Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
சனிக்கிழமை எண்ணெய் குளியல் எடுக்கும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சில உணவுகளைத் தவிர்க்கவும், சில உணவுகளை சாப்பிட வேண்டும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சனி நீராடு என்று சொல்லக் கேட்டிருப்போம். அப்படியென்றால் சனிக்கிழமைகளில் கட்டாயம் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்பது பொருள். அப்படி சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது நாம் தினமும் குளிப்பதை விட முற்றிலும் வேறுபட்ட ஒன்று.

இதற்கென சில வழிமுறைகளைக் கையாள வேண்டும். இல்லையென்றால் சிலருக்கு காய்ச்சல் வந்துவிடும். சிலருக்கு தலைபாரம் உண்டாகும். அதனால் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.

எப்படி குளிக்க வேண்டும்?
உள்ளங்கை நிறைய நல்லெண்ணெயை ஊற்றி, அதை உச்சந்தலையில் நன்கு அப்ளை செய்து சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் கை மூட்டு மடிப்புகளிலும் கால் பகுதி, உடல் முழுக்க எண்ணெயை விட்டு நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும்.

என்ன ஷாம்பு
முடிந்தவரையில் எண்ணெய் குளியல் எடுக்கும்பொழுது ஷாம்புவைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அரப்புத்தூள், சீயக்காய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தேய்ப்பது தான் நல்லது. வேறு வழியில்லை என்றால் ஹெர்புல் ஷாம்பு ஏதாவது கொண்டு தலையை அலசினால் போதுமானது.

வெந்நீர்
பொதுவாக குளியலுக்கு குளிர்ந்த நீர் பயன்படுத்துவது தான் உடலைக் குளிர்விக்கும். சுத்தம் செய்யும் என்று சொல்வார்கள். ஆனால் எண்ணெய் குளியல் எடுக்கும்பொழுது கட்டாயமாக வெதுவெதுப்பான வெந்நீரை தான் பயன்படுத்த வேண்டும். வெந்நீர் தான் சருமத்தில் உள்ள துளைகளைத் திறந்து உள்ளேயிருக்கும் அழுக்குகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. அதேபோல், எண்ணெய் குளியல் எடுக்கும் நாளில் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுவதால் உடல் கொஞ்சம் அசதியாகத் தான் இருக்கும். அதனால் அன்று அதிக செரிமானத்துக்கு உட்படுத்தப்படுகிற கடின உணவுகளைத் தவிர்ப்பது மிக நல்லது.

சாப்பிடும் உணவுகள்
காலையில் ஆவியில் வேக வைக்கப்பட்ட எளிமையான, சத்தான இட்லி, இடியாப்பம், தினையரிசிக் கஞ்சி, குழ்வரகுப் புட்டு, அரிசிமாவு புட்டு, ஆப்பம் ஆகியவற்றை சாப்பிடலாம். இதற்கு மசாலா சேர்த்த சைடிஷ் சேர்த்துக் கொள்ளாமல் பனங்கற்கண்டு சேர்த்த தேங்காய்ப் பாலையோ அல்லது பொட்டுக்கடலை சட்னியோ, இஞ்சித் துவையலோ சாப்பிடலாம்.
மதிய நேரத்தில் வரகு அரசி சாதத்துடன் சுண்டைக்காய், மணத்தக்காளி, வெந்தயம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு வத்தக்குழம்பு, மிளகு ரசம், பிரண்டைத் துவையல், கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
இரவில் இட்லி போல லேசான உணவுடன் ஒரு நாட்டு வாழைப்பழம் சாப்பிடுங்கள். தூங்குவதற்கு முன்பாக பாலில் மஞ்சளும் பனங்கற்கண்டும் சேர்த்து குடியுங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
காலையில் பால் குடிக்கும் பழக்கம் கட்டாயம் இருக்கும். அது எண்ணெய் குளியல் எடுக்கின்ற அன்று மட்டும் கட்டாயம் தவிர்த்து விடுங்கள். பால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். எண்ணெய் குளியலின்போது அழுக்குகளை வெளியேற்றுவதை விட்டுவிட்டு நம்முடைய உடல் பொலை செரிக்கும் வேலையை செய்ய ஆரம்பித்துவிடும்.
சிலர் மதியம் தயிர் சாப்பிடுவார்கள். எண்ணெய் குளியல் எடுக்கும்போது நிச்சயம் தயிர் சேர்க்க்ககூடாது. அது சளி பிடிக்கச் செய்யும்.
தலைக்குக் குளிக்கின்ற நாட்களில் நெய், பருப்பு மற்றும் அசைவ உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிட வேண்டும்.
காய்கறிகள் சாப்பிடலாம். ஆனால் அதில் மசாலாவோ தேங்காய் விழுதுகளுா சேர்க்கக் கூடாது. அதனால் புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், மந்தம் ஆகியவை உண்டாகும்.



Click it and Unblock the Notifications