Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
மீன் சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களை மரணம் நெருங்குகிறது...!
வகை வகையான அசைவ உணவுகளை செய்து வைத்தால் அசைவ பிரியர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அசைவ உணவுகள் அவ்வளவு ருசியாக இருக்கும். சிறிதளவு சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் அதிகம் சாப்பிட தூண்டும்.
" அசைவம்" - இந்த ஒரு வார்த்தை போதுமே நமது அனைவரின் நாவிலும் எச்சி ஊற வைக்க...'பொதுவாக சைவத்தை விட அசைவம் என்றால் பலருக்கும் மிகவும் பிடிக்கும். அசைவ பிரியர்களுக்கு சிக்கன், மீன், ஆடு போன்ற பல வகை உணவுகளும் ரொம்ப இஷ்டம்தான். உலக அளவிலும் சைவ வகை உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகள்தான் பல வகைகளாக உள்ளது.
வகை வகையான அசைவ உணவுகளை செய்து வைத்தால் அசைவ பிரியர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அசைவ உணவுகள் அவ்வளவு ருசியாக இருக்கும். சிறிதளவு சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் அதிகம் சாப்பிட தூண்டும். அதிலும் குறிப்பாக மீன் என்றால், பலருக்கும் மிகவும் பிடித்த அசைவ உணவு. ஆனால் மீன் சாப்பிடுவதில் கூட பல ஆபாயங்கள் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கிறது. ஏன் மீன் சாப்பிட்டால் மரணம் வரும் என்பதை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.

மீன் என்னும் எமன்..!
அசைவ உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் பல உடல் சார்ந்த கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக மீனில் சில மரணகரமான விஷியங்கள் உள்ளதென்றால் நம்புவீர்களா..? உண்மைதாங்க, கடல் மீனில் அதிக நச்சு தன்மை உள்ளது. நம் பூமியில் இயற்கையான மாற்றங்கள் நிகழ்வது இயல்புதான். ஆனால் இயற்கைக்கு எதிரான மாற்றங்கள் நடந்தால் அது ஒட்டு மொத்த உலகையே அழித்து விடும். இப்படிப்பட்ட செயல்கள் கடலில் நாம் செய்வதால் அதன் இயல்பு மாறி விஷ தன்மை அடையும்.

மீனில் பாதரசமா..?
கடலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கடலில் அதிக பாதரச தன்மை கலந்துள்ளது என்பதே. எனவே கடல் மீன்களை கர்ப்பம் அடைந்த பெண்கள் உண்டால் அவர்களின் கருவில் உள்ள சிசுவை அதிகம் பாதிக்கும். ஏனென்றால் பாதரசம் மிகவும் விஷத்தன்மை உடையது. மேலும் குழந்தைகள் பாதரசம் கலந்த கடல் நீரில் உள்ள மீன்களை சாப்பிடுவதால் சிறு வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு, கண் சார்ந்த பிரச்சினை, மூளை கோளாறு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

அலர்ஜி
நச்சு தன்மை கொண்ட இந்த மீன்களை உண்டால் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும். அதில் ஒன்றுதான் ஒவ்வாமை. கடல் மீன்களை சாப்பிடுவதால் புது புது வியாதிகள் உங்களை தேடி வரும். ஒவ்வாமை அதிகமாகி விட்டால் உடலிற்கு தீங்கு ஏற்படுத்தி, சுவாச பிரச்சினைகளை தரும். இதனால் சில சமையம் மரணம் கூட நிகழ வாய்ப்புள்ளது.

நச்சு தன்மைகான காரணம்
கடலில் எப்படி நச்சு தன்மை வந்திருக்கும் என யோசனையாக உள்ளதா..? உங்கள் கேள்விக்கு பதில் இதுவே. பெருகி வரும் மக்கள் தொகையால் இட பற்றாக்குறை ஏற்பட்டு நிலம், காடு போன்றவற்றை ஆக்கிரமித்து வசிக்கின்றனர். மேலும் அவர்களுக்கென்று பல தொழிற்சாலைகள் வருவதால் அவற்றின் கழிவுகள் வெளியேற்ற இடமின்றி ஆறு, ஏறி, குளம் ஆகியவற்றில் கலந்து கடைசியாக கடலில் சேரும். இதன் விளைவே கடல் முழுவதும் விஷத்தன்மையாக மாறுகிறது.

ஏற்படும் நோய்கள்
நச்சு தன்மை கொண்ட கடல் மீன்களை சாப்பிடுவதால் இந்த நோய்கள் உங்களுக்கு வரக்கூடும்.
1. ஆஸ்துமா
2. புற்றுநோய்
3. இதயம் சார்ந்த நோய்கள்
4. மன அழுத்தம்
5. நீரிழிவு
6. பார்வை குறைபாடு
7. மூளை நோய்கள்
8. குடல் கட்டிகள்

எந்தெந்த மீன்களை சாப்பிட கூடாது
பொதுவாகவே ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் நச்சு தன்மை இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட கெளுத்தி, இறால், விலாங்கு மீன், கடல் பாஸ் ஆகியவற்றில் பாதரச தன்மை அதிகம் காணப்படும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் நடுக்கடலில் கிடைக்கும் மீன்களை உண்டால் விரைவிலேயே உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக சுறா மீன், வாள் மீன், திமிங்கலம் போன்றவற்றில் அதிக விஷ பொருட்கள் கலந்திருக்கும். ஏனெனில், இப்போதெல்லாம் நடுக்கடலில்தான் வேதி குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். இதில் இருக்கும் நச்சுதான் மீன்களின் தன்மைகளை மாற்றிவிடுகிறது.

அப்போ எதுதான் சாப்பிடணும்..?
மீன்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை தரும். வைட்டமின் டி, புரத சத்துக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தரும். அத்துடன் ஊட்ட சத்து குறைபாடுகள் வராமல் காக்கும். ஆனால் நஞ்சு கலந்த மீன்களை சாப்பிடுவதால் உயிரையே எடுத்துவிடும். சாப்பிடும் மீன் விஷ தன்மை உள்ளதா..? என்பதை உறுதி செய்து சாப்பிடுதல் மிகவும் நல்லது. மேலும் அசைவ உணவுகளை காட்டிலும் சைவ உணவுகள் அதிகம் உண்பது உடலுக்கு அதிக நன்மை தரும்.



Click it and Unblock the Notifications