கடைகளில் வாங்கும் இந்த பொருட்கள் நம் உயிரையே பறித்துவிடும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நோய்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், பலருக்கும் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை அதிகரித்துவிட்டது. மேலும் போலி உணவுப் பொருட்கள் சந்தைகளில் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, நாம் சாப்பிடும் பல ஆரோக்கியமான பொருட்களைக் கூட சந்தேக கண்ணோட்டத்தில் காண நேரிடுகிறது.

அதுமட்டுமின்றி, இன்று பலர் ஆர்கானிக் உணவுப் பொருட்களையே தேடி வாங்குகிறார்கள். இதனால் நம்மால் பல இடங்களில் சுகாதார உணவு கடைகளைக் காண நேரிடுகிறது. சுகாதார உணவுக் கடைகளில் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, சரும பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களும் தான் விற்கப்படுகின்றன. இந்த கடைகளில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் ஆரோக்கியமானது என்று நினைத்து அச்சமின்றி வாங்கி உட்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் சுகாதார உணவு கடைகளில் விற்கப்படும் அனைத்துமே பாதுகாப்பானது மற்றும் நல்லது என்று சொல்ல முடியாது. நேச்சுரல் மற்றும் ஆர்கானிக் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, பல தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. எனவே எப்போதும் எந்த ஒரு உணவுப் பொருளையும், எந்த ஒரு கடைகளில் வாங்கும் போதும், நன்கு ஆராய்ந்து பின் வாங்கி பயன்படுத்துங்கள். இக்கட்டுரையில் கடைகளில் விற்கப்படும் சில மோசமான உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர் (Apple Cider Vinegar without the Mother)

ஆப்பிள் சீடர் வினிகர் (Apple Cider Vinegar without the Mother)

ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பொருட்களுள் ஒன்று தான் ஆப்பிள் சீடர் வினிகர். இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்களான மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், காப்பர் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆப்பிள் சீடர் வினிகர் வாங்குவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் எந்த வகையான ஆப்பிள் சீடர் வினிகர் வாங்குகிறோம் என்பதில் தான் உள்ளது. எப்போதுமே வடிகட்டப்படாத ஆப்பிள் சீடர் வினிகரைத் தான் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். இந்த வகை வினிகரில், சற்று மங்கலான தோற்றத்தில், "mother of vinegar" என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

இப்படி குறிப்பிடப்பட்டுள்ள வினிகரில் தான் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நொதிகள் உள்ளன என்று அர்த்தம். "without the mother" என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அது சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். எனவே கவனமாக இருங்கள்.

ப்ளேவர்டு தயிர்

ப்ளேவர்டு தயிர்

தயிர் ஆரோக்கியமான உணவுப் பொருள். ஆனால் ப்ளேவர்டு தயிர்கள் தான் தற்போது ஏராளமான சுகாதார உணவுக் கடைகளில் உள்ள ப்ரிட்ஜ்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான தயிர்களில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகம் உள்ளது. அதுவும் சர்க்கரையானது புருக்டோஸ், க்ளுக்கோஸ் அல்லது சுக்ரோஜ் வடிவில் இருக்கும். இவை ஆரோக்கியமற்றவைகள். அதோடு ப்ளேவர்டு தயிரில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை நிறம் மற்றும் ப்ளேவர்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. எனவே எப்போதும் தயிரை வாங்கும் போது கொழுப்பு குறைவான மற்றும் ப்ளைன் தயிரை தேர்ந்தெடுங்கள். அதோடு அந்த தயிரின் பின்பக்கம் ஒட்டியிருக்கும் லேபிளில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரோட்டீன் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

சுகாதார உணவுக் கடைகளில் விற்கப்படும் மற்றொரு பொருள் தான் பழச்சாறுகள். இந்த பழச்சாறுகள் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றன. பலரும் இவை ஆரோக்கியமானவை என்று எண்ணி தினமும் வாங்கிக் குடிக்கிறார்கள். ஆனால் பாக்கெட் பழச்சாறுகள் முழுமையாக ஆரோக்கியமற்றவைகளாகும். இதில் 100 சதவீதம் பழச்சாறுகள் இருப்பதில்லை. மாறாக ஆரோக்கியமற்ற பழச்சாறு வாசனைக் கொண்ட கெமிக்கல்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் தான் உள்ளது. ஆகவே தாகம் எடுத்தால் தண்ணீரை வேண்டுமானால் குடியுங்கள். ஆனால் இம்மாதிரியான பானங்களை மட்டும் வாங்கிப் பருகாதீர்கள். இவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரை உடல் பருமன், டைப்-2 சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை பல மோசமான நோய்களுக்கு வழிவகுக்கும். வேண்டுமானால் வீட்டிலேயே பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடியுங்கள்.

ஹெர்பல் சப்ளிமெண்ட்ஸ்

ஹெர்பல் சப்ளிமெண்ட்ஸ்

தற்போது சுகாதார கடைகளில் ஹெர்பல் சப்ளிமெண்ட்டுகளும் விற்கப்படுகின்றன. இந்த சப்ளிமெண்டுகளைப் பார்த்ததும் பலர் வாங்கிப் பயன்படுத்த நினைப்பர். ஆனால் இந்த சப்ளிமெண்டுகளை தவறாக பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியம் மோசமாகும் வாய்ப்புள்ளது. அதிலும் ஒருவர் நவீன மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, இந்த மாதிரியான மாத்திரைகளை எடுத்தால், அதனால் இடையூறு ஏற்பட்டு கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருப்பதோடு, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும். எனவே எப்போதும் எந்த ஒரு மாத்திரையை எடுக்கும் முன்பும் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

நீலக்கத்தாழை தேன் (Agave Nectar)

நீலக்கத்தாழை தேன் (Agave Nectar)

ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த நீலக்கத்தாழை தேன் குறித்து ஏற்கனவே தெரிந்திருக்கும். இதை பலர் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்துவார்கள். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு மாற்றாக க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள இந்த தேனைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த தேனில் புருக்டோஸ் ஏராளமான அளவில் இருக்கும். இது ஒருவரது மெட்டபாலிசத்தைப் பாதித்து, பல்வேறு மோசமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக சர்க்ரை நோயாளியாக இருந்தால், நிலைமை மோசமாகும் வாய்ப்புள்ளது. சொல்லப்போனால் நீலக்கத்தாழை தேன் சர்க்கரையை விட மிக மோசமானது. வேண்டுமானால் சுத்தமான மலைத் தேனை வாங்கிப் பயன்படுத்துங்கள். இதில் புருக்டோஸ் மிகவும் குறைவு.

ஸ்போர்ட்ஸ் அல்லது எனர்ஜி பானங்கள்

ஸ்போர்ட்ஸ் அல்லது எனர்ஜி பானங்கள்

விளையாட்டு வீரர்கள் மற்றும் ஜிம் செல்பவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பானங்கள் தான் ஸ்போர்ட்ஸ் அல்லது எனர்ஜி பானங்கள். இந்த பானங்களில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் சர்க்கரை போன்றவை உள்ளது. ஆனால் உடலுக்கு கடினமான உழைப்பு கொடுக்காதவர்களுக்கு இதனால் பலனில்லை. மேலும் இந்த பானத்தில் உள்ள உப்பு மற்றும் சர்க்கரை தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதோடு இவற்றில் உள்ள காப்ஃபைன், ஒருவரது உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உடலின் ஆற்றலை அதிகரிக்க நினைத்தால், தண்ணீர் அல்லது இளநீரைக் குடியுங்கள்.

க்ளுட்டன்-ப்ரீ பொருட்கள்

க்ளுட்டன்-ப்ரீ பொருட்கள்

க்ளுட்டன்-ப்ரீ பொருட்கள் சிலியாக் நோய் அல்லது க்ளுட்டன் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு நல்லது. இருப்பினும் இந்த வகை உணவுப் பொருட்களால் ஒருசில தீமையும் விளையும். பெரும்பாலான க்ளுட்டன் ப்ரீ பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு. பெரும்பாலான சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் க்ளுட்டன் ப்ரீ உணவுகள் அதிக டாக்ஸின்கள் நிறைந்தவையாகும். இந்த வகை உணவுகள் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தும். அதோடு இந்த உணவுகளில் லெட், ஆர்சனிக் மற்றும் மெர்குரி போன்றவை அதிகம் இருக்கும்.

சாலட் ட்ரெஸிங்

சாலட் ட்ரெஸிங்

நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு சாலட் தயாரிக்கப்படுகிறது. ஒருவரது டயட் திட்டத்தில் சாலட் ஓர் ஆரோக்கியமான ஒன்றாகும். ஆனால் இந்த சாலட்டுகளின் மேல் சுகாதார உணவுக் கடைகளில் விற்கப்படும் சாலட் ட்ரெஸிங்கை ஊற்றுவது, சாலட்டின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும் என்பது தெரியுமா?

ஏனெனில் இவற்றில் அதிக கொழுப்பு கொண்ட மயோனைஸ், சோயாபீன் ஆயில் மற்றும் அதிக புருக்டோஸ் கொண்ட கார்ன் சிரப் போன்ற ஆரோக்கியத்தை சீரழிக்கும் பொருட்கள் உள்ளன. அதோடு இவற்றில் பதப்படுத்தப்படுத்தும் பொருட்களும் இருக்கும். வேண்டுமானால் உங்களது சாலட்டின் சுவையை அதிகரிக்க நினைத்தால், எலுமிச்சை சாறு, மிளகுத் தூள், ஆலிவ் ஆயில், மூலிகைகள் போன்றவற்றைத் தூவி சாப்பிடுங்கள்.

பச்சை பால்

பச்சை பால்

கடைகளில் டப்பாக்களில் பால் விற்கப்படுகிறது. இந்த பால்கள் 20 நாட்களானாலும் கெட்டுப் போகாது. நன்கு கெட்டியாக, க்ரீம் போன்று இருக்கும் இந்த பால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இந்த பாலைப் பதப்படுத்தும் முறையில் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நீக்கப்பட்டுவிடுகிறது. எனவே இம்மாதிரியான பாலை வாங்காதீர்கள்.

காது மெழுகுவர்த்திகள்

காது மெழுகுவர்த்திகள்

பெரும்பாலான சுகாதார கடைகளில் காது மெழுகுவர்த்திகள் விற்கப்படுகின்றன. ஆனால் இந்த பொருளை கட்டாயம் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை நீங்கள் இதுவரை இப்படியொரு பொருளை கேள்விப்பட்டதில்லையா? இந்த பொருளானது காது பிரச்சனைகளைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பொருள் காதுகளுக்குள் உள்ள அழுக்கை உறிஞ்சி வெளியேற்றுமாம். ஆனால் இதற்கு எந்த ஒரு நிரூபணமும் இல்லை. எனவே தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Harmful Things You are Buying from Health Food Stores

There can be many products in such stores labeled “natural” and “organic,” but in reality they can be a hazard to your health. Here are some harmful things you are buying from health food stores.
Story first published: Saturday, February 24, 2018, 12:04 [IST]