Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
அறுவைசிகிச்சைக்கு இரத்தம் கொடுக்கவோ, வாங்கவோ போகிறீர்களா? எச்சரிக்கையாக இருங்கள்
இரத்ததானம் என்பது ஒரு உயிரை காப்பாற்றும் ஒப்பற்ற பணியாகும். ஆனால் அதிக ஆர்வத்தால் சில விஷயங்களை கவனிக்காமல் இரத்ததானம் செய்வது சிலரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
உலகத்தால் புண்ணியமென கருதப்படும் செயல்களில் மிகமுக்கியமான ஒன்றாக கருதப்படுவது இரத்ததானம். அனைத்திலும் சாதி, மதம் பார்க்கும் சில முட்டாள்கள் கூட இரத்ததானம் என்று வரும்போது அதனை கண்டுகொள்வதில்லை. ஏனெனில் இரத்ததானம் என்பது ஒரு உயிரை காப்பாற்றும் ஒப்பற்ற பணியாகும். ஆனால் அதிக ஆர்வத்தால் சில விஷயங்களை கவனிக்காமல் இரத்ததானம் செய்வது சிலரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

உண்மைதான். ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற உங்களின் நல்ல எண்ணம் பாராட்டுக்குரியதுதான். ஆனால் அதற்கான தகுதிகள் இல்லாதபோது நீங்கள் அதை செய்யும்போது அது உங்களின் உயிரை மட்டுமின்றி மற்றவர்களின் உயிரையும் ஆபத்தில் வைக்கும். இந்த பதிவில் இரத்ததானம் செய்ய என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்னென்ன குறைபாடுகள் இருக்கக்கூடாது என்பதை பார்க்கலாம்.

பச்சை குத்துதல்
நீங்கள் சமீபத்தில் பச்சை குத்தி இருந்தால் நிச்சயம் இரத்ததானம் செய்யக்கூடாது. அதேபோல் காதுகுத்துதல் அல்லது சருமம் தொடர்பான சிகிச்சைகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால் நீங்கள் குறைந்தது 4 மாதத்திற்காவது இரத்ததானம் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் இரத்ததானம் செய்ய தகுதியற்றவர்கள். இதற்கு முக்கிய காரணம் இதன் மூலம் ஹெப்பாடிட்டீஸ் வைரஸ் பரவுவதை தடுக்கத்தான்.

சளி மற்றும் மோசமான காய்ச்சல்
காய்ச்சல், சளி மற்றும் தொடர்ச்சியான இருமலால் பாதிக்கப்பட்டவராக நீங்கள் இருந்தால் அந்த பிரச்சினை குணமாகும் வரை நீங்கள் நிச்சயம் இரத்ததானம் கொடுக்கக்கூடாது. காய்ச்சல் ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் கூட அதனை உறுதிசெய்யும்வரை இரத்ததானம் செய்யக்கூடாது.

உடல்ரீதியான பிரச்சினைகள்
உடல்ரீதியாக குறைபாடு உள்ளவர்களை இரத்ததான நன்கொடையாளராக ஏற்றுக்கொள்ளக்கூடாது. அதாவது குள்ளமாக உள்ளவர்களோ, எடை மிகக்குறைவாக உள்ளவர்களோ இதை செய்ய இயலாது. ஏனெனில் இவர்களின் இரத்த அளவுகளின் எண்ணிக்கை அதிகமாகவோ அல்லது போதுமானதாகவோ இருக்காது.

வயது
இந்தியாவில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இரத்ததானம் செய்யமுடியும். அதேபோல 50 கிலோவிற்கு குறைவாக எடை உள்ளவர்கள் இரத்ததானம் செய்யக்கூடாது. ஏனெனில் அவர்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும். அதையும்மீறி கொடுக்கும்போது இரத்ததானம் செய்பவர்களுக்கு மயக்கம் ஏற்படும்.

மலேரியா
மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது மூன்று வருடத்திற்காவது இரத்ததானம் செய்யக்கூடாது. மலேரியாவை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி மனித உடலில் செயலிழக்க குறைந்தது 1 வருடம் ஆகும். இந்த ஒட்டுண்ணி இரத்ததானம் செய்யும்போது பரவக்கூடும். அதுபோல டைபாய்டால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் இரத்ததானம் செய்ய குறைந்தது ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

ஆண்டிபையோட்டிக்ஸ்
நோய்த்தொற்றின் காரணமாக சமீபத்தில் ஆண்டிபையோட்டிக் உபயோகிப்பவராக இருந்தால் உங்களின் இரத்தத்தை ஏற்றுக்குக்கொள்ள முடியாது. ஏனெனில் உங்கள் இரத்தத்தின் மூலம் சில கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. இதேபோல ரேபிஸ் நோய்க்காக தடுப்பூசி போட்டிருந்தால் குறைந்தது ஒரு வருடம் நீங்கள் இரத்ததானம் செய்யக்கூடாது.

லுக்கேமியா அல்லது வேறு புற்றுநோய்
இரத்தப்புற்றுநோயாலோ அல்லது லுக்கேமியா நோயாலோ பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் நிச்சயம் இரத்ததானம் செய்யக்கூடாது. இதுமட்டுமின்றி மார்பக புற்றுநோய், புரோஸ்ட்ரேட் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் செய்யும் தகுதியை இழக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications