For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருமுறை சமைக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் எத்தனை முறை சமைக்க பயன்படுத்தலாம்

கிட்டத்தட்ட நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு பழக்கம் சமைக்க உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது. இன்றும் நம்மில் இருக்கும் ஒரு கேள்வி ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா என்பதுதான

|

கிட்டத்தட்ட நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு பழக்கம் சமைக்க உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது. இது நல்லதா அல்லது கெட்டதா என்பது தெரியாமலே பலகாலமாக நாம் இதனை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இன்றும் நம்மில் இருக்கும் ஒரு கேள்வி ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா என்பதுதான்?

how many times can leftover oil can be reused

இதற்கான விடை என்னவெனில் உபயோகிக்க கூடாது என்பதுதான். ஏனெனில் இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மேலும் சிலமுறைகள் பயன்படுத்தலாம். ஆனால் அது எண்ணெய் மற்றும் சமைக்கப்படும் உணவை பொறுத்தது. இதனை பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறுக்கும்போது என்ன ஆகிறது?

வறுக்கும்போது என்ன ஆகிறது?

எந்த உணவாக இருந்தாலும் அதனை அதிகம் வறுக்கும்போது, அது உணவை சிதைவடைய செய்து அதில் உள்ள புரோட்டின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சிதைக்கிறது, அதனால்தான் உணவு சிவந்து விடுகிறது. ஊட்டச்சத்துக்கள் சிதைவடைந்த இந்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கும்போது அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கலாம். இப்படி அதே எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது ஆர்தோகுளோரோசிஸ் என்னும் நோயை உண்டாக்குகிறது. இதனால் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரிக்கிறது.

எண்ணெயின் வகை மற்றும் வெப்பநிலை

எண்ணெயின் வகை மற்றும் வெப்பநிலை

எண்ணெயின் மறுபயன்பாடு என்பது அதன் தன்மை மற்றும் அது சூடுபடுத்தப்படும் வெப்பநிலையை பொறுத்து அமைகிறது. ஊட்டசத்து நிபுணர்களின் கருத்துப்படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தலாம், ஆனால் ஆலிவ் எண்ணெய் , எள் எண்ணெய் போன்றவற்றை அதிக வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதை தவிர்க்கவும்.

உபயோகிக்கும் பாத்திரம்

உபயோகிக்கும் பாத்திரம்

உங்களுக்கு தெரியுமா வீட்டில் உபயோகப்படுத்தும் எண்ணெய் கடைகளில் உபயோகப்படுத்தும் எண்ணெயை விட விரைவில் கெட்டுவிடும். இதற்கு காரணம் கடைகளில் செய்யப்படும் வெப்ப ஏற்பாடுகள் மற்றும் உபயோகிக்கும் பாத்திரங்கள்தான். வீட்டில் வறுக்கும்போது உணவுத்துகள்கள் பாத்திரத்தின் அடியில் சென்று சென்றுவிடும், ஆனால் கடைகளில் செய்யப்பட்டுள்ள அமைப்புகளில் இவ்வாறு நடக்காது. இவ்வாறு எண்ணெயில் உணவு துகள்கள் அதனை விரைவில் அதன் மூலக்கூறுகளை சிதைக்கும்.

MOST READ: பெண்கள் பழைய காதலை ஆண்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா கூடாதா? எதை சொல்லலாம்?

என்ன வகையான உணவுகள்?

என்ன வகையான உணவுகள்?

நாம் என்ன வகையான உணவை சமைக்கிறோம் என்பதை பொறுத்தும் எண்ணெயின் அளவு மற்றும் தன்மை மாறுபடும். சில துகள்கள் வேகமாக எண்ணெயின் மூலக்கூறுகளை உடைக்கக்கூடும். உதாரணத்திற்கு, பிரட் சம்பந்தப்பட்ட உணவுகளை ண்ணெயில் வறுக்கும்போது அதன் உணவுத்துகள்கள் எண்ணெயை விரைவில் கெட்டுப்போக வைப்பதோடு அதனை மீண்டும் உபயோகப்படுத்தும் எண்ணிக்கையையும் குறைக்கிறது.

எண்ணெயின் ஆயுளை அதிகரிக்கும் எளிய வழி

எண்ணெயின் ஆயுளை அதிகரிக்கும் எளிய வழி

எண்ணெயின் ஆயுளை அதிகரிக்க எளிய வழி ஒரு தெர்மோமீட்டரை உபயோகிப்பதுதான். இது உங்களுக்கு எண்ணெயை எந்த வெப்பநிலையில் பயன்படுத்த வேண்டும், எப்பொழுது நெருப்பை குறைக்க வேண்டும் என்று அறிய உதவும். அதிக வெப்பநிலையில் உபயோகப்படுத்திய எண்ணெயை மீண்டும் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா? கூடாதா?

எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா? கூடாதா?

ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின்படி உணவுத்துகள்களை வடிகட்டி கொண்டு நன்கு வடிகட்டிய பின்தான் அதனை உபயோகிக்க வேண்டும். அதேசமயம் அதனை அதிக வெப்பநிலையில் உபயோகித்திருக்க கூடாது என்பதையும் உறுதிசெய்துகொள்ளவும். உபயோகித்த எண்ணெயை நன்கு மூடிய பாத்திரத்தில் சேமிக்கவும். ஒருவேளை சேமிக்கப்பட்ட எண்ணெய் அடர் நிறத்திற்கோ, தடிமனாகவோ அல்லது வழவழப்பாகவோ மாறினால் அந்த எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள். உணவு துகள்களுடன் திறந்து வைக்கப்பட்டிருந்த எண்ணெயை எக்காரணத்தை கொண்டும் மீண்டும் உபயோகிக்காதீர்கள்.

பாதிப்புகள்

பாதிப்புகள்

இந்த வழிமுறிகளை பின்பற்றாமல் உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிப்பது பல ஆரோக்கிய கோளாறுகளை உண்டாக்கும். இந்த எண்ணெய்களில் வழக்கமான எண்ணெயை விட அதிகளவு கொழுப்பு இருக்கும். மேலும் இதில் உள்ள உணவுத்துகள்கள் எண்ணையை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றிவிடும். இந்த எண்ணெயை உபயோகிக்கும்போது அது குடல் புற்றுநோய், உயர் கொழுப்பு அளவுகள் மற்றும் இதய கோளாறுகள் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

MOST READ: சதித்திட்டங்களின் ராணி என்றழைக்கப்படும் உலகின் முதல் பெண் பேரரசி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how many times can leftover oil can be reused

Whenever we deep fry any food item, the first question that comes to the mind is, whether the leftover oil should be kept for further use or should be discarded.
Story first published: Saturday, October 27, 2018, 17:04 [IST]
Desktop Bottom Promotion