For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் டென்ஷன் ஆனா விந்து உற்பத்தி குறைந்து குழந்தை பிறக்காதாமே... உண்மையா?

குழந்தை இல்லாமைக்கு சிகிச்சை எடுக்கும் தம்பதிகளில் உள்ள ஆண்களுக்கு மன அழுத்தம் இருந்தால், கருத்தரிப்பு வாய்ப்பு மிகவும் குறைவதாக, ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது.

By Jijo Gilbert
|

குழந்தை இல்லாமைக்கு சிகிச்சை எடுக்கும் தம்பதிகளில் உள்ள ஆண்களுக்கு மன அழுத்தம் இருந்தால், கருத்தரிப்பு வாய்ப்பு மிகவும் குறைவதாக, ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது.

health

இந்த ஆய்வின்படி, தம்பதிகளில் அதிக அளவு மனஅழுத்தம் இல்லாத ஆண்களால் கருத்தரிப்பு மற்றும் குழந்தை பிறப்பு நிகழ்வதை விட, அதிக அளவு மனஅழுத்தம் கொண்ட ஆண்களால் கருத்தரிக்கும் வாய்ப்பு 60 சதவீதம் வரை குறைவதாக தெரியவந்து உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொடக்க கால கர்ப்பம்

தொடக்க கால கர்ப்பம்

மற்றொருபுறம், பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் எந்த வகையிலும் குழந்தை பிறப்பின் விகிதத்தை பாதிப்பது இல்லை என்று தெரியவந்து உள்ளது.

இது தவிர, ஃபெர்டிலிட்டி அண்டு ஸ்டிரிலிட்டி என்ற இதழில் வெளியான மேற்கண்ட இந்த ஆய்வு அறிக்கையில், செலக்டிவ் சிரோடோனின் ரீஅப்டேக் தடுப்பான்கள் அல்லாதது (நான்-எஸ்எஸ்ஆர்ஐ-கள்) என்று அறியப்படும் ஆன்டி டிப்ரேஷன்ட்ஸ் சாப்பிடுவதால், குழந்தை இன்மைக்காக சிகிச்சை எடுத்து கொள்ளும் பெண்களின் துவக்க கால கர்ப்ப இழப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதுடன் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாத்திரைகள்

மாத்திரைகள்

அதே நேரத்தில், மற்றொரு வகையைச் சேர்ந்த ஆன்டிடிப்ரேஷன்ட்ஸ் ஆன எஸ்எஸ்ஆர்ஐ-கள், கர்ப்ப இழப்பிற்கு தொடர்பு உடைய அல்ல. பெண்களில் ஏற்படும் மனஅழுத்தம் அல்லது மற்றொரு வகையைச் சேர்ந்த ஆன்டி டிப்ரேஷன்ட்ஸ் ஆகியவை, குறைந்த கருத்தரிப்பு விகிதம் உடன் தொடர்புடையது அல்ல.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்தர் ஈசென்ஸ்பெர்க், தேசிய குழந்தைகள் நலம் மற்றும் மனித நல மேம்பாட்டு கழகத்தைச் சேர்ந்த யூனைஸ் கென்னடி ஷிரிவர் கூறுகையில், "குழந்தை இன்மைக்கு சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் அவர்களின் மருத்துவர்களுக்கு இடையே, சிகிச்சை தீர்மானங்களை மேற்கொள்ள, எங்கள் ஆய்வின் மூலம் கிடைத்த இந்த புதிய தகவல் பயன்படும்" என்றனர்.

ஆண்களின் மன அழுத்தம்

ஆண்களின் மன அழுத்தம்

இதற்கு முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில், குழந்தையின்மைக்கான சிகிச்சைக்கு வரும் பெண்களில் 41 சதவீதம் பேருக்கு, மனஅழுத்தத்தின் அறிகுறிகள் இருப்பதாக, ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். இன்-விட்ரோ ஃபெர்டிலிசேஷன் (ஐவிஎஃப்) சிகிச்சைகளை மேற்கொள்ளும் ஆண்களைக் குறித்த மற்றொரு ஆய்வில், ஏறக்குறைய 50 பேரில் மனஅழுத்தம் அனுபவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

மேற்கண்ட இந்த ஆய்விற்காக, ஐவிஎஃப் அல்லாத சிகிச்சைகளை மேற்கொள்ளும் தம்பதிகளில், மனஅழுத்தத்தின் பங்கை குறித்து அறியும் வகையில் 1,650 பெண்கள் மற்றும் 1,608 ஆண்களை வைத்து, இந்த அணியினர் ஆய்வை நடத்தி தகவலை பெற்றனர். இதில் பெண்களில் 5.96 சதவீதம் பேரில் அதிகளவிலான மனஅழுத்தம் இருப்பதாகத் தெரிந்தது. ஆண்களோடு ஒப்பிடும் போது, 2.28 சதவீதம் பேருக்கு இருந்தது.

கரு இழப்பு

கரு இழப்பு

ஆன்டி டிப்ரேஷன்ட்ஸ் பயன்படுத்தவர்கள் உடன் ஒப்பிடும் போது, எஸ்எஸ்ஆர்ஐ-கள் அல்லாததை பயன்படுத்தும் பெண்களில், முதல் மூன்று மாதங்களில் கரு இழப்பு ஏற்படுவது சுமார் 3.5 முறைகள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Men's depression lower chances for pregnancy in couples, study

Among couples being treated for infertility, depression in the male partner was linked to lower pregnancy chances, according to a study.
Story first published: Monday, May 28, 2018, 13:10 [IST]
Desktop Bottom Promotion