Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்!
ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்ததால் ஏற்பட்ட வினை, ப்ளேபாய் மாடல் கூறும் அதிர்ச்சித் தகவல்!
ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்ததால் ஏற்பட்ட வினை, ப்ளேபாய் மாடல் கூறும் அதிர்ச்சித் தகவல்!
உணவு, பானம் ஒவ்வாமை, விவரிக்க முடியாத அளவிற்கு முதுகு வலி, கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் தொடர்ந்து வலி இருந்துக் கொண்டே இருந்தது. எதையும் யோசிக்க முடியாத அளவிற்கு அறிவாற்றல் ககுறைபாடு உண்டானது., எதிலும் சீராக கவனம் செலுத்த முடியவில்லை, கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது, அடிக்கடி மயக்கம் அடிந்தேன், என் சிறுநீர் பையில் எரிச்சல் உணவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நோய் தொற்று, தைராய்டு, சிறுநீரகச்சுரப்பிகள் பிரச்சனை என தான் பெரும் அவதிக்கு ஆளானது குறித்து கிறிஸ்டல் ஹெப்னர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கான காரணம் என்ன என்று அறிய வந்த போது தான் ஹெப்னருக்கு இன்னும் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

சில வருடங்களாக...
சில வருடங்களாகவே கிறிஸ்டல் ஹெப்னருக்கு இப்படியான வலி, மந்தமான நிலை, மயக்கம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் தனது வேலை சார்ந்த அலைச்சல் காரணமாக ஏற்படும் சாதாரண அறிகுறிகள் என்று கருதினார் ஹெப்னர்.
அடிக்கடி தனக்கு ஏற்படும் மறதியை, வயதாகிவிட்டது என்று ஜோக்காக கூறிக் கொண்டு வந்துள்ளார் ஹெப்னர். ஆனால், அவையெல்லாம் ஹெப்னரின் உடலில் விஷம் அதிகரித்து வந்ததன் காரணம். அந்த விஷம் எப்படி அதிகரித்தது, எதனால் அதிகரித்தது?

தவிர்த்தார்...
மாடல் அழகியான கிறிஸ்டல் ஹெப்னர் தன் உடலில் ஏற்படும் பல அறிகுறிகள் மற்றும் சோர்வு காரணமாக தொடர்ந்ந்து பல ஷூட்டிங்கை கேன்சல் செய்ய துவங்கினார். ஒரு கட்டத்தில் ஹெப்னரால் தனது படுக்கையில் இருந்தே எழுந்திருக்க முடியாத நிலை உண்டானது.
பிறகு தான் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை கண்டறிந்தார் ப்ளேபாய் நிறுவனரின் மனைவியான கிறிஸ்டல் ஹெப்னர்.

ப்ரெஸ்ட் இம்பிளாண்ட்!
தங்கள் மார்பக அழகை மெருகேற்றி கொள்ள பல மாடல் அழகிகள், நடிகைகள் ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் எனப்படும் செயற்கையாக மார்பகத்தை பெரிதுப்படுத்திக் கொள்ளுல்ம் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். ப்ரெஸ்ட் மட்டுமல்ல, உடலின் வேறுசில பாகங்களை பெரிதுப்படுத்திக் கொள்ளவும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் தான் கிறிஸ்டல் ஹெப்னருக்கு எமனாக மாறியது.

விஷம்!
ப்ளேபாய் நிறுவனர் ஹக் ஹெப்னர் மனைவியும் மாடல் அழகியுமான கிறிஸ்டல் மார்பக இம்பிளாண்ட் சிகிச்சை மேற்கொண்டவர். ஆனால், அவரது உடலில் சமீப ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றத்திற்கு அந்த ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் காரணத்தால் உண்டான தீய தாக்கங்கள் தான் காரணம் என்பதை ஆரம்பத்தில் கிறிஸ்டல் அறிந்திருக்கவில்லை.
கிறிஸ்டல் மட்டுமல்ல, ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்துக் கொண்ட ஆயிரக்கணக்கான பெண்கள் அதன் காரணத்தால் தங்கள் வாழ்க்கை அழிந்து போனது என்பதை வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.

பதின் வயது பெண்கள்...
மாடல் அழகிகள், நடிகைகளை தவிர வளர்ந்த மற்றும் மேற்கத்திய நாடுகளில் சாதாரணமாக இளம்பெண்கள் கூட இந்த ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். தங்களை கவர்ச்சியாக காட்டிக் கொள்ள அவர்கள் இதை தங்கள் தேர்வாக காண்கிறார்கள்.
ஆனால், பல பதின் வயது பெண்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள், இது ஆண்களை ஈர்க்கவும், அழகை மெருகூட்டவும் ஒரு சிறந்த தீர்வாக காண்பதாக கூறுகிறார்கள். ஆனால், இந்த ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் உண்மையில் பெண்கள் உடலில் ஒரு நச்சுப் பொருளாக தான் இடம்பெறுகிறது.

ப்ளேபாய் மாடல்கள்!
கவர்ச்சி என்றாலே ப்ளேபாய் என்ற அளவிற்கு 1953 முதல் இன்று வரை தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கி அதில் முதன்மை இடத்தில் வகித்து வருகிறது ப்ளேபாய் நிறுவனம். இதன் மாடல் அழகிகள் மற்றும் கவர்ச்சி கரமான போட்டோஷூட்கள் மிகவும் பிரபலமானவை. பல ப்ளேபாய் மாடல்கள் உலக ஆண்களின் கவர்ச்சி கன்னிகளாக திகழ்ந்து வருகிறார்கள்.
ப்ளேபாய் மாடலாக இருக்க வேண்டும் என்றால் அழகும், கவர்ச்சியும் அளந்து வைத்தது போல கச்சிதமாக இருக்க வேண்டும் என்பது ஒரு விதிவிலக்காக அமைந்துவிட்டது. இதனாலேயே பல ப்ளேபாய் மாடல்கள் கடுமையான டயட் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி, ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் போன்ற செயற்கை அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்கிறார்கள். அப்படி தான் கிறிஸ்டல் ஹெப்னரும் ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்துக் கொண்டார்.

ஆரோக்கிய கோளாறுகள்!
ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்த பல பெண்களுக்கு புற்றுநோய் மற்றும் பல அபாயமான ஆரோக்கியக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. ALCL (anaplastic large cell lymphoma) எனப்படும் ஒருவகையான புற்றுநோய் அபாயம் ஏற்பட ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் முக்கிய காரணியாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கிறிஸ்டல் ஹெப்னருக்கு Lyme எனப்படும் நோய் தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தான் நாம் மேலேக் குறிப்பிட்டிருந்த அனைத்து அறிகுறிகளும், ஆரோக்கியப் பிரச்சனைகளும் கிறிஸ்டலுக்கு ஏற்பட்டது.

அபாயம்!
மற்ற பெண்களை போலவே ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்துக் கொள்வதால் ஏற்படும் அபாயம் தெரியாமல் செய்துக் கொண்டார் ஹெப்னர். இவர் மிகவும் பாதுகாப்பான, சிறந்த ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் நிபுணர்கள் மூலமாக தான் சிகிச்சை மேற்கொண்டார் எனிலும், யார் கொடுத்தாலும் விஷம், விஷம் தானே என்பதை இவர் மறந்துவிட்டார்.
பல ஆய்வாளர்கள் ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் என்பது பெண் உடலில் விதைக்கப்படும் டைம் பாம் என்று குறிப்பிடுகிறார்கள். இதன் மூலம் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது என்பதை பல பெண்கள் அறியாமல் இருக்கிறார்கள். இதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் பெருமளவு பாதிக்கப்படுகிறது என்பதை யாருமே அறிவதில்லை. அமெரிக்காவின் பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் இப்போது ப்ரெஸ்ட் இம்பிளாண்ட்களை நீக்குவது அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இரசாயனங்கள்!
ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்யப்படும் அந்த பொருளில் சிலிகான், சலைன், ஜிங், மெர்குரி, அர்செனிக் உட்பட நாற்பது இரசாயனங்கள் இருக்கின்றன. இவை அனைத்துமே கிருமிகள், நோய் தொற்றை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயக்கத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன.
இவற்றின் தாக்கம் வெளிப்பட எட்டில் இருந்து பத்து ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னரே, இவற்றுக்கு எல்லாம் ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் தான் காரணம் என்று அந்த பெண்ணுக்கு அறியவரும்.

வெற்றிகரமான பெண்மணி!
கிறிஸ்டல் ஹெப்னர் மாடலிங் உலகில் ஒரு வெற்றிகரமான பெண்ணாக வலம்வந்தார். இவர் ஹக் ஹெப்னரை திருமணம் செய்துக் கொண்ட பிறகு மேலும் பிரபலம் அடைந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்துக் கொண்ட காரணத்தால் கடந்த சில வருடங்களாக உடல்நலம் குன்றி போனார்.
கடந்த 2016ம் ஆண்டு இதுகுறித்து தெளிவான, விரிவான பதிவுகளை பகிர்ந்தார் கிறிஸ்டல். இப்போது மீண்டும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்குக் திரும்பி இருக்கிறார் கிறிஸ்டல். அதற்கு காரணம் இவர் தனது ப்ரெஸ்ட் இம்பிளாண்டை அகற்றியதே ஆகும்.
All Image Source: Facebook / Crystal Hefner



Click it and Unblock the Notifications











