்கம், இரத்த குழாய்கள் பாதிப்பு, நரம்பு பாதிப்பு, இரத்த புற்று நோய் போன்றவை ஏற்பட்டது.

இடுப்பு நரம்புகள் பாதிப்படைதல் மற்றும் குளூட்டல் ஆர்ட்ரி பாதிப்பு போன்றவை காலில் பக்கவாதம் ஏற்படக் காரணமாக அமைகிறது.

அதே மாதிரி இங்கே உள்ள அதிக கொழுப்பு தசைகளால் சரியான இடத்தை கண்டறிய சிரமமாக இருந்தது. இந்த பகுதியில் நிறைய நரம்பு கடத்திகள், ஏற்பிகள் இருப்பதால் ஊசி போடும் போது அதிக வலியும் ஏற்படுகிறது. எனவே வென்ட்ரோலூட்டல் இதை ஒப்பிடும் போது ஒரு சிறந்த முறையாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ventrogluteal : Injection Site Method - Things You Should Know

The ventrogluteal is a site of administration of injections located on the upper side of the hip, at the gluteus medius muscle.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more