For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மது உயிருக்கு கேடு - வெறும் கட்டுக்கதையா?... ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்... நரேஷ் சொல்லும் ட்ரி

மது, அதிகமாகும்போது, அருந்தும் நபரின் உடல்நலம், அவர் செய்யும் வேலை அல்லது தொழில், குடும்ப வாழ்வு இவை பாதிக்கப்படுகின்றன.

|

"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" என்பது கவியரசு கண்ணதாசனின் பாடல் வரி. மதுப்பழக்கம் பரவலாகிவிட்ட காலகட்டத்தில் வாழ்கிறோம்.

health

மது, அதிகமாகும்போது, அருந்தும் நபரின் உடல்நலம், அவர் செய்யும் வேலை அல்லது தொழில், குடும்ப வாழ்வு இவை பாதிக்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நரேஷ்

நரேஷ்

நரேஷூக்கு 33 வயது (பெயர் மாற்றப்பட்டுள்ளது). "இன்றைக்கு குடிக்கமாட்டேன்," என்ற தீர்மானத்தோடு தான் எழும்புவேன். ஆனால், அலுவலகத்தின் மதிய உணவு சாப்பிடும்போதே, இரவு எந்த பிராண்ட் மதுவை வாங்கிச் செல்லலாம் என்று மனம் யோசிக்க ஆரம்பித்து விடும்," என்கிறார்.

ஒயின்

ஒயின்

"இரவு சாப்பிடும்போது ஒரே ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும் என்று நினைத்தே ஒயின் பாட்டிலை வாங்குவேன். ஆனால், பாட்டிலை திறந்தால் முழுவதும் முடிக்காமல் என்னால் வைக்க முடியாது," என்று கூறும் நரேஷ். ஒயின் இல்லையென்றால் அன்று விஸ்கி அருந்துவாராம். இரவு7 முதல் 10 மணி வரை, அப்படி இப்படி சோபாவில் உட்கார்ந்தபடி, டி.வி. பார்த்தபடி மது அருந்துவது அவரது வழக்கம்.

"மது அருந்தினால் இலேசாக தூக்கம் கண்ணை கட்டுவதுபோல், மயக்கமாக இருப்பதுபோல் உணர்வேன் அவ்வளவுதான். மன அழுத்தத்திற்கென்று நான் சாப்பிடும் மருந்து, மதுவின் போதையை மட்டுப்படுத்தி விடுகிறது என்று நினைக்கிறேன். மது அருந்தினால் வாகனம் ஓட்ட மாட்டேன். பெரும்பாலும் காலையில் நான் மது அருந்தியதன் காரணமாக சோர்வோ, தலைவலியோ இருப்பதில்லை. இடுப்பு சற்று பருத்து, பேண்ட் இறுக்கமாக பிடிக்கிறது என்பதை தவிர வேறு எந்தப் பாதிப்பும் இல்லை" என்பது நரேஷ் விவரிக்கும் அவரது அனுபவம்.

நிறுத்துவது

நிறுத்துவது

ஆனால், மது அருந்துவதை நிறுத்த முடியாததை குறித்த வருத்தம் அவருக்கு இருக்கிறது. "வேறு எதையும் சாப்பிட வேண்டும் என்ற கட்டாய உணர்வு எனக்கு இல்லை. ஆனால், இதை நிறுத்த முடியாதது ஆச்சரியமாயிருக்கிறது," என்றும் அவர் கூறுகிறார்.

மதுப்பழக்கம் உள்ளோர், மனரீதியாக, உடல்ரீதியாக பாதிக்கப்படும் அபாயம் உண்டு என்கிறார்கள் தத்துவம் மற்றும் அடிமைத்தனங்கள் பற்றிய வல்லுநர்கள்.

மதுவைப் பற்றி அமெரிக்க நிறுவனம் ஒன்று, மது அருந்துவதை மறுபரிசீலனை செய்வோம் என்ற அர்த்தம் கொண்ட Rethinking Drinking என்ற இணையதளத்தை வடிவமைத்துள்ளது. மது அருந்தும் பழக்கத்தின் அபாய கட்டங்கள் குறித்து அளவிட்டு அறிந்து கொள்ள இந்த இணையதளம் வழிகாட்டுகிறது.

ஒரு நாளைக்கு

ஒரு நாளைக்கு

சாதாரண பீர் 12 அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் என்பது ஏறத்தாழ 30 மி.லி.) அல்லது 5 அவுன்ஸ் ஒயின் அல்லது 1.5 அவுன்ஸ் ஜின், ரம், வோட்கா, விஸ்கி, டெக்கிலா வகை மதுபானங்கள் அருந்துவதை ஒரு டிரிங் என்று சொல்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 4 டிரிங் அல்லது வாரத்துக்கு 14 டிரிங் அருந்தும் ஆண்கள், ஒரு நாளைக்கு 3 டிரிங் அல்லது வாரத்துக்கு 7 டிரிங் அருந்தும் பெண்கள் குறைவான ஆபத்து கொண்ட லோ ரிஸ்க் குடியர்கள் என்ற வகையில் அடங்குவார்கள். தினசரி அல்லது வாரத்துக்கு இந்தக் கணக்குக்கு அதிகமாக மது அருந்தினால், அபாய கட்டத்தில் நீங்கள் உயர ஆரம்பிப்பீர்கள்.

எப்போது ஆபத்து

எப்போது ஆபத்து

இந்த இணையதள வழிகாட்டல்படி, இரவு தோறும் நான்கு டிரிங்குக்கு அதிகமாக குடிப்பதால், நரேஷ், அதிக ஆபத்து கொண்ட ஹை ரிஸ்க் வகைக்கு வந்து விடுகிறார். சராசரியாக அமெரிக்காவில் பத்தில் ஒன்பது பேர் அருந்தும் அளவைக் காட்டிலும் நரேஷ் அதிகமாக மது அருந்துகிறார். இதுபோன்ற பழக்கம் உள்ளவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர், மதுப்பழக்கத்தினால் பாதிப்படைந்தோராக இருப்பர். காலப்போக்கில் ஈரல் மற்றும் ஏனைய உடல் உறுப்புகளில் பாதிப்பு தோன்ற ஆரம்பிக்கும். மது அருந்துவதை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, மது அருந்தாதபோது எதிர்மறை எண்ணங்கள் எழும் அளவுக்கு இது மூளையில் பாதிப்பை உண்டாக்கும். அமெரிக்காவில் எல்லா வயதினர் மத்தியிலும் அதிகமாக குடிப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சமீபத்தில் அங்கு அரசு நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு காட்டுகிறது.

பெருங்குடி என்னும் பிஞ்ச் டிரிங்கிங்

பெருங்குடி என்னும் பிஞ்ச் டிரிங்கிங்

இரத்தத்தில் ஆல்கஹால் அளவு இரண்டு மணி நேரத்தில் 0.08 ஆக இருந்தால் அந்த நபர் பிஞ்ச் குடியர் என்ற வகையில் அடங்குவார். மேற்சொல்லப்பட்ட கணக்குப்படி, ஐந்து டிரிங் அருந்தும் ஆணும், நான்கு டிரிங் அருந்தும் பெண்ணும் பிஞ்ச் குடியர் ஆவர்.

அமெரிக்காவில் கடந்த பத்து ஆண்டுகளில் 30 வயதுக்கும் மேற்பட்டோரில் பிஞ்ச் குடியர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவதுறை இணை பேராசிரியர் ரிக் குரூக்ஸா கூறுகிறார். 50 முதல் 74 வயதுடையோரில் பிஞ்ச் குடியர் எண்ணிக்கை ஏறத்தாழ 24 சதவீதம் உயர்ந்துள்ளது.

20 முதல் 30 வயதுடையோரில் பிஞ்ச் குடியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிறது என்று மது அடிமைத்தனத்திற்கான அமெரிக்க தேசிய நிறுவனத்தின் இயக்குநர் ஜார்ஜ் கூப் கூறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் பதின்ம பருவத்தினரிடைய மது பழக்கம் மூன்று மடங்கு குறைந்துள்ளது என்பது நல்ல செய்தியாகும் என்றும் அவர் கூறுகிறார்.

மதுவுக்குள் மூழ்கிப்போதல், நம் ஆரோக்கியத்திற்கு நாமே வைத்துக்கொள்ளும் வேட்டு. 2006 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மதுவினால் அவசர சிகிச்சைக்கு வந்தோரின் எண்ணிக்கை 62 சதவீதம் அதிகரித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாவதையும் உள்ளிட்டே இக்கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு பத்து பேர் மது சார்ந்த ஏதாவது ஒரு காரணத்துக்காக அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்று ஆய்வாளர் ஆரோன் ஒயிட் கூறுகிறார்.

லோ ரெஸ்பாண்டர்

லோ ரெஸ்பாண்டர்

"எவ்வளவு சரக்கடித்தாலும் போதை ஏறியதுபோலவே இல்லை" என்று கூறுபவர்கள் லோ ரெஸ்பாண்டர் என்று வகைப்படுத்தப்படுவார்கள். மதுவினால் பிரச்னை நேர ஆரம்பித்துவிட்டது என்று உணர வேண்டிய நிலை இது.

மற்றவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாக மது அருந்த வேண்டிய அளவுக்கு மதுவோடு நெருங்கிய பழக்கம் உடையவர்கள் இவர்கள். இவர்கள் போதையை உணர ஆரம்பிக்கும்போது, மற்றவர்களைக் காட்டிலும் மூன்று டிரிங்க் அதிகமாக குடித்திருப்பர். அமெரிக்க மக்களில் 15 முதல் 20 சதவீதத்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள் என்னும் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் ஸ்கூகிட், மது அருந்தும் பெற்றோரின் பிள்ளைகளுள் இந்த சதவீதம் 40 முதல் 50 ஆக உயர்ந்துள்ளது என கூறுகிறார்.

அலுவலகத்திற்கு தாமதமாக செல்வது, வீட்டில் உள்ளவர்களோடு பிரச்னை எழும்புவது, தூக்கம் வருவதுபோல் உணர்வது, இரவில் தூக்கத்திலிருந்து பாதியில் விழித்துக் கொள்வது, தேவையில்லாமல் டென்ஷன் ஆவது என்று பல்வேறு காரியங்களால் மதுப்பழக்கம் கேட்டினை ஆரம்பித்து விட்டது என்று நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

சுய பரிசோதனை

சுய பரிசோதனை

கீழ்க்காணும் பிரச்னைகளில் எத்தனைக்கு நீங்கள் 'ஆம்' என்று சொல்கிறீர்கள்?

1. முடித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருந்ததை விட அதிகமாக மது அருந்துகிறீர்களா?

2. மது அருந்து பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று ஒருமுறைக்கு மேல் தீர்மானித்து, நிறுத்த முடியாமல் தொடர்கிறீர்களா?

3. மது அருந்துவதில் அல்லது மது அருந்தியதால் ஏற்படும் விளைவுகளால் அதிக நேரம் கழிந்து போகிறதா?

4. வேறு எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல், மது அருந்தியே தீர வேண்டும் என்ற எண்ணம் எழும்புகிறதா?

5. குடும்பத்தை கவனிப்பது, அலுவலக வேலை அல்லது கல்லூரி படிப்பு இவை மது அருந்துவதால் அல்லது அருந்துவதால் ஏற்படும் விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனவா?

6. குடும்பம், நண்பர்களுடன் பிரச்னை உருவாக மது காரணமாகிறது என்று தெரிந்தும் குடிப்பதை தொடர்கிறீர்களா?

7. உங்களுக்கு முக்கியமான அல்லது அதிகம் பிடிக்கும் வேலைகளை, செயல்பாடுகளை மது அருந்துவதற்காக விட்டுக்கொடுக்கிறீர்களா?

8. மது அருந்தும்போது அல்லது அருந்திய பின்னர் நீங்கள் காயமுறத்தக்கதான நிகழ்வு ஒரு முறைக்குமேல் நேர்ந்துள்ளதா?

9. மனச்சோர்வு அல்லது கவலை இவற்றுடன் உடல்நல கோளாறு அல்லது ஞாபக மறதி இருக்கும்போதும் மது அருந்துவதை தொடர்கிறீர்களா?

10. வழக்கத்தை விட அதிகமாக மது அருந்த வேண்டியது நேர்கிறதா அல்லது வழக்கமாக நீங்கள் அருந்தும் மதுவின் அளவு போதாததுபோல் உணர்கிறீர்களா?

11. போதை தெளிந்த பின்னரும் தூங்குவதில் பிரச்னை, நடுக்கம், அமைதியின்மை, குமட்டல், வாந்தி, இதய படபடப்பு, வலிப்பு, இடத்தில் பொருட்கள் இல்லாதது போன்ற உணர்வு ஆகியவை உள்ளதா?

இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு உங்கள் பதில் 'ஆம்' என்றால், உங்கள் பாதிப்பின் அளவு குறைவு என்றும், நான்கு அல்லது ஐந்து கேள்விகளுக்கு 'ஆம்' என்றால், குறிப்பிடத்தக்க அளவு பாதிப்படைந்துள்ளீர்கள் என்றும், ஆறு அல்லது அதற்கு மேலானவற்றுக்கு 'ஆம்' என்பது பதிலானால் மது ஏற்படுத்தியுள்ள பாதிப்பு அதிகம் என்று மனவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

மது அருந்துவதால் எவ்வளவு பாதிப்படைந்திருந்தாலும், பெரும்பாலான பாதிப்புகளை ஏற்ற சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துவதற்கு முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are You a Risky Drinker?

Thirty seconds after your first sip, alcohol races into your brain.
Desktop Bottom Promotion