Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்களின் இந்த செயல்கள்தான் உங்கள் ஆணுறுப்பில் முறிவை ஏற்படுத்துகிறதாம் தெரியுமா?
ஆண்கள் எவ்வளவுதான் அவர்களின் பாலியல் செயல்திறன் பற்றியும், ஆணுறுப்பு பற்றியும் தெரிந்து வைத்திருந்தாலும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும் ஏராளம் இருக்கும்.
ஆண்களுக்கு இருக்கும் தீராத முக்கியமான கவலைகளில் ஒன்று அவர்களின் ஆணுறுப்பை பற்றியதுதான். ஆண்கள் எவ்வளவுதான் அவர்களின் பாலியல் செயல்திறன் பற்றியும், ஆணுறுப்பு பற்றியும் தெரிந்து வைத்திருந்தாலும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும் ஏராளம் இருக்கும். ஏனெனில் ஆணுறுப்பை பற்றிய ஆராய்ச்சிகளும், புதிய தகல்வல்களும் நாளுக்கு நாள் வந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆண்களிடையே நிலவும் தவறான நம்பிக்கைகளில் மிகவும் முக்கியமானது தங்களின் ஆணுறுப்பின் அளவை பொறுத்துதான் தங்களின் பாலியல் செயல்திறன் இருக்கும் என்பது. இது முழுக்க முழுக்க தவறான கருத்தாகும். இதனைப்போல நீங்கள் இதுவரை அறியாத ஆணுறுப்பை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதல் விறைப்பு
பிறப்புறுப்பு என்பது குழந்தைக்கு பிறக்கும்போதே முழுமையடைந்திருக்கும். ஆண் குழந்தைகளுக்கு அவர்கள் கருவில் இருக்கும்போதே விறைப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் பிறக்கும் முன்னரே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் குழந்தைகளுக்கு விறைப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி குழந்தைகள் கருப்பையில் சரியாக தூக்கமில்லாத போதும் இந்த விறைப்பு ஏற்படும்.

நீங்கள் நினைப்பதை விட உங்கள் ஆணுறுப்பு பெரியது
பல ஆண்களுக்கும் இது தெரியாத ஒன்று, அவர்கள் கண்ணனுக்கு தெரிவதை விட அவர்களின் ஆணுறுப்பு பெரியதாக இருக்கும். உங்கள் ஆணுறுப்பின் முக்கால்வாசி பாகம் உடலுக்குள் உட்புறம்தான் இருக்கும். இது உங்களுக்கு நல்லதில்லை என்று தோன்றலாம் ஆனால் உடற்கூறியல் அமைப்பின் படி இதுதான் நல்லது.

பாதங்கள் பற்றிய உண்மை
உங்களின் ஆணுறுப்பின் நீளம் என்பது உடலின் உயரம், எடை மட்டுமின்றி பாதத்தின் அளவையும் பொறுத்துதான் இருக்கும் என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பாதத்தின் அளவிற்கும் ஆணுறுப்பின் நீளத்திற்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே ஆய்வில் ஆணுறுப்பின் நீளம் என்பது வயது, எடை மற்றும் சுட்டு விரலின் நீளத்தை பொறுத்துதான் இருக்கிறதே தவிர பாதத்தை பொறுத்து இல்லை.

காலை நேர விறைப்பு
ஒரு இரவில் ஆண்களுக்கு 3 முதல் 5 முறை வரை விறைப்பு ஏற்படும். அரைத்தூக்கத்தில் இருக்கும்போது கூட விறைப்பு ஏற்படலாம். இரவுநேர விறைப்பு என்பது ட்யும்சென்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான தெளிவான காரணம் இன்னும் விவரிக்கப்படவில்லை. ஒருவேளை உங்களுக்கு இரவுநேர விறைப்போ அல்லது காலைநேர விறைப்போ ஏற்படவில்லை என்றால் அது உங்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் உள்ளது என்பதன் அர்த்தமாகும்.

இறுதி விறைப்பு
கருப்பையில் இருக்கும்போதே ஆணுறுப்பு விறைப்பு ஏற்படும் என்று நாம் முன்னரே பார்த்தோம், இது உங்களுக்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம். அதேபோல நீங்கள் இறந்தபிறகும் உங்களுக்கு விறைப்பு ஏற்படும் அது தெரியுமா? உண்மைதான் இறந்த பிறகு கூட உங்கள் ஆணுறுப்பில் விறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது இறுதி விறைப்பு எனப்படும். பெரும்பாலும் தூக்குமாட்டி இறப்பவர்களுக்கு இந்த நிலை ஏற்படும். அதேபோல துப்பாக்கி குண்டால் தாக்கப்பட்டு இறந்தவர்க்ளுக்கும் இந்த நிலை ஏற்படும்.

மூளை செயல்பாடு
அனைத்து ஆண்களுக்குமே விந்தணுக்களை வெளியேற்றும்போது கட்டுப்பாடு இருக்காது. ஏனெனில் இதில் மூளையின் பங்கு மிகவும் குறைவானது. விந்தணுக்களை வெளியேற்றும் சிக்னல் முதுகெலும்பின் ஜெனரேட்டரிலிருந்து பெறப்படுகிறது. முதுகெலும்பில் உள்ள இந்த பகுதிகள் விந்தணுக்களை வெளியேற்றும் செயலை ஒருங்கிணைக்கிறது. இதனை தள்ளிப்போட உங்கள் மூளையை இதில் அதிகம் பயன்படுத்தவேண்டும், வேறு ஏதாவது ஒரு செயலை நினைக்கும்போது இதனை தாமதப்படுத்தலாம்.

வளர்வது அல்லது சுருங்குவது
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உங்கள் ஆணுறுப்பின் சாதாரண நிலைக்கும் விறைப்பு நிலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சில ஆணுறுப்புகள் மிகவும் சிறியதாக இருந்தாலும் விறைப்பு நிலையில் அளவு பெரியதாக இருக்கும் இதற்கு எதிர்மறையாக நடக்கவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு சூழ்நிலை மற்றும் இடம் பொறுத்துக்கூட விறைப்பு நிலை மாறுபடும்.

பிறப்புறுப்பு முறிவு
உங்களுக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்கலாம், உங்கள் ஆணுறுப்பில் எலும்புகள் இருக்காது. இது பாலூட்டிகளில் மிகவும் வித்தியாசமான ஒன்று. இருப்பினும் உங்கள் ஆணுறுப்பில் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இது கடுமையான பாலுறவில் ஈடுபடும்போது இது ஏற்படலாம், மேலும் விறைப்பு நிலையில் இருக்கும்போது படுக்கையில் வேகமாக விழும்போது இது ஏற்படலாம். அதுமட்டுமின்றி கார்பரா காவேர்னோசோ என்னும் ஆணுறுப்பை சுற்றியிருக்கும் திசுக்களில் இரத்தக்கட்டு ஏற்படும்போதும் பிறப்புறுப்பு முறிவு ஏற்படும்.



Click it and Unblock the Notifications
